Friday, 28 April 2023

தமிழ் (மொழி) அறிவோம் குளவி ,குழவி ,குலவி

 





தமிழ் (மொழி) அறிவோம்

 

29042023

 

மூன்றே எழுத்தில் ஒரு சொல்

 

மலரைக் குறிக்கும்

கவனம் இல்லாமல் இருந்தால் கொட்டி விடும்

ஒரு எழுத்து மாறினால் நட்பாகிவிடும்

மீண்டும் அந்த எழுத்தை மாற்றினால் எருமைக் கன்று என்று ஆகிவிடும்

 

அது என்னசொல்  ?

 

விடை

 

குளவி      குழவி       ,குலவி

 

குளவி

1 கொட்டும் பூச்சி

2 காட்டுமல்லிகை   --கரந்தை குளவி கடிகமழ் கலிமா (குறிஞ்சிப். 76).

3  மலைமல்லிகை கூதளங்கவினியகுளவி (புறநா. 168, 12). 5.

குழவி

·       1 குழந்தை

2 மோட்டு எருமை முழுக்குழவி (பட்டினப்பாலை)

எருமையின் முதிர்ந்த கன்றுகள்

3 அம்மிக்குழவி

,குலவி

 மகிழ்வாக, கொண்டாட்டமாக, நட்போடு

 

விடை அனுப்ப முயற்சித்த சகோ

அஷ்ரப் ஹமீதா , நஸ் ரீன்  இருவருக்கும் நன்றி

இறைவன் நாடினால் அடுத்து  சிந்திப்போம்

 

௨௯௦௪௨௦௨௩

29042023 சனிக்கிழமை  

சர்புதீன் பீ

No comments:

Post a Comment