திருமறை குரான்
9:61
10032023
திருமறையின் எந்தப்பகுதியில் இது வருகிறது ?
: பாகம் 9 ( அல் தஃவா ) வசனம் 61.
"(இந்த நபியிடம் யார் எதைச் சொன்னாலும்) அவர் கேட்டுக் கொள்பவராகவே இருக்கிறார் எனக்கூறி நபியைத் துன்புறுத்துவோரும் அவர்களில் இருக்கிறார்கள்; (நபியே!) நீர் கூறும்: “(நபி அவ்வாறு) செவியேற்பது உங்களுக்கே நன்மையாகும். அவர் இறைவனை நம்புகிறார்; (இறை நம்பிக்கை கொண்ட) முஃமின்களையும் நம்புகிறார்; அன்றியும் உங்களில் ஈமான் (உறுதியான இறை நம்பிக்கை) கொண்டவர்கள் மீது அவர் கருணையுடையோராகவும் இருக்கின்றார்;” எனவே எவர்கள் அல்லாஹ்வின் தூதரை துன்புறுத்துகிறார்களோ, அவர்களுக்கு கொடிய வேதனையுண்டு")9:61)
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டு[ப் பெறுவோர்
சகோ
ஹசன் அலி ---முதல் சரியான விடை
ஷிரீன் பாரூக்
சிராஜுதீன்
தல்லத்
பீர் ராஜா
விளக்கம் ஏதும் தேவை இல்லை என நினைக்கிறன்
நபி பெருமானுக்கு தொல்லை கொடுப்பதையே நோக்கமாகக் கொண்ட கூட்டத்தினர் அவரின் நற்பண்புகளிலும் குற்றம் காண்கிறார்கள்
மேலும் அவர்கள் மிகவும் உயர் நிலையில் இருப்பவர்கள் அவர்கள் வந்து விட்டால் மற்றவர்களை ஒதுக்கி விட்டு அவர்கள் பேசசுக்கு முன்னிடம் தரவேண்டும் என்ற வீண் பெருமை வேறு
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
17ஷாபான் (8)1444
10032023 வெள்ளி
சர்புதீன் பீ
vvvvvvvvvvvvvvvwwwwwwvvvvvvwwwwvvvvvvwwwwvvvvvwwwvvvvwwwvvv
“சிதம்பரம் “ பதிவில் சில எளிய வினாக்கள் லேட்டிருந்தேன்
ஒன்று வாட்சப் –தமிழ்ச் சொல் என்ன ?
இரண்டு மெய்ப்புல அறைகூவலர் இந்தத்தமிழ்ச் சொல்லுக்குப் பொருள் என்ன ?
மூன்று பரங்கிப்பேட்டையின்
இன்னொரு பெயர் என்ன
விடைகள்
1 கட் செவி , பகிரி புலனம்
2 உடல் ஊனமுற்றோர் physically handicapped / challenged
3 போர்டோ நோவா , மஹ்மூது பந்தர் ,முத்துக்கிருஷ்ணபுரி
மூன்றுக்கும் சரியான விடை அனுப்பிய
சகோ ஹசன் அலிக்கும் , கணேச சுப்ரமணியத்துக்கும்
இரண்டுக்கு விடை அனுப்பிய சகோ ரவிராசுக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள் நன்றி
பரங்கிபேட்டை –இதுவரை நான் அறியாத
மஹ்மூது பந்தர் ,முத்துக்கிருஷ்ணபுரி
என்ற பெயர்களை அறியச் செய்த
சகோ ஹசன் அலி
வாட்சப் புக்கு பகிரி,புலனம்,என்ற சொற்களை அறியச் செய்த
சகோ கணேசசுப்ரமனியம் , ரவிராஜ் இருவருக்கும் நன்றி
சகோ ரவிராஜ் தன் சிதம்பரம் பள்ளி ,கல்லூரி படிப்பு பற்றியும் துணைவி பரங்கிபேட்டையில் முனைவர் பட்டம் பெற்றதையும் உணர்ச்சி பொங்க நினைவு கூர்ந்தார்
10032023 வெள்ளி
No comments:
Post a Comment