திரு மறை சில குறிப்புகள் 17
பகுதி (ஜசுஸு)17
பெயர் அக்தரபு 17 aqtarabo
துவக்கம் 21 :1
21. Al-Anbiyaa Verse 1
நிறைவு 22:78 22. Al-Hajj Verse 78
09042023
முன்
குறிப்பு
ரம்ஜான்
பிறை 17 பத்ருப்போர் நினைவு தினமாகும்
இஸ்லாத்தில்
முதல் போர், முத்ன்மைபோர்
போர்
பயிற்சி ,பழக்கம் இல்லாத சிறிய இஸ்லாமியர் படை
பயிற்சி
படை பலம், ஆயுத பலம் வாகன வசதி என எல்லாவற்றிலும் பன் மடங்கு உயர்ந்த எதிரிப்படை
முதன்
முதலாக இறைவன் கட்டளைப்படி நோன்பு நோற்ற இஸ்லாமியர்கள்
இப்படி
எந்த வகையிலும் வெற்றிக்கு வாய்ப்பில்லாத ஒரு படை
அவர்களிடமிருந்த
மிகப்பெரும் ஆயுதம் தளராத உறுதியான இறை நம்பிக்கை
இறைவன்
கட்டளை இடுகிறான், நபி பெருமான் அதை எடுத்துரைக்கிறார்கள்
இதற்குமேல்
என்ன வேண்டும் என்று புறப்பட்டு விட்டார்கள்
இந்த
தளராத, உறுதியான இறை நம்பிக்கிகைக்கு கிடைத்த
பரிசுதான் பத்ருப்போரின் இறை அற்புதமான வெற்றி
வெற்றியைத்
தருவது இறைவன், நம் இறை ம்பிக்கை என்ற மாபெரும் உண்மையை உலகுக்கு , நமக்கு
எடுத்துரைக்கும் சான்று பத்ருப்போர்
17 |
Aqtarabo |
1.21:1-10தீர்ப்பு நாள்
,நெருங்கிக்கொண்டே இருக்கிறது . ஆனால் நம்பிக்கையற்றோர்
அதைப்பற்றி சிந்திக்காமல் இன்னும்
எப்படி நம்மைப்போன்ற ஒரு மனிதர் நபியாக இருக்க
முடியும் என்ற தர்க்கத்தில் பொழுதை வீணடிக்கிறார்கள்
2. 2111-29 தவறு செய்த
பல முந்திய சமுதாயங்கள்அழிக்கப்பட்டன . உண்மை பொய்யைஅழித்து விடுகிறது . உண்மை,
சத்தியத்தின் அடிப்படையில் படைக்கபட்ட வானங்களும் பூமியும் வெறும்
விளையாட்டு அல்ல
3.(21:22) ஏக இறைவன்
தவிர வேறுதெய்வங்கள் இருந்திருந்தால் வானமும் பூமியும் கட்டுப்பாடு இல்லாமல்
அழிந்து போயிருக்கும்
4.இறைவனின் தூதர்கள்
அனைவர் மூலமும் இறைவன் அனுப்பிய செய்தி ஒன்றே ஒன்றுதான் “ என்னைத்தவிர
வணக்கத்துக்குரியவன் வேறு யாரும் இல்லை”
5. (21:30) இறைவன்
சொல்கிறான் “ வானம், பூமி எல்லாம் ஒன்றாக இணைந்து இருந்தது
நாமே அவற்றை தனித்தனியாகப் பிரித்து
வைத்தோம் . தண்ணீரில் இருந்தே எல்லா உயிர்களையும்நாம் படைத்தோம்
(6.21:35)
ஒவ்வொரு உயிரும் மரணத்தை சுவைத்தே ஆகவேண்டும் .நல்லது கெட்டது
கொண்டு உயிர்களை இறைவன் சோதிப்பான் .இறுதியில் அவனிடமே எல்லோரும் திரும்பி
வரவேண்டும் “
7. (21:48) மூஸாவுக்கு
இறைவன் அனுப்பிய வேதம் நன்மை தீமைகளைப் பிரித்துக் காண்பிக்கும் வழி காட்டும்
ஒளியாகவும் ,நல்ல நினைவூட்டலுமாக இருந்தது
8.(21:72:90)-இறைவனின்
அருளும் ஆசியும் பெற்ற நபிமார்கள் பற்றிய செய்திகள் சுருக்கமாக
(21:69): தீக்குண்டத்துக்குள்
எறியப்பட்ட இப்ராஹிமை இறைவன் தீயைக் குளிர்வித்துக் காப்பாற்றினான்
(21:72)இப்ராகிம்,
அவர்மகன் இஷாக் ,பேரன் யாகூப் அனைவரும்
நபிமார்கள்
(21:74) லூத் நபிக்கு
ஞானம் வழங்கியது ,
(21:76)நுஹ் நபியை
துயரத்தில் இருந்து மீட்டது
தாவூத்,
சுலைமான் ,அயுப் இஸ்மாயில் , இத்ரீஸ், துல்கிபல் ,யூனுஸ், ஜக்கரியா ஆகியோருக்கு இறைவன் வழங்கிய சிறப்புகள்
(21:91) மேன்மையும்
ஒழுக்கமும் கொண்ட மரியம் அவர்களுக்கு இறைஅற்புதத்தின் சின்னமாக ஒரு ஆண் குழந்தை
பிறந்தது
9.(21:92:93) மனித இனம்
ஒன்றே குலம் , ஒருவனே இறைவன் என்ற அடிப்படையில் படைக்கபட்டது
.
மனிதர்கள் அதை பல பிரிவுகளாக்கி விட்டார்கள் .
ஆனால் இறுதியில் அனைவரும் ஒரே
இறைவனிடமே போய்ச் சேரவேண்டும்
10.(21:107) உலக
மக்களுக்கு இறைவன் தன் கருணை ஒன்றையே அனுப்பி வைக்கிறான்
11.(22:1) மனிதர்களே
இறைவனை அஞ்சிக்கொள்ளுங்கள்.
தீர்ப்பு நேரத்தின்அதிர்ச்சி
மிகப்பெரும் நிகழ்வாகும்
12. (22:11) மனதில்
உறுதி இல்லாமல் இறைவனை ஒரு ஓரமாக வைத்து வணங்குபவர்கள் சிலர் இருகிறார்கள்.
அவர்களுக்கு நல்லது நடந்தால் இறைவனிடம் திருப்தி
அடைகிறார்கள் .
தீங்கு ஏற்பட்டால் உடனே இறைவன்
பக்கத்தை விட்டு முகத்தைத் திருப்பிகொள்கிறார்கள்
. இப்படிப்பட்டோருக்கு இம்மையிலும்
மறுமையிலும் இழப்புதான்
13. (22:25) இறைவனின் புனித
ஆலயம் உலகில் உள்ள நம்பிக்கை கொண்டோர் அனைவருக்கும் பொதுவானது .
அவர்கள் வருவதைத் தடுப்போர் இறைவனின்
கோபத்துக்கு ஆளாவார்கள்
(22 26-30 இறைவன் நபி
இப்ராஹிமுக்கு புனித ஆலயம் இருக்க வேண்டிய இடத்தைக் காண்பித்து , அங்கு ஆலயம் கட்டவேண்டியும் .உலக மக்களை புனிதப் பயணத்துக்கு அழைக்க
வேண்டியும் ஆணையிடுகிறான்
14. (22:37) நீங்கள்
பலி கொடுக்கும் விலங்குகளின் சதையோ குருதியோ இறைவனை சென்றடிவதில்லை
.உங்கள் உள்ளத் தூய்மையுடன் கூடிய
பக்தி மட்டுமே அவனை சென்று சேரும்
15. (22:41) இறைவனின்
அனுமதியோடு பூமியில் தொழுகை ,சக்காதை நிலை நிறுத்தி, தீயவற்றை விலக்கி நல்ல செயல்களில் ஈடுபடுவோருக்கு இறைவன் நல்ல சிறப்பான வாழ்வை
கொடுப்பான்
16. (22:47)இறைவனின்
ஒரு நாள் என்பது மனிதர்கள் கணக்கில் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒப்பானது.
இதை அறியாத நம்பிக்கை இல்லாதோர் ஏன்
இறைவனின் தண்டனை விரைந்து வாரவில்லை என்று கேலி பேசுகின்றனர்
17.(22:54)கல்வி ஞானம்
உள்ளவர்கள் திருமறை பற்றிய உண்மையை உணர்ந்து ,முழு நம்பிக்கை
கொள்வார்கள்
18.(22:64) வானங்கள்
பூமியில் ் உள்ள அனைத்தும் இறைவனுக்கே உரியன.
புகழுக்கு உரியவன் அவன் மட்டுமே .அவன்
தன்னிறைவு பெற்றவன்
19.(22:70) வானங்கள்
பூமியில் உள்ள அனைத்தையும் இறைவன் அறிவான் .எல்லாம் தெளிவாக பதிவு
செயப்பட்டிருக்கிறது ,
இது குரான் ஜூசு
17ன் சுருக்கமோ,
தொகுப்போ, விளக்கமோ இல்லை .சில குறிப்புகள்
மட்டுமே
குரான் வசனங்களின் கருத்து மட்டுமே
சொல்லியிருக்கிறேன் .முழு மொழிபெயர்ப்பு இல்லை
குரானின் இந்தப்பகுதியில் நபிமார்கள்
பற்றியும், புனிதப்பயணம்
பற்றியும் வருகிறது
மேலும் வானம் பூமி எல்லாம் ஒன்றாக
இருந்தது ( ஸ்ப்ளிட் தியரி) , நீரிலிருந்தே உயிரினங்கள் உண்டாகின எனும் அறிவியல்
உண்மைகளும் சொல்லாப்படுகின்றன
நேற்.றைய வினா
கடலையும் குரானையும் தொடர்பு
படுத்தும் வசனம் எது ?
விடை
(18:109) இறைவனின்
பெருமை,மாட்சிமை பற்றி எழுத வேண்டும் என்றால் கடல்கள் அளவு
மையும் போதாது
சகோ ஷர்மதா அனுப்பிய 20: 77 ஓரளவு
சரியான விடை
வாழ்த்துகள் பாராட்டுகள்
இன்றைய வினா
“இறைவன் ,பற்றி அவர்கள் சரியாக கணிக்கவில்லை “
என்ற பொருள் படும் வசனம் எது ?
17 ஆவது சகரை நிறைவேற்றிக் கொடுத்த்
இறைவனுக்கு நன்றி
இந்தப் புனித மாதத்தின் நன்மைகள்
அனைத்தும் நம் அனைவருக்கும் நிறைவாகக் கிடைக்க எல்லாம் வல்ல ஏக இறைவன் அருள்
புரிவானாக
இறைவன் நாடினால் மீண்டும்
சிந்திப்போம்
17 ரம்ஜான் (9) 1444
09 04 2023 ஞாயிறு
சர்புதீன் பீ
No comments:
Post a Comment