Wednesday, 5 April 2023

திரு மறை சில குறிப்புகள் 14 பகுதி (ஜூசு)14

 





திரு மறை சில குறிப்புகள் 14

பகுதி (ஜூசு)14

 

பெயர் ருபாமா14    Rubama     துவக்கம்  15:1 15. Al-Hijr Verse 1       நிறைவு 16:128 16. An-Nahl Verse 128

06042023

15:14,15) இறைவன் வானத்துக்கு ஒரு வழியைத் திறந்து வைத்து அதில் அவர்கள் நாள் முழுதும் பகல் வெளிச்சத்தில் ஏறினாலும் அவர்கள் இறை நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் . மாறாக ஒரு தீய சக்தி எங்கள் கண்களை கூச வைத்து, பார்வையை மறைத்து விட்டது என்று சொல்வார்கள்

1.     

2.(15:19 -23 ) பூமி பற்றி இறைவன் சொல்வது :

நிலப்பரப்பை விரித்து அதன் மேல் உறுதியான மலைகளை நிறுத்தினோம்.தேவையான அளவிலேயே ஒவ்வொன்றையும் பூமியில் முளைக்க வைத்தோம்

.எல்லோருக்கும் வாழ்வாதாரத்தை வழங்கினோம்

 

(விளைபொருட்கள் ,காற்று, நீர், வெளிச்சம் ,வெப்பம் ,குளிர் ,விலங்குகள் ,சக்தி என ) எல்லாவற்றையும் ஒரு குறிப்பிட்ட அளவிலேயே இறக்கி வைக்கிறோம் .

 

மழை பொழிய வைத்து உங்களுக்கு நிறைய தண்ணீர் கொடுப்பதும் நாமே உயிர் கொடுப்பதும், மரணிக்க வைப்பதும் நாமே

 

3.15:26- -44இறைவன் மனிதனை களிமண்ணிலிருந்து படைத்து உயிரூட்டினான் .

 

அதற்கு முன்பு வெப்பமான (புகை இல்லாத ) நெருப்பிலிருந்து ஜின்னை உருவாக்கினான்.

 

(முதல் மனிதன் ஆதமுக்கு இறைவன் ஆணைப்படி மலக்குமார்கள் சிரம் தாழ்த்தி வணங்கியது, இப்லிஸ் மறுத்தது , இப்லிஸ் வெளியேற்றப்பட்டது .இப்லிஸ் மக்களை வழி கெட வைக்க சூளுரைத்தது எல்லாம் விவரிக்கபடுகிறது . நரகத்துக்கு எழு வாசல்கள் உண்டு எனபது தெரிவிக்கப்படுகிறது

 

4.(15:45- 60) இறைநம்பிக்கை கொண்டு நல்வழி நடப்பவர்களுக்கு சுவனம் நிச்சயம் –

 

குரானில் பல செய்திகள் தேவை, முக்கியத்துவம் கருதி திரும்பத் திரும்ப சொல்லப்படும் . அந்த வகையில் இங்கு இப்ராகிம் நபி, லூத் நபி, லூத் சமுதாயம் முற்றிலும் அழிக்கப் பட்டது போன்ற செய்திகள் (15:61-79) ல்

 

5.15:80-84 பெரிய மலைகளைகுடைந்து வீடுகள் கட்டி மிகப்பாதுகாப்பாக வாழ்ந்து வந்த ஹிஜ்ர் நகர வாசிகள் வழி தவறி நடந்தார்கள இறை தூதர்களை கேலி செய்தார்கள் . ஒரே ஒரு பேரிடி போன்ற முழக்கம் அவர்களை முற்றிலுமாக அழித்து விட்டது

 

6.15:87- எழு சிறப்பான வசனங்கள் கொண்ட அல்ஹம்து சூராவும் , குரானும் இறைவன் வழங்கிய மிகப் பெரும் அருட்கொடையாகும்

 

7.1-9 iஇறைவன் ஒருவனே என்பதை தன் வசனங்கள் மூலம் இறைவன் எடுத்துச் சொல்கிறான் பல வகையான கால்நடைகளை மனிதன் பயன்படுத்தவேஇறைவன் படைத்திருக்கிறான்

 

8. (16:18) மிகவும் கருணை மிக்க இறைவன் அள்ளிக்கொடுத்திருக்கும் நலன்களை மனிதனால் எண்ணிப்பார்க்க கூட முடியாது .

 

9. (16:25) இறை நம்பிக்கை அற்றோர் தங்கள் சுமைகளோடு தங்களால் வழிகெட்டுப் போனவர்கள் சுமையையும் சேர்த்து மிகப்பெரிய சுமையைச் சுமக்க வேண்டியிருக்கும் (16:34) இறை நம்பிக்கை அற்றோர் செய்த தீய செயல்களும் அவர்கள் கிண்டல் செய்தவையும் அவர்களை திகைப்பில் ஆழ்த்தி மேலோங்கி நிற்கும்

 

10. (16:40) இறந்தவர்களை உயிர்ப்பித்தல் முடிகிற செயலா என்று ஐயம் கொள்பவர்களுக்கு இறைவன் சொல்கிறான் “ இறைவன் எதாவது செய்ய விரும்பினால் அவன் செய்யவேண்டியதெல்லாம் : ஆகுக என்று சொல்வதே .: உடனே அது ஆகிவிடுகிறது كُنۡ فَيَكُوۡنُ kun fayakoon

 

11.(16:45) தங்கள் மேல் இறை கோபம், தண்டனை தங்களை ஒன்றும் செய்யாது என்று நம்பிக்கை அற்றோர் உண்மையிலேயே பாதுகாப்பாக உணர்கிறார்களா?

 

12. (16:53, 54) மனிதர்களுக்குக் கிடைக்கும் நலன்கள் ,நன்மைகள் எல்லாம் இறைவன் கொடுப்பவையே. மனிதனுக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்தால் அப்போதும் அவன் உதவிக்கு இறைவனையே அழைக்கிறான். அத்துன்பம் நீங்கியதும் மனிதன் இறைவனை மறந்து நன்றி மறுக்கிறான்

 

13.(16:65) வறண்டு உயிரற்றுக் கிடந்த பூமி மழை பெய்தவுடனே உயிர் பெற்று செடிகள் முளைக்கின்றன. நல்லவற்றை செவிகொடுத்துக் கேட்போருக்கு இதில் இறைவனின் அத்தாட்சி தெளிவாகும்

 

14. (16:68) (வஹி மூலம் )அறிவிக்கப்பட்ட இறைவன் ஆணைப்படி தேனீக்கள் மலைகளிலும் மரங்களிலும் மற்ற இடங்களிலும் கூடு காட்டுகின்றன .அவை எல்லா வகையான பழங்களின் சாறை உறிஞ்சி அவற்றை தம் வயிற்றில் பல நிறங்கள் கொண்ட தேனாக மாற்றுகின்றன .அருமருந்தாக விளங்கும் தேன்இறைவனின் அற்புதத்துக்கு மேலும் ஒரு சான்றாக இருக்கிறது

 

15. (16:74) எல்லாம் அறிந்த இறைவனோடு எதையும் ஒப்பிடாதீர்கள்

 

16. (16:79) நடு வானில் பறக்கும் பறவைகளை விழாமல் பாதுகாப்பவன் ஏக இறைவனைத் தவிர வேறு யாராக இருக்க முடியும் ? இதுவும் இறை அற்புதத்துக்கு ஒரு சான்றாகிறது

 

17. (16:86) தீர்ப்பு நாளில் நம்பிக்கை கொள்ளாதோர் ஏக இறைவன் பற்றிய உண்மையை அறிந்து கொள்வார்கள்

 

18.(16:90) நல்ல ஒரு சமுதாயம் இறை வழியில் உருவாக

நீதியை நிலை நாட்டுங்கள்,

அன்பாக இருங்கள்,

உற்றார் உறவினருக்கு உதவுங்கள்.தீய,

,மானக் கேடான செயல்களிலிருந்து முற்றிலுமாக விலகி விடுங்கள்

 

19. (16:103) நபி பெருமானுக்கு ஒரு மனிதர்தான் குரான் வசனங்களை சொல்லித்தருகிறார் என்று வீண் பழி சுமத்துகின்றனர் .அவர்கள் குறிப்பிடும் அந்த மனிதர் அரபு மொழியர் அல்ல .ஆனால் குரான் மிகத் தெளிவான செம்மையான அரபு மொழியில் இருக்கிறது

 

20. (16:112) வளம் மிகுந்த அந்த நகரம் ,மிகப் பாதுகப்பானாதாகவும் எல்லாவிதமான வாழ்வாதாரங்கள் நிறைய உள்ளதாகவும் இருந்தது . ஆனால் அந்த நகர மக்கள் நன்றி மறந்து , இறைவனின் சினத்துக்கு ஆளாகி விட்டார்கள் .வழி தவறிப்போன மக்களுக்கு வறுமை ஆடைபோல் போர்த்தப்பட்டது . பசியும் அச்சமும் அவர்களை வாட்டியது

 

21.(16:120)இப்ராகிம் நபி ஏக இறைவன் மேல் முழு நம்பிக்கை வைத்தவராய் அவனுக்குப் பணிந்து நடந்தார் ஒரு போதும் அவர் ஏக இறைவனுடன் மற்றவர்களை இணைத்துப்பார்த்தது இல்லை . மொத்தத்தில் அவர் ஒரு முழு சமுதாயமாகத் திகழ்ந்தார்

 

இது குரான் ஜூசு

14 ன் சுருக்கமோ, தொகுப்போ, விளக்கமோ இல்லை .சில குறிப்புகள் மட்டுமே

குரான் வசனங்களின் கருத்து மட்டுமே சொல்லியிருக்கிறேன் .முழு மொழிபெயர்ப்பு இல்லை

 

நேற்.றைய வினா :

சிறு வயதில் யூசுப் நபி கண்ட கனவு என்ன ? அது பற்றி அவர் தன் தந்தையிடம் சொன்னபோது தந்தை சொன்ன மறு மொழி என்ன

விடை

(12:4,5)

ஒரு நாள் யூசுப் தன் தந்தையிடம் வந்து, “தந்தையே! பதினொரு நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும், எனக்கு சிரம் பணிவதாய் கனவு கண்டேன்” என்று கூறினார்.

அதற்கு அவர் தந்தை “என் அருமை மகனே நீ கண்ட கனவை உன் சகோதரர்களிடம் கூறாதே. அவ்வாறு கூறினால் அவர்கள் உனக்கு யாதேனும் தீங்கிழைக்கச் சதி செய்வார்கள் என்று கூறினார்.

 

இன்றைய வினா

 

யாருடைய வழியைப் பின்பற்றுமாறு இறைவன் நபி ஸல் அவர்களுக்கு கட்டளை இட்டான் ?

 

14 ஆவது சகரை நிறைவேற்றிக்கொடுத்த இறைவனுக்கு நன்றி

 

இந்தப் புனித மாதத்தின் நன்மைகள் அனைத்தும் நம் அனைவருக்கும் நிறைவாகக் கிடைக்க எல்லாம் வல்ல ஏக இறைவன் அருள் புரிவானாக

 

இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்

 

14 ரம்ஜான் (9) 1444

06042023 வியாழன்

சர்புதீன் பீ





No comments:

Post a Comment