Tuesday, 25 April 2023

சுண்டலும் (த)ப்பாக்கியும்

 




சுண்டலும்  (த)ப்பாக்கியும்

 

வங்கி வாசலில் வடிவேலு

அருகில் இரு உதவியாளர்குள்

 

வங்கியைக் கொள்ளையடிக்க வந்ததாகச் சொல்லும் வடிவேலுவை வியப்பு கலந்த மரியாதையுடன் பார்த்து புகழ்கிறார்கள் உ க்கள் இருவரும்

 

கெத்தாக வங்கியுள் நடைபோடும் வ வேலுவை அவர் நடை பேங்க் MT நடைபோலிருக்கிறது என்று சொல்லி தலையில்  அடி வாங்கிக் கொள்கிறார ஒரு உ

 

கெத்து சற்றும் குறையாமல் வங்கியில் இருந்து ஒரு தாளை எடுத்து , வங்கி மேலாளரின் பேனாவையே எடுத்து எழுதி மேலாளரிடம் கொடுத்து விட்டு வீரப் பார்வை பார்கின்றார் வ வே

இனிமேல்தான் நாடகம் துவக்கம்

மேலாளர் சற்றும் பதற்றம் இல்லாமல் வ வேலு கொடுத்த தாளைப் படித்து விட்டு தன் இரு பக்கமும் இருக்கும் அதிகாரிகளிடம்  அதைக் காண்பித்து விட்டு மிக பவ்யமாக

Excuse me என்று வ வேலை அழைத்து அவர் எழுத்தில் உள்ள பிழைகளை சொல்கிறார்

வெள்ளைக்காரன் (கொள்ளைக்காரன்) பாக்கு (பேங்க் )

சுண்டல் (பண்டல்) தப்பாக்கி (துப்பாக்கி)

இப்படி ஒவொன்றாக எடுத்து சொல்ல வ வேலுவின் முகம் மாறிக்கொண்டே வருகிறது

பிழை இருந்தால் என்ன ? எவ்வளவு பிழையோ அதை கழித்துக்கொண்டு மீதியைக் கொடுங்கள் என்று கெஞ்சும் தருமியின் நிலைக்கு வந்து விடுகிறார்

பதற்றத்தில் துப்பாக்கியைக் காண்பிக்கிறார் , பல்லை நறநறவென்று கடித்து அச்சுறுத்த முயல்கிறார்

 

ஆனால் மேலாளர் சற்றும் பதறாமல் “ ஒரு நல்ல வக்கீலைப் பார்த்து பிழையில்லாமல் எழுதிக் கொண்டு வாருங்கள் “

என்று சொல்லி விட்டு வெளியே கிளம்புகிறார்

 

நிலை குலைந்த போன வ வேலுவை உ க்கள் இருவரும் தள்ளி விட்டு விட்டு வெளியே வருகிறார்கள்

இது எலி படத்தில் வரும் நகைசுச்வை காட்சி

எனக்கு மகவும் பிடித்த காட்சி

நகைச்சுவை என்பதைத் தாண்டி பல உளவியல் பாடங்கள் இதில் இருகின்றன

திருவிளையாடல் படம் – மறக்க முடியாததருமி சிவாஜி உரையாடல்

இதில் முழுக்க முழுக்க சிவாஜியின் கம்பீர தோற்றம் தருமியின் ஏழ்மை உருவில் மறைந்து விடும்

 

அதே போல் இங்கும் நன்கு தெரிந்த வ வேலுவின் முகம் அதிகம் அறியப்படாத மற்ற மூவருள் கரைந்து மறைந்து விடுகிறது

நம்ப முடியாத நிகழ்வுதான்

ஆனால் அந்த மேலாளரின் நிதானம் , பொறுமை எதிராளியை நிலை குலைய வைக்கும் அமைதி ---எதிரியின் உதவியாளர்களை தனக்கு ஆதரவாக பேச வைக்கும்தந்திரம் ----- நடிப்பில் ஒரு புதிய பரிமாணம்

பலரும் கற்றுக்கொள்ளவேண்டிய உளவியல் பாடம்

 

தலைவனின் வீரத்தை வியந்து பாராட்டும் அதே உதவியாளர்கள் தவறு செய்து சறுக்கி விட்டான் அவன் என்றதும் பார்க்கும் ஏளனப் பார்வை , மூஞ்செலி மாதிரி இருக்கிறது என்று விமர்சிப்பது எல்லாம்  நமக்குக் கற்றுத்தரும் பாடம் ---

 

நாடோ அரசியலோ ,நிறுவனமோ, குடும்பமோ தலைவன் என்பவன் சாதிக்கும் வரை ஒரு ஹீரோதான்

 

அந்த ஹீரோ இமேஜ் கொஞ்சம் சறுக்கினாலும் அது மீள முடியாத வீழ்ச்சியாகும்

 

ஒரு மாதம் குரானிலேயே உலவி வந்த நீ ஏன் இப்படி ஒரேடியாக தொலைக்காட்சி , திரைப்படத்தில் இறங்கி விட்டாய் என்று நீங்கள் உரக்க சிந்திப்பது என் காதில் விழுகிறது

 

என்ன செய்வது , எல்லாவற்றிற்கும் ஒரு இடை வேளை, ஒரு மாறுதல் தேவைப்படுகிறது

 

இறைவன் நாடினால்  நாளை வழக்கமான குரான் பதிவில் சிந்திப்போம்

26042023புதன்

சர்புதீன் பீ

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment