Tuesday, 21 March 2023

என் பதிவுகள் ஒரு மீள் பார்வை


 என் பதிவுகள்

ஒரு மீள் பார்வை
22032023
வங்கிப்பணி நிறைவுக்குப்பின் எழுதத் துவங்கினேன்
கதை , கட்டுரை, கவிதை என பலவும் எழுதினேன்
வாழ்ந்த ஊர்கள், பணி புரிந்த இடங்கள், சென்ற, பார்த்த இடங்கள் எல்லாம் பற்றி விரிவாக எழுதினேன்
தாய், தந்தை,மருமக்கள் , (ஒரே ஒரு)மைத்துனர் பற்றியும் எனக்குத் தெரிந்தவரை பதிவு செய்தேன்
அத்தாவின் எழுத்துக்கள் (கம்ப இராமயணக் கட்டுரைகள்) வெளியிட்டேன்
ஒரு நிலையில் குரான் படிப்பில் கவனம் செலுத்தியபோது பெரிய பதிவுகளுக்கு நேரமில்லாமல் போகவே
வினா , விடை – ஆங்கிலம், தமிழ், குரான் என வாரத்தில் வினா ஒருநாள் விடை அடுத்த நாள்என்று 6 பதிவுகள்
மிஞ்சியுள்ள ஒரு நாளில் விருப்பம் போல எழுதினேன்
இந்த 2023 ஆம் ஆண்டில் அறிவியல், புதுப்பொலிவில்,, என் சில புதுப்பகுதிகள் சேர்த்ததோடு உங்கள் பதிவுகளையும் வெளியிட்டேன்
இந்தப் புது முயற்சியில் உண்டான குழப்பம் இரண்டு மாதங்கள் வரை நீடித்தது
ஒரு வழியாக குழப்பம் நீங்கி தெளிவு பிறந்தது
ஆனால் ஒரு இறுக்கமான தெளிவாக இருக்கிறது
என் பதிவுகள் மற்றவர்களுக்கு எப்படிஇருந்தாலும் எனக்கு பலவகையிலும் மிகவும் பயனுள்ளதாக தொடர்ந்து இருந்து வருகிறது
ஓன்று நல்ல பொழுது போக்கு ; பொழுது போகவில்லையே என்ற சலிப்பு இது வரை எனக்கு ஏற்பட்டதில்லை
அடுத்து பல செய்திகளைப் படிப்பதனால் மனம் புத்தாக்கம் பெறுகிறது
அத்தாவின் எழுத்துக்களைப் பதிவு செய்தபோதுதான் தமிழ் இலக்கியத்தில் ஓரளவு ஆர்வம் உண்டானது
என் முகம் தெரியாத பல வட்டங்கள் , தளங்களில் ஒரு அறிமுகம் கிடைத்தது இன்னுமொரு பயன்
இருந்தாலும் இப்படி ஒரு tight time table தேவையா என்ற எண்ணம் தோன்றுகிறது
இது பற்றி உங்கள் கருத்துகள், அறிவுரைகள் தெரிவிக்குபடி கேட்டுக் கொள்கிறேன்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
22032023 புதன்
சர்புதீன் பீ
May be an image of text
All reactions:
1

No comments:

Post a Comment