Saturday, 1 April 2023

திரு மறை சில குறிப்புகள் 10 பகுதி (ஜூஸு)10

 





திரு மறை சில குறிப்புகள் 10      

பகுதி (ஜூஸு)10

 

பெயர்  வ அலமு     10Wa A'lamu

         துவக்கம்   8:40 . Al-Anfal Verse40      நிறைவு  9: :92   9:At-Tauba Verse 92

 

02042023

 

1.(8:38-40) நம்பிக்கை இல்லாதோர் மனம் திருந்தி ஏக இறைவனை நம்பினால் அவர்களின் கடந்த காலத் தவறுகள் மன்னிக்கப்படுகின்றன

 

2. (8:46) ஏக இறைவனுக்கும் அவனது திருத் தூதருக்கும் கீழ்ப்படியுங்கள் .உங்களுக்குள் சண்டை சச்சரவுகளைத் தவிர்த்து உறுதியாக இருந்தால் இறைவன் உங்களுக்குத் துணை இருப்பான்

 

3. (8:53) எல்லாம் அறிந்தவனும் எல்லாவற்றையும் செவி மடுப்பவனாகிய ஏக இறைவன் ஒரு சமுதாயத்துக்கு கொடுத்தருளிய நன்மைகளை அந்த சமுதாயம் தங்கள் நடவடிக்கைகளை முற்றிலுமாக தீய வழியில் மாற்றிக்கொண்டால் ஒழிய அந்த நன்மைகளை விலக்கிக் கொள்வதில்லை

 

1.    (8: 59- 64) எதிரிகள் சமாதானத்தை விரும்பினால் அவர்களோடு சமாதானமாகி விடுங்கள் . நபியே உமக்கும் உம் வழியைப் பின்பற்றும் நம்பிக்கையாளர்களுக்கும் இறைவன் போதுமானவன்

 

 

5. (8:70-71 போர்க்கைதிகளை நடத்தும் விதம் பற்றிச் சொல்கிறது

 

6.குரான் ஜஸு எண் பத்தின் இரண்டாம் பகுதியில் வரும் சுராஹ் ஒன்பது அல்தவ்பா பிஸ்மில்லாஹ் (இறைவனின் திருப்பெயரால் ) என்ற சொற்களுடன் துவங்காத ஒரே சூராவாக தனித்து நிற்கிறது

 

இதற்கு பல காரணங்கள் சொல்லபடுகின்றன . இருந்தாலும் நாயகங்கள் தமக்கு வஹி மூலம் இறைவன் அறிவித்த இந்த சூராவை சொல்லும்போது பிஸ்மில்லாஹ் என்று உச்சரிக்கவில்லை ஈன்பதே சரியான காரணம்

 

இந்த சூராவின் வசனங்கள 1-37 ஹிஜ்ரி ஒன்பதாம் ஆண்டில அருளப்பட்டவை

 

ஹுபைதியாஹ் உடன்படிக்கை எதிரிகளின் அத்த மீறலால் முறியடிக்கப்படுகிறது

ஏற்கனவே அபுபக்கர் தலைமையில் ஒரு கூட்டம் புனிதபயணம் போயிருந்தது . வசனங்களின் முக்கியத்துவம் கருதி அவற்றை ஹஜ்ஜில் அறிவிக்க அலி அவர்களை நாயகங்கள் அனுப்பி வைக்கிறார்கள் .வசனங்களை முழுமையாக அறிவிப்பதோடு இன்னும் நான்கு செய்திகளையும் அறிவிக்குமாறு அலிக்குக் கட்டளை இடபடுகிறது

 

அவை – சுவனபதி ஏக இறைவனை நம்பியோருக்கு மட்டுமே

-இறை நம்பிக்கை இல்லாதோர் ஹஜ் எனும் புனிதப்பயணத்தை மேற்கொள்ள முடியாது

 

-ஆடைஇன்றி புனித காபாவை யாரும் சுற்றக்கூடாது

-காலாவதியாகாத ஒப்பந்தங்கள் அவற்றின் கெடு முடியும் வரை மதிக்கப்படும்

 

7.இது பற்றி இன்னும் சில தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள்

 

மக்கமாநகர் இசுலாமியரின் வசமானபிற்கு முதல் ஹஜ் பயணம் ஹிஜ்ரி ஆண்டு எட்டில் பழைய முறையில் நிறைவேற்றப்பட்டது

 

அடுத்து ஒன்பதாம் ஆண்டு இசுலாமியர்கள் தங்கள் முறையிலும் மற்றவர்கள் அவர்கள் வழியிலும் ஹஜ் செய்தார்கள்

 

ஹஜ்ஜதுல் விடா "Hajja-tul- Widaa” என்று சொல்லப்படும் மூன்றவது ஹஜ் பயணம் ஹிஜ்ரி பத்தாம் ஆண்டில் முழுக்க முழுக்க இசுலாமிய முறையில் பெருமான் நாயகம் அவர்கள் தலைமையில் நடந்தது . முந்தைய இரண்டு ஹஜ்களில் நாயகங்கள் பங்கேற்கவில்லை

 

8..[9:11] நம்பிக்கை இல்லாதோர் மனம் திருந்தி இறைவணக்கத்தை நிலை நிறுத்தி சக்காத் எனும் தருமமும் கொடுத்தால் அவர்கள் நம்பிகையாளார்களாய் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்

 

9.[9:18] ஏக இறைவனிலும் இறுதித் தீர்ப்பு நாளிலும் நம்பிக்கை கொண்டு இறைவணக்கம், சக்காத் எனும் தருமம் இரண்டையம் நிலை நிறுத்தி ஏக இறைவனைத் தவிர வேறு யாருக்கும் அஞ்சாமல் இருப்பவர்கள் மட்டுமே இறைவனின் புனித ஆலயத்துக்குச் செல்லவும் அதை பராமரிக்கவும் தகுதியானவர்கள்

 

10.(9:25-27)இறைவனின் உதவி கிடைப்பது இறை நம்பிக்கயாளர்களின் எண்ணிக்கையைப் பொருத்தது இல்லை . அவரகள் நம்பிக்கையின் ஆழத்தை , வலிமையைப்பொருத்தது

 

11. [9:31] மத குருமார்களும் இறை தூதர்களும் வழிபாட்டுக்கு உரியவர்கள் அல்லர்.

 

12.[9:40]

எதிரிகள் நபி பெருமானை கொலை செய்யத் திட்டமிட்டுக் குறித்த அந்த இரவில் நபி பெருமானும் அபுபக்கரும் மக்காவிலிருந்து மதீனாவுக்கு தப்பிச் செலலும் வழியில் Thaur குகையில் மூன்று நாட்கள் தங்கியிருந்தார்கள் . வலை வீசித் தேடிக்கொண்டிருந்த எதிரிகள் கண்ணில் பட்டுவிடுவோமோ என்ற அச்சத்தில் இருந்த அபுபக்கருக்கு நபிகள் ஆறுதல் கூறுகிறார்கள் :” நிச்சயமாக இறைவன் நம்மோடு இருக்கிறான் ..எனவே கவலை வேண்டாம் “

குகை வாசல் வரை வந்த எதிரிகள் உள்ளே வராமல் , எட்டிப்பார்க்காமல் போனது இறையருள் ,இறை அற்புதம்

 

13.[9:44] ஏக இறைவனிலும் இறுதித் தீர்ப்பு நாளிலும் நம்பிக்கை கொண்டோர் ஒரு போதும் இறைவழியில் கடுமையாக உழைக்கத் தயங்க மா ட்டார்கள்

 

 14.(9:60-) சக்காத் எனும் தருமம் பங்கீட்டு முறை

 

15.(9:61—66) இறை தூதருக்கு துன்பம் செய்பவருக்கும் ,மதத்தை பரிகாசம் செய்பவருக்கும் கடுமையான தண்டனை உண்டு

 

16. (9: 67- 72) நம்பிக்கை இல்லாதோருக்கு நரக நெருப்பு எனும் தண்டனை .நம்பிக்கை கொண்டோருக்கு சுவனத்தோட்டம் எனும் பரிசு

 

17. [9:75, 76]

இறைவன் எங்களுக்கு நிறையசெல்வத்தைக் கொடுத்தால் நாங்கள் நிறைய தான தருமம் செய்வோம் என்று சொல்லும் சிலர் இறைவன் அவர்களுக்குத் தன் அருட்கொடையில் இருந்து அள்ளிக்கொடுக்கும்போது தங்கள் சொற்களை மறந்து கருமிகளாக மாறி விடுகிறார்கள்

 

18. [9:84] இறைவன் அவன் தூதர் மேல் நம்பிக்கை கொள்ளாத யாருக்கும் இறை தூதர் இறுதித் தொழுகை நடத்தக் கூடாது

 

 

இது குரான் ஜூசு

10 ன் சுருக்கமோ, தொகுப்போ, விளக்கமோ இல்லை .சில குறிப்புகள் மட்டுமே

குரான் வசனங்களின் கருத்து மட்டுமே சொல்லியிருக்கிறேன் .முழு மொழிபெயர்ப்பு இல்லை .

 

நேற்றைய வினா

கை தட்டுவதும் சீட்டியடிப்பதுமே அவர்கள் தொழுகை

என்ற கருத்துள்ள வசனம் எது?

 

விடை

(8 :35): அப்பள்ளியில் (புனித காபாவில்) அவர்களுடைய தொழுகைஎல்லாம் சீடி அடிப்பதும் கை தட்டுவதுமே தவிர வேறில்லை ----

 

சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்  

 

சகோ  சிராஜுதீன்  முதல் சரியான விடை

ஷர்மதா

 

இன்றைய வினா :

 

சக்காத் பற்றி இந்தப் பகுதியில் வருகிறது

அது பற்றி   ஒரு பொதுக் கேள்வி

உலக அளவில் வழங்கப்படும் சக்காத்தின் தொகை மொத்தம் எவ்வளவு ?

 

பத்தாவது சகரை நிறைவேற்றிக் கொடுத்த இறைவனுக்கு நன்றி

 

  புனித ரம்ஜான் மாதத்தின் முதல் பத்து நாட்கள் ரஹ்மத் எனும் இறையருள் இறங்கும் நாட்கள், வாழ்வின் ஆணிவேராகிய அந்த ரஹ்மத்தை வேண்டி நிறைய  இறைவனிடம் இறைஞ்ச வேண்டும்

 

அடுத்து வரும் இரண்டாவது பத்து இறைவன் பாவ மன்னிப்பை அள்ளி வழங்கும் நாட்கள்

இந்த நாட்களில்  பாவ மன்னிப்புக் கேட்டு கெஞ்ச வேண்டும்

 

இதற்காக பெரிதாக ஒன்றும் ஓத வேண்டியதில்லை

 

وَٱسْتَغْفِرُوا۟ ٱللَّهَ ۖ

 

 

wastaghfirooAllaha

 

வஸ்தgபி(ருல்லாஹ்

  என்று அதிகமாக இறை அச்சத்துடன் ஓதி வர வேண்டும்

 

 

இந்தப் புனித மாதத்தின் நன்மைகள் அனைத்தும் நம் அனைவருக்கும் நிறைவாகக் கிடைக்க எல்லாம் வல்ல ஏக இறைவன் அருள் புரிவானாக

 

இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்

 

10ரம்ஜான் (9) 1444

௦2042023 ஞாயிறு

சர்புதீன் பீ

 

No comments:

Post a Comment