திரு மறை சில குறிப்புகள் 26
பகுதி (ஜூஸு)26
பெயர் ஹா மீம் 26 Ha'a Meem
துவக்கம் 46:1 46.
Al-Ahqaf Verse 1
நிறைவு 51:30 51.
Az-Dhariyat Verse 30
18042023
1. (46:9) நபியே
அவர்களிடம் சொல்லும் “நான் இறைவன் அனுப்பிய முதல் தூதர் இல்லை .
உங்களுக்கும் எனக்கும் நாளை என்ன
நடக்கும் என்று எனக்குத் தெரியாது
.இறைவன் எனக்கு அறிவித்ததை
எல்லோருக்கும் வெளிப்படுத்தி எச்சரிக்கை செய்வது மட்டுமே எனது பணி”
2. (46:15) பெற்றோரை
சீராட்டுவது பிள்ளைகளின் கடமையாகும் .
பிள்ளையை வயிற்றில் சுமப்பது.
பிள்ளைப்பேறு இரண்டுமே மிகவும் வேதனை மிக்கதாகும் .
கருவில் சுமப்பது , பாலூட்டுவது இரண்டும் சேர்ந்து முப்பது
மாதங்களாகும் .
பிள்ளை நாற்பது வயதில் முழு வளர்ச்சி அடைந்து
தனக்கும் தன் பெற்றோருக்கும் இறைவன் அருளிய நன்மைகளுக்காக நன்றி செலுத்துகிறான்
3. 4. (46:24) ஆத்
கூட்டத்தை நோக்கி மேகக்கூட்டம் திரண்டு வந்தபோது அவர்கள் இது மழை மேகம் என்று
நினைத்தார்கள் . ஆனால்
அதுவோ இறைவன் ஆணைப்படி கடும்புயலாக
மாறி அவர்களை முற்றிலுமாக அழித்து விட்டது
4. . (46:35) “நபியே
உமக்கு முந்திய நபிமார்கள் போல் நீங்களும் பொறுமையாக இருங்கள்.
எச்சரிக்கப்பட்ட இறுதி நாளில் அவர்கள்
இந்த உலகில் ஓரிரு மணி நேரமே வாழ்ந்தது போல் உணர்வார்கள் ,
இறைவனை மறுத்தவர்களுக்கு அன்று
வேதனயும் அழிவும் உண்டு
5. (47:2) இறைவன் மேல்
நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள செய்து நபி அவர்களுக்கு இறைவன்
அறிவித்த உண்மை வழியில் செல்வோருக்கு அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு நல்வழி
காட்டப்படும்
6. (47:15)சுவனவாசிகளுக்கு
இறைவன் வழங்கும் அருட்கொடைகள் :
சுவையான சுத்தமான தண்ணீர்
ஆறாக ஓடும் பாலும் தேனும்
அனைத்து கனி வகைகளும் பழச்சாறுகளும்
இவற்றிற்கெல்லாம் மேலான பாவ மன்னிப்பு
இதற்கு எதிராக நரக வாசிகளுக்கு
நெருப்பு, கொதிக்கும் நீர்
7. (47:21) செய்யும்
செயல்கள் நல்லதாக இல்லாவிட்டால் நல்ல சொற்களும், இறை
நம்பிக்கை கொள்வதாய் உறுதி செய்வதும் எந்தப் பயனும் இல்லாமல் வீணாகி விடும்
..8. (47:35) இறை
நம்பிக்கையுடயோர் மனம் தளராமல் அயராமல் உழைக்கவேண்டும்
.இறைவன் உங்களுக்குத் துணை நின்று
உங்களை வெற்றியடையச் செய்வான்
8. (48:10) நபியே
உம்மீது நம்பிக்கை கொண்டு உடன்படிக்கை செய்தோர் இறைவன் மேல் நம்பிகை கொண்டோர்
ஆவர்.
.உடன்படிக்கையை நிறைவேற்றுவோருக்கு
இறைவன் தகுந்த பரிசு கொடுப்பான்
.நிறைவேற்றதவர் தீமையை
தேடிக்கொள்கிறார்
9. (48:17) உடல்
ஊனமுற்றோர், கண் பார்வையற்றோர், உடல்
நிலை சரியில்லாதோர்- இவர்கள்தான் போரிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள்
10. (48:18) நபியோடு உடன்படிக்கை
செய்து கொண்ட நம்பிக்கையாலர்கள் மன நிலை எப்படி இருந்தது என்பதை இறைவன் நன்கு
அறிந்திருந்தான் .எனவே அவர்களுக்கு மன அமைதியையும் வெற்றியையும் அளித்தான்
11. (48:27) நபி
பெருமான் முழு பாதுகாப்புடன் புனித ஆலயத்தில் நுழைந்து அச்சம் எதுவுமிலாமல் தன்
தலை முடி முழுதையுமோ, ஒரு பகுதியையோ அகற்றுவது போல் ஒரு
காட்சியை இறைவன் காண்பிக்கிறான் (விரைவில் அது உண்மையில் நிறைவேறியது)
12. . (49:6)தீயவர்
எவரேனும் ஒரு செய்தி சொன்னால் அதன் உண்மைத்தன்மை பற்றி உறுதிப்படுத்திக்
கொள்ளவேண்டும்,. இல்லாவிட்டால் பின்னர் நீங்கள் வருந்த
வேண்ட்டியிருக்கும்
13. (49:11) நம்பிக்கை
கொண்ட ஆண்களும் பெண்களும் பிறரை ஏளனம் செய்யக்கூடாது. கேலி( பட்டப்)பெயர் சொல்லி
அழைத்து பிறரை கிண்டல் செய்யக்கூடாது
.
14. (50:6) எந்த வித
விரிசல்,இடைவெளி இல்லாமல் எவ்வளவு அழகாக வானத்தை இறைவன்
படைத்துள்ளான் !
15. (50:7) பூமியில்
உறுதியான மலைகளைப் படைத்து அழகான செடிகொடிகளையும் உண்டாக்கினான்
16. (50:16) மனிதனுக்கு
மிக அருகில் – அவனுடைய பிடரி நரம்பை விட அருகில்- இறைவன் இருக்கிறன் . மனிதன்
நினைப்பது அனைத்தயும் அவன் அறிவான்
17. (50:17) ஒவ்வொரு
மனிதனுக்கும் வலப்புறம் ஒன்றும், இடப்புறம் ஒன்றுமாக இரண்டு
வானவர்கள் இருந்து அவர்கள் செயல்கள் சொற்கள் அனைத்தையும் பதிவு செய்கிறார்கள்
.
18. (50:44) தீர்ப்பு
நாளன்று பூமி பிளந்து மக்கள் அதிலிருந்து வெளியேறி இறைவன் முன்
நிறுத்தப்படுவார்கள்.
19. (50:45)நபியே
அவர்கள் எண்ணம் என்பதை இறைவன் அறிவான் .
அவர்களுக்கு குரானின் உரைகளை
எடுத்துச் சொல்லி நலவழிப்படுத்துங்கள்
.
20, (51:56:,57) இறைவன்
தனக்கு சேவை செய்யவே மனிதர்களையும் ஜின்ன்களையும் படைத்தான் .
அவன் அவர்களிடமிருந்து உணவையோ மற்ற
எதையுமோ எதிர்பார்க்கவில்லை
இது குரான் ஜூசு
26ன் சுருக்கமோ,
தொகுப்போ, விளக்கமோ இல்லை .சில குறிப்புகள்
மட்டுமே
குரான் வசனங்களின் கருத்து மட்டுமே
சொல்லியிருக்கிறேன் .முழு மொழிபெயர்ப்பு இல்லை
குரானின் இந்தப்பகுதியில
முதலில் இசுலாத்துக்கு பின்னடைவு போல்
தோன்றினாலும் பின்னாளில்காபாவை வெற்றி கொள்ள ஒரு படியாக இருந்த
ஹுபைதியா உடன்படிக்கை பற்றி வருகிறது
குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும்
காலமும் பாலூட்டும் காலமும் சேர்த்து முப்பது மாதங்கள் என்று சொல்வதில் ஒரு
அறிவியல் அடிபடியில் அமைந்த இசுலாமிய சட்டத் தீர்வு வருகிறது
புனித ஹஜ் பயணத்தில் (ஆண்கள்) தலை முடியை
முழுதாகக் களையாமல் சிறிது வெட்டினால் போதும் என்று சொலலப்படுகிறது
இவை பற்றி இறைவன் நாடினால்
எப்ப்போதவது விளக்கமாகப் பார்ப்போம்
நேற்றைய வினா
பிறரிடம் கலந்தாலோசித்தல்
இறைநம்பிக்கை உடையோரின் பண்புகளில் ஓன்று
என்று சொல்லும் வசனம் எது?
விடை
(42:38) இறைவனுக்கு
அடிபணிதல், பிறரிடம் கலந்தாலோசித்தல் ,தருமம்
செய்தல் அஆகியவை இறை நம்பிக்கையாளர்களின் பண்புகள்
சரியான விடை அனுப்பிய சகோ
ஷர்மதாவுக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்
இன்றைய வினா
“இறைவனுக்கு மனிதன்
உதவினால் “
என்று வரும் வசனம் எது ?
26 ஆவது சகரை நிறைவேற்றிக் கொடுத்த இறைவனுக்கு
நன்றி
இந்தப் புனித மாதத்தின் நன்மைகள்
அனைத்தும் நம் அனைவருக்கும் நிறைவாகக் கிடைக்க எல்லாம் வல்ல ஏக இறைவன் அருள்
புரிவானாக
இறைவன் நாடினால் மீண்டும்
சிந்திப்போம்
26ரம்ஜான் 1444
18 042023 செவ்வாய்
No comments:
Post a Comment