Thursday, 27 April 2023

திருமறை குரான் சூராஹ் 112

 

 





திருமறை குரான் 112 

 

 

28 042023

 

 

சூராவில் இல்லாத ஒரு சொல்லைத் தலைப்பாகக் கொண்ட சூராஹ் எது ?

 

விடை

 

சூராஹ் 112 அல் இக்லாஸ்

 

சரியான விடை எழுதி வாழ்த்து, பாராட்டுப் பெறுவோர்

 

சகோ

ஷிரீன் பாருக் – முதல் சரியான விடை

 

தல்லத் – இவர்  அனுப்பிய விடை அல் பாத்திஹா

 

ஷர்மதா

 

விளக்கம்

 

குரான் சூரக்களுக்கு ஒரு மிக எளிய முறையில் தலைப்புக் கொடுக்கப்படுகிறது

 

சூராவில் வரும் ஏதாவது ஒரு சொல் பெயராகக்  குறிப்பிடப்படுகிறது

 

எடுத்துக்காட்டு

சூராஹ் 16 அன்நஹ்ள் –தேனீ

இந்த சூராவில் ஓரிரு இடங்களில் தேனீ என்ற சொல் வரலாம் மற்றபடி இது தேனீ பற்றிய சுராஹ் அல்ல

 

இதற்கு விலக்காக

 

சுராஹ் 112  அல்    தவ்ஹீத் என்றும் , அல் இக்லாஸ் என்றும்

தூய்மையை, இறைவனின் ஒருமையைக் குறிக்கும் சொற்களால் அறியப்படுகிறது

 

இந்த இரண்டும் சூராவில் இடம்பெறாத சொற்கள் l

 

4 வரிகள் கொண்ட இந்த சூராஹ் குரானின் சுருக்கம் என்றும் குரானில் 1/3  பகுதி என்றும் சொல்லப்படுகிறது

 

 

 

குல்ஹு வல்லாஹு அஹது

அல்லாஹு சமது

லம் யளிது வலம் யூளது

வலம் ய குல அவுது குபுவன் அஹது

 

சுராஹ் 112 

 

 

“(நபியே!) நீர் கூறுவீராக: இறைவன்  அவன் ஒருவனே.

 

இறைவன்  (எவரிடத்தும்) தேவையற்றவன்.

 

அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை

 

அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. “

 

இந்த நான்கு வரிகள் இறைவன் என்பதற்கு ஒரு வரையறையாக (Definition ) விளங்குகின்றன

 

குரானின் துவக்கத்தில் முன்னுரை போல் வரும் அல் பாத்திஹா சூரா குரானின் சுருக்கப் பதிவாகப் பார்க்கப்படுகிறது

 

எந்த வணக்கம் வழிபாடும் இது ஓதாமல் நிறைவேறாது

 

 

 

 

 

 

இறைவன் நாடினால் அடுத்து  சிந்திப்போம்

 

07 ஷவ்வால் 1444

28042023 வெள்ளி 

சர்புதீன் பீ

No comments:

Post a Comment