ரமலான் பதிவுகள்
23032023,,
இறைவன் அருளால் புனித ரமலான் மாதம் நாளை (இன்றிரவு) துவங்குகிறது
என்கருத்துகள் சில
ஆயிரம் மாதங்களை விட சிறப்பானது என்று இறைவன் சொல்லும் (சுராஹ் 97) லைலத்துர் கத்ர்இரவு இந்த மாதத்தில் வருகிறது
இஸ்லாத்தின் கட்டாயக் கடமைகள் ஐந்தில் நான்கை இந்த மாதத்தில் நிறைவேற்றலாம்
கடமை (பர்ல்) ஆக்கப்பட்ட 30 நாள் நோன்பை இந்த மாதத்தில்தான்நிறைவேற்ற முடியும்
சக்காத் எனும் தர்மம் ஆண்டு முழுதும் கொடுக்கலாம்
இருந்தாலும் இந்த மாதத்தில் கொடுப்பது சிறப்பானது
அது போல் வாழ்நாள் முழுதும் கடமை ஆக்கப்பட்ட தொழுகை இந்த மாதத்தில் கூடுதல் சிறப்புப் பெறுகிறது
மேலும் இரவுத் தொழுகையான தராவிஹ் தொழுகை இந்த மாதம் மட்டுமே தொழுகப் படு கிறது
இப்படி 3 கடமைகள் நிறைவேறும்போது இஸ்லாத்தின் ஆணி வேரான முதல்கடமை- -
ஈமான் எனும் ஏக இறை நம்பிக்கை மென் மேலும் உறுதி ஆகிறது
கடந்த சில ஆண்டுகள் போல இந்த ஆண்டும் சிறப்புப் பதிவுகள் வெளியிட எண்ணி 30 வினாக்களும் பத்துக்கு மேற்பட்ட வினாக்களுக்கு விடையும் தொகுத்து வைத்திருந்தேன்
இதற்கிடையில் சகோ இ ச பீர் முகமது அனுப்பிய ஒரு செய்தியில் 2021 ஆம் ஆண்டு வெளியிட்ட குரான் சுருக்கப் பகுதிகளை மீண்டும் பதிவு செய்யலாம் என்று கருத்து சொல்லியிருந்தார்
அது ஒரு நல்ல கருத்தாகப் பட்டது . முன்பே யாரோ இந்தக் கருத்தை சொன்னதாய் ஒரு நினைவு
எனவே இறைவன்அருளால் நாளை முதல் அந்தப் பதிவுகள் ஒரு நாளைக்கு ஒரு ( ஜூஸு) பகுதியாக வரும்
புனித ரமலான் மாதத்தின் முழுப் பயனையும் பெற்று இம்மையும் மறுமையும் சிறப்பாக அமைய எல்லாம் வல்ல ஏக இறைவன் நம் அனைவர்க்கும் அருள் புரிவானாக
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
23032023 வியாழன்
சர்புதீன் பீ
______________________________________________________________________________________________________________________________________________
மீள் பார்வை
“நேற்று என் பதிவுகள் பற்றி எழுதியிருந்தேன்
தொடர்ந்து எழுதுங்கள்
நன்றாக இருக்கிறது
பல வகையிலும் பயனுள்ளதாக இருக்கிறது
உங்கள் உடல் நலத்துக்கு ஏற்ப தொடர்ந்து எழுதுங்கள் “
என்று பலவிதமான உற்சாகமூட்டும் கருத்துக்கள் வந்தன
யாரும் எழுத வேண்டாம் என்று சொல்லவில்லை
நான் விட்டாலும் எழுத்து என்னை விடுவதாக இல்லை அந்த அளவுக்கு உடலில், ,மனதில் ஒன்றி விட்டது
இறைவன் அருளால் புனித ரமலான் சிறப்புப் பதிவுகள் நாளை முதல் ஈகைத் திருநாள் வரை தொடரும்
அதன் பின் இறைவன் நாடினால் வழக்கமான பதிவுகள் ஒரு relaxed schedule உடன் தொடரும்
கருத்துத் தெரிவித்து ஊக்கம் அளித்த
சகோ
யாசீன் ,சோம சேகர், நஜிமா பெரோஸ்
ஷர்மதா , கீதா , முத்து ரவி ,
இளங்கோவன் நரசிம்மன் கண்ணன் முருகன்
ஆண்டி கவுண்டர்
அனைவருக்கும் நன்றி
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
23032023 வியாழன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment