Saturday, 15 April 2023

திரு மறை சில குறிப்புகள் 24 பகுதி (ஜூஸு)24

 

 




திரு மறை சில குறிப்புகள் 24

பகுதி (ஜூஸு)24

 

பெயர்  பமண் அஜ்லம் 24        Faman Azlam

துவக்கம  35:32  39. Az-Zumar Verse 32

நிறைவு 41:46  41. Fussilat Verse 46

16042023

=

1. (39:41) “நபியே உலகமக்கள் அனைவருக்கும் உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த வேதத்தைபின்பற்றி நேர்வழியில் செல்வது அவர்கள் நன்மைக்காவே.

 

வழி தவறியோர் அவர்களுக்கே தீங்கு செய்துகொள்கிறார்கள். அவர்கள் செயலுக்கு நீங்கள் பொறுப்பாக மாட்டீர்கள்”

 

2. (39:42) மறைந்தவர்களின் உயிரை மரண வேளையில் கைப்பற்றிகொள்வதும் உறங்கும்போது உயிருள்ளவர்களின் உயிரைக் கைபற்றிகொள்வதும் இறைவன் செயலே ஆகும்.

 

வாழும் காலம் இன்னும் இருப்பவர்களின் உயிரை அவர்களிடம் திருப்பிக் கொடுத்து விடுகிறான் .மற்றவர்கள் உயிரை அவனே வைத்துக்கொள்கிறான்

 

3. (39:53, 54) இறைவன் கொடுத்த காலக்கெடு முடியுமுன் வழி தவறியவர்கள் மனம் திருந்தி இறைனிடம் சரணடைந்தால் கருணை மிக்க அவன் மன்னித்தருள்வான்

 

4. (39:67:68) தீர்ப்பு நாளன்று இவ்வுலகமுழுதும் வல்லமை மிக்க இறைவனின் பிடியில் இருக்கும்

 

வானங்கள் சுருட்டப்பட்டு அவன் வலது கைக்குள் இருக்கும்

 

எக்காளம் ஒலித்ததும் இறைவன் நாடியவர் தவிர மற்ற அனைவரும் உயிர் நீங்கி விழுவர் .

 

மீண்டும் ஒரு ஒலி ஒலித்ததும் அனைவரும் எழுந்து நிற்பர்

 

5. (39 :71-75 ) தீர்ப்பு வழங்கப்பட்ட பின் வழி தவறியோர் அனைவரும் கூட்டம் கூட்டமாக நரகுக்குக் அனுப்பப்படுவார்கள் .

 

நற்செயல்கள் புரிந்த நம்பிக்கையாலர்கள் சுவனத்தில் நுழைந்து , இறைவனுக்கு நன்றி சொல்லியபடி என்றென்றும் அங்கு இருப்பார்கள்

 

6. (40:3) இறைவன் தண்டிப்பதில் மிகவும் கடுமையானவன் .ஆனாலும் மனம் திருந்தி வருபவர்களுக்கு மன்னிப்பு வழங்கி தன அருளை அள்ளிக்கொடுக்கும் கொடையாளி. அவனிடமே அனைவரும் திரும்பப் போகவேண்டும்

 

7. (40:19)உங்கள் உள்ளங்களில் மறைந்திருப்பதையும் ,நீங்கள் யாருக்கும் தெரியாமல் பார்ப்பதையும் அறிந்து கொள்ளும் இறைவன் ஒருவனே நீதி வழங்கும் வல்லமை உள்ளவன் .

 

8 (40:26) “நான் மூசாவைக் கொல்லப் போகிறேன். அவரை விட்டு வைத்தால் மக்களை மனம் மாற்றி , மதம் மாற்றி குழப்பத்தை விளைவிப்பார் என அஞ்சுகிறேன் “ என்றான் பிர் அவுன்

9

9.(40:28) பிர் அவுன் கூட்டத்தில் இருந்த ஒரு நம்பிக்கையாளர் பிர் அவுனிடம் சொன்னார் “ இறைவனின் சான்றுகளைத் தெளிவாக்கி என் இறைவன் ஒருவனே என்று சொல்வதற்காக அவரைக் கொலை செய்வது சரியல்ல அவர் சொல்வது பொய் என்றால் அந்தப் பொய்யின் விளைவு அவரைத் தாக்கும் .ஒரு வேளை அவர் சொல்வது உண்மை என்றால் நீங்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்”.

 

10 (40:37) மூசாவின் இறைவனை நம்பாத பிர் அவுன், அந்த இறைவனைப் பார்ப்பதற்காக

ஒரு மிக உயரமான கோபுரத்தைக் கட்டும்படி ஹமானிடம் சொன்னான் .

 

பிர் அவுனின் தீய செயல்கள் அவனுக்கு நல்லவையாகத் தோன்றி அவனை அழிவுப் பாதையில் அழைத்துச் சென்றன

 

11 (40:45) பிர் அவுன் கூட்டத்தில் இறை நம்பிக்கை

கொண்டிருந்தவரை இறைவன் பாதுகாத்தான்

.மிகக் கொடிய தண்டனை நம்பிக்கை இல்லாத பிர் அவுன் கூட்டத்தை சுற்றிச் சூழ்ந்து கொண்டது

 

12 (40:57) மனித இனத்தைப் படைப்பதை விட மிகப் பெரும் பணியாகும் வானங்களையும் பூமியையும் படைப்பது என்பது பலரும் அறியாத ஓன்று

 

13 (40:64) அகில உலகுக்கும் உரிமையாளன் இறைவனே.

 

அவன் பூமியை ஒரு வாழுமிடமாக உருவாக்கி வானத்தை அழகிய மேல் கூரையாக ஆக்கினான் .

 

 அவனே மனிதர்களை உருவாக்கி அவர்களுக்கு மிகச் சிறப்பான உருவ அமைப்பைக் கொடுத்தான் .அவர்கள் வாழ்வுக்குத் தேவையான அனைத்தையும் மிகச் சிறப்பாகக் கொடுத்தான்

 

14 (40:78) “ நபியே உங்களுக்கு முன்பு நாம் பல நபிகளை அனுப்பி வைத்தோம் .சிலரின் கதையை உங்களுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறோம் . சிலவற்றை சொல்லாமல் விட்டிருக்கிறோம் .

 

 இறைவன் நாடினால்தான் நபிமார்கள் இறைவனின் சான்றுகளைக் கொண்டு வர முடியும்.

 

.இறைவன் ஆணை வரும்போது தவறான வழியில் சென்றவர்கள் பெரும் இழப்பை சந்திப்பார்கள்

 

15 (40:79) இறைவன் மனிதர்களின் பயன்பாட்டுக்காக கால் நடைகளைப் படைத்தான் அவற்றிலிருந்து உணவு கிடைக்கிறது. பயணம் செய்யவும் பயன்படுகின்றன

 

16 (41:6, 7 ) நபியே சொல்லும் : “ நான் உங்களைப் போன்று மனிதனே . .என் இறைவன் ஒருவனே என்று எனக்கு அறிவிக்கப்பட்டது .

 

எனவே அவனையே வணங்கி அவனிடம் மன்னிப்புக் கேளுங்கள் .

 

 இறைவனுக்கு இணை வைப்பவர்களுக்கும் சக்காத் எனும் தருமம் கொடுக்காதவர்களுக்கும் மறுமையை மறுப்போருக்கும் பெரும் துயரம் காத்திருக்கிறது

 

17 (41:9- 12) இறைவன் இரண்டு நாட்களில் பூமியை உருவாக்கினான்

அடுத்த இரண்டு (நான்கு ) நாட்களில் மலைகளைப் படைத்து அவற்றில் உணவுப் பொருட்களையும் படைத்தான் .

பின்பு அவன் அழைப்பை ஏற்று வானங்களும் பூமியும் நெருங்கி வந்தன.

அடுத்த இரண்டு நாட்களில் ஏழு வானங்களை உருவாக்கி அவற்றிற்குரிய விதிகளை வரையறுத்தான் .கீழ் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தான்

.

18 (41:22) இறைவனுக்குத் தெரியாமல் மறைவாக நீங்கள் செய்ததாய் நீங்கள் நினைத்துக்கொண்டிருந்த தவறுகளுக்கு உங்கள் காதுகளும் கண்களும் தோலும் சான்று பகரும் என்று நீங்கள் நினைத்ததுண்டா ?

 

19 (41:30) ஏக இறைவழியில் உறுதியாக இருப்பவர்களுக்குத் துணையாக இறைவன் வானவர்களை இறக்கி வைக்கிறான் .அவர்கள் சுவனத்தின் வாழ்த்துகளைதெரிவிகிறார்கள்

.

20 (41:42) ஞானமிக்கவனும் புகழுக்குரியவனுமாகிய இறைவன் இறக்கி வைத்த வேதத்தில் முரண்பாடுகள், உண்மையில்லாதவை எதையும் காண முடியாது

 

21 (41:52) இறைவன் கொடுத்த இந்த வேதத்தை நம்ப மறுத்து எதிர்ப்பவர்கள் மிகவும் தவறானவர்கள்

 

 

இது குரான் ஜூசு

24ன் சுருக்கமோ, தொகுப்போ, விளக்கமோ இல்லை .சில குறிப்புகள் மட்டுமே

 

குரான் வசனங்களின் கருத்து மட்டுமே சொல்லியிருக்கிறேன் .முழு மொழிபெயர்ப்பு இல்லை

 

 

குரானின் இந்தப்பகுதியில

வானம் பூமி படைப்பு,

 

மனிதனின் கண்களும் காதுகளும் தோலும் தீர்ப்பு நாளில் பேசுவது

 

என்ற மிக நுட்பமான செய்திகள் வருகின்றன .

 

பின்பு எப்போதாவது இறைவன் நாடினால் இவை பற்றி சற்று விரிவாகப்பார்ப்போம்

 

நேற்றைய வினா

முதுமையில் மனித உருவில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி சொல்லும் வசனம் எது ?

 

விடை

(36:68)

நீண்ட ஆயுளை ஒருவனுக்கு இறைவன் வழங்கினால் அவன் உடலமைப்பு வலிமை அற்றதாய் மாறுகிறது

 

சரியான விடை அனுப்பிய சகோ

 

ஷர்மதாவுக்கு

 

வாழ்த்துகள் பாராட்டுகள்

 

இன்றைய வினா

மனிதன் மனமுடைந்து போகிறான் “

 

இது எந்த வசனத்தில் வருகிறது ?

 

24 ஆவது சகரை நிறைவேற்றிக் கொடுத்த இறைவனுக்கு நன்றி

 

 

இந்தப் புனித மாதத்தின் நன்மைகள் அனைத்தும் நம் அனைவருக்கும் நிறைவாகக் கிடைக்க எல்லாம் வல்ல ஏக இறைவன் அருள் புரிவானாக

 

24ரம்ஜான் (9) 1444

16 042023 ஞாயிறு

சர்புதீன் பீ

 

 

 

No comments:

Post a Comment