Friday, 31 March 2023

திரு மறை சில குறிப்புகள் 9 பகுதி (ஜூசு) 9

 

 

 

 

 

 

 

 

 

 

 





திரு மறை சில குறிப்புகள் 9

பகுதி (ஜூசு) 9

பெயர்காலால் மாளவ்

 

9       Qalal Malao

         துவக்கம் 7:88   7. Al-A'raf Verse 88  நிறைவு 8:17  817. Al-Anfal Verse

0104223

 

1.    (7:85-93)ஷுஐப் நபி அவர்கள் மத்தியன் (Midian) நகர வாசிகளிடம் அனுப்பப்பட்டார்கள் . .பெரிய வணிக மையமாக இருந்த அந்த நகர மக்களிடம் வணிகத்தில் அளவிலும் நேர்மையாக இருங்கள் என்று சொன்ன நபியை அவர்கள ஏளனம் செய்து இவர் பேச்சைக் கேட்டால் நமக்கு வணிகத்தில் இழப்பே ஏற்படும் என்று கிண்டல் செய்தார்கள் .இறுதியில் நில நடுக்கம் அவர்களை ஆட்கொண்டு உருத் தெரியாமல் அழித்து விட்டது

 

2.    7:94-99 இறைவனின் சூழ்ச்சி நம்மையெல்லாம் வந்து அடையாது என அச்சம் இன்றி இருப்பவர்கள மிகப் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும் .

 

3.     

3.முந்தைய கூட்டத்தினர் பலரிடம் இறை தூதர்கள் உண்மை நெறியை விளக்க அனுப்பபட்டா ர்கள் .அவர்கள் உண்மையை ஏற்க மறுத்து விட்டர்கள் .அவர்கள் இதயங்களை இறைவன் மூடி முத்திரை இட்டு விட்டான் (7:102-108)

 

4.மூசா நபிக்கு இறைவன் கொடுத்த அற்புதங்கள் – அவர் கைத்தைடி பாம்பு போல் தோற்றமளித்தது , அவர் கை ஒளி மயமாய்த் தோன்றியது .

 

.கொடுங்கோல் மன்னன் பிர் அவுன் இவற்றை இறை அற்புதங்கள் என ஏற்றுக்கொள்ள மறுத்தான்

.இது மந்திரச் செயல் என்று கருதி மூசாவின் மந்திரத்தை முறியடிக்க , நாட்டில் உள்ள அனைத்து மந்திர வாதிகளையும் அழைத்து இவரைத் தோற்கடித்தல் நீங்கள் எனக்கு நெருக்கமாணவர்களாக ஆகி விடுவீர்கள் என்று சொல்கிறான்.

 

வந்த அந்த மந்திவாதிகள் அனைவரும் தங்கள் கைத்தடிகளை கீழே வீசுகிறார்கள் .

 

 இறைவன் கட்டளைப்படி மூசா தன் கைத்தடியை வீச அது பெரிய பாம்பு போல் தோற்றமளித்து மற்ற அனைத்துத் தடிகளையும் விழுங்கி விட, ஏக இறைவனின் மாட்சிமையை அறிந்து கொண்ட மந்திரவாதிகள் சிரம் தாழ்த்தி அந்த இறைவனை வணங்குகிறார்கள்

 

 .இதனால் சினம் கொண்ட பிர் அவுன் அவர்கள்

அனைவருக்கும் மாறுகால் , மாறு கை வெட்ட ஆணைஇடுகிறான் அவர்களோ ,நாங்கள் உண்மையான இறை வழியில் சேர்ந்து விட்டோம்,. எங்கள் உயிர் அவனிடமே போகும் . என்று சொல்லிவிட்டனர் (7:109-126)

 

5.மூஸா நபியைப் பின்பற்றுபவர்களை சிறுமைப் படுத்துவத்ற்காக அவர் குலத்தின்  ஆண் குழந்தைகளை கொன்று விடுமாறு பிர் அவுன் ஆணை இடுகிறான்

 

. அவனுக்குத் தண்டனையாக இறைவன் நாட்டில் பஞ்சத்தை உண்டாக்குகிறான் . மேலும் வெள்ளப்பெருக்கு, பலவிதமான பூச்சிகள் தவளைகள் படை எடுப்பு, எங்கு பார்த்தாலும் குருதி வெள்ளம் என பல சோதனைகளை இறைவன் அனுப்புகிறான்

 

. தாங்க முடியாத சோதனை வந்து இறங்கும்போது அவர்கள் மூசாவிடம் தங்களுக்காக ஏக இறைவனிடம் வேண்டுமாறு கேட்கிறார்கள் .தங்கள் வேதனை தீர்ந்து விட்டால் மூசா காட்டும் இறைவழியில் சேர்ந்து விடுவதாகவும் வாக்களிக்கிறார்கள் ..வழக்கம் போல் வாக்கை அவர்கள் மீறி விட இறைவன் அவர்களை கடலில் மூழ்கடித்து அழித்து விடுகிறான் (7:127-137)

 

6.மூசாவைப் பின்பற்றுபவர்களை இறைவன் காப்பாற்றி விடுகிறான்

 

7.இறைவன் விதித்தபடி மூசா நாற்பது நாட்கள் தவம் இருந்த பின் இறைவன் அவரிடம் பேசும்போது தாம் இறைவனைக் கான விரும்புவதாய் மூசா சொல்ல தன்னைக் காண்பது இயலாத செயல் என்று சொன்ன இறைவன் – அந்த மலையைப் பாருங்கள் – அது அப்படியே நிலையாக இருந்தால் நீங்கள் என்னைப்பார்க்கலாம் என்று சொல்லிய இறைவன் அந்த மலையின் மீத தன் ஒளியைப் பாய்ச்ச , மலை நொறுங்கி தூளாகி விடுகிறது . மூஸா மூர்ச்சை ஆகி விடுகிறார் .தெளிந்த எழுந்து இறைவனிடம் மன்னிப்புக் கேட்கிறார் மூஸா . பிறகு இறைவன் மூசாவை தன் தூதராக நியமித்து நல்லுரைகளை வழங்குகிறான்

 

8.மூஸா நாற்பது நாள் தவம் இருந்த காலத்தில் அவரைப் பின்பற்றுவோர் வழி தவறி காளைக்கன்றை வணங்கி, இறைவனின் சினத்துக்கு ஆளாகி பின் தவறை உணர்ந்து மன்னிப்பு கோருகிறார்கள் 7:138-156)

 

 

9..மனித குலம் முழுமைக்கும் நபியாக உள்ள முகமது ஸல் அவர்கள் வருகை பற்றி தவ்ராத் இன்ஜீல் வேதங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது (7:157,158)

 

10..சப்பாத் என்னும் ஒய்வு நாளாகிய சனிக்கிழமையில் இறைவன் கட்டளையை மீறி அதிக அளவிலான மீனுக்கு ஆசைப்பட்டு , மீன் பிடிக்கச் சென்று யூதர்கள் இறைவனின் சாபத்துக்கு ஆளாகி குரங்கு போல் மாற்றப்பட்ட நிகழ்வு மீண்டும் சொல்லப்படுகிறது (7:163-168 )

 

11.(7:169-171) இறைவன் எப்போதும் தங்கள் தவறுகளை மன்னிப்பான் என்ற யூதர்களின் பொய்யான நம்பிக்கை பற்றிச் சொல்கிறது

 

12.இறைவனுக்கு மிக அழகான உயர்வான பல பெயர்கள் உள்ளன. அவற்றைச் சரியாக உச்சரித்து அவனை அழையுங்கள் (7:180)

 

13(7:179-181)வழி தவறிய மக்கள் விலங்கு போன்றவர்கள் – இன்னும் விலங்கை விட மோசமானவர்கள்

 

14 .(7:182-188) இறைவனின் மறை மொழிகளை நம்பாதவர்கள் அழிவை நெருங்கிகொண்டிருக்கிறார்கள் . நபியால் கூட அவர்களைக் காப்பற்ற முடியாது

 

15 .(7:189-198) ஒரு உயிரில் இருந்து மனித குலத்தைப் பல்கிப் பெருகச் செய்த அவன் ஒருவனே ஏக இறைவன் .மற்ற எல்லாம் பொய்,

 

16 .(7:199-206 ) பிறர் செய்யும் தவறுகளை மன்னித்து விடுங்கள் ;

 

நீதிக்காகப் பரிந்து பேசுங்கள் ;

அறியாமையில் இருப்பவர்களை விட்டு விலகி இருங்கள்

 

குரான் ஓதப்டும்போது முழு அமைதியுடன் அதற்கு செவி சாயுங்கள்

 

17. (8:1-10) போர் வெற்றிப்பொருட்கள் பிரிக்கப்படுவது பற்றியும் பத்ரு யுத்தம் உண்மைக்கும் பொய்க்கும் இடையில் நடந்த யுத்தம் என்றும் விளக்குகிறது C

 

18 .(8:11-19 எப்படி இறைவன் பத்ருப் போரில் இறை நம்பிகை கொண்டர்வகளுக்கு உதவினான் எனபது சொல்லப்படுகிறது )

 

19 .(8:20-28 ) தங்கள் சுய அறிவால் தீய வழியில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ளதவர்கள் விலங்கினும் கீழானவர்கள் மேலும் அமானிதப் பொருட்களில் எந்த வித மோசமும் செய்யக்கூடாது

 

20 .(8:29-37) தன்னை அஞ்சி நடப்பவருக்கு இறைவன் நேர்வழியைக் காட்டி நல்லது கெட்டதை பிரித்துப் ப்பார்க்கும் அறிவை கொடுப்பாண் .

 

இறைவனை அஞ்சி நடப்பவர்கள் மட்டுமே புனித காபாவின் உண்மையான, சட்டபூர்வமான பாதுகாவலர்கள்

 

இது குரான் ஜூசு

9 ன் சுருக்கமோ, தொகுப்போ, விளக்கமோ இல்லை .சில குறிப்புகள் மட்டுமே குரானைப்ப்படிக்க ஒரு தூண்டுதலாக அமையலாம்

 

குரான் வசனங்களின் கருத்து மட்டுமே சொல்லியிருக்கிறேன் .முழு மொழிபெயர்ப்பு இல்லை

 

நேற்றைய வினா

லூத் சமுதாயத்தினர் எப்படி அழிக்கப்பட்டனர்?

விடை (7:84)”நாம் அவர்கள் மீது கல் மழை பொழியச் செய்து அவர்களை அழித்தோம் -----

 

சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்

சகோ

ஷர்மதா – முதல் சரியான விடை

 

சிராஜுதீன்

 

மனிதகுலத்துக்கு ஒரு எச்சரிக்கை போல இறை கட்டளையை மீறியதால் அழிக்கப்பட்ட  சமுதாயங்கள் பற்றி திரு மறையில் பல இடங்களில் சொல்லப்படுகிறது

 

இன்றைய வினா

கை தட்டுவதும் சீட்டியடிப்பதுமே அவர்கள் தொழுகை

என்ற கருத்துள்ள வசனம் எது?

 

9 ஆம் சகரை நிறைவேற்றிக் கொடுத்த  இறைவனுக்கு நன்றி

 

இந்தப் புனித மாதத்தின் நன்மைகள் அனைத்தும் நம் அனைவருக்கும் நிறைவாகக் கிடைக்க எல்லாம் வல்ல ஏக இறைவன் அருள் புரிவானாக

 

இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்

 

09 ரம்ஜான் (9) 1444

01042023 சனிக்கிழமை

சர்புதீன் பீ

No comments:

Post a Comment