திரு மறை சில
குறிப்புகள் 22
பகுதி (ஜுசு)22
பெயர வமன்யக்னட் 22 Wa Manyaqnut
துவக்கம் 33:21 33. Al-Azhab Verse 31
நிறைவு 36:27 36.
Ya-Sin Verse 27
14042023
1. (33:32)நபி
பெருமானின் மனைவியர் மற்ற பெண்களில் இருந்து மாறுபட்டவர்கள் .ஆண்களுடன் பேசும்போது
அவர்கள் மனதில் தீய ஆசைகளைத் தூண்டும்படி பேசாமல் மிக நல்லமுறையில் நேரடியாக
(வெட்டு ஓன்று துண்டு இரண்டு என்பது போல) பேச வேண்டும்
{
2. (33:36) இறைவனும்
இறை தூதரும் செய்த ஒரு முடிவில் தலையிடும் உரிமை யாருக்கும் கிடையாது
3. (33:50-52) நபி
பெருமான் திருமணம் செய்து கொள்வது பற்றிய விதிகள்
4. (33:53) நபி
பெருமான் அவர்கள் வீட்டுக்குள் அனுமதியின்றி யாரும் போகக்கூடாது .
சாப்பிட அழைக்கப்பட்டால் சரியான
நேரத்தில் போயசாப்பிட்டுவிட்டு உடனே திரும்பி வந்து விட வேண்டும்
.நபி பெருமான் சங்கடப்படும் அளவுக்கு
வீண் பேச்சு பெசிக்கொண்டிருக்கக் கூடாது
5. நபியின் மனைவியரிடம்
பேச வேண்டியிருந்தால் திரைக்குப்பின்னாலிருந்தே பேச வேண்டும் .
நபி அவர்கள் காலத்துக்குப்பின்
அவர்கள் மனைவியரை மணம் புரிய யாருக்கும் உரிமை இல்லை
6. (33:56) வானவர்களும்
இறைவனும் நபி பெருமானை வாழ்த்துகிறார்கள் .
நம்பிக்கை உடையோர் இறைவனின்
சாந்தியும் சமாதானமும் நபி மேல் உண்டாக வாழ்த்தவேண்டும்
7. (33:59) பெண்கள்
தங்கள் மேலாடைகளால் உடலை நன்றாக மறைத்துக்கொள்ள வேண்டும் .
இது அவர்களுக்குப் பாதுகாப்பு
கொடுக்கும்
இது இறைவன் ஆணை
8. (34:9) வானங்களும்
பூமியும் மக்களை முன்னும் பின்னும் சுற்றிச் சூழ்ந்து நிற்கிறன. .
இறைவன் நாடிவிட்டால் பூமி அப்படியே
அவர்களை விழுங்கி விடும் ; வானம் உடைந்து
அவர்கள் மேல் விழுந்து விடும்
..இவை இறைவனின் மாட்சிமைக்கு
சான்றாகும்
9. (34:14) சுலைமான்
நபியின் கைத்தடியை கரையான் அரித்து அவர் கீழே சாய்ந்தபோதுதான் அவர் மரணம் பற்றி
ஜின்கள் அறிந்து கொண்டன.
மறைவானவை பற்றி இறைவன் மட்டுமே
அறிவான் என்பதற்கு இது ஒரு சான்று
10. (34:1516),) சபா
நகர மக்களுக்கு அழகிய பூமியையும் தோட்டங்களையும் இறைவன் கொடுத்திருந்தான் .
அவர்கள் தீய வழியில் சென்றதால் ஒரு
வெள்ளம் வந்து அவர்கள் வளங்கள் எல்லாம் அழிந்து போயின
..தோட்டங்கள் முட்செடிகளும் கசப்பான
கனி மரங்களும் நிறைந்ததாய் மாறி விட்டது
11. (34:23) இறைவன்
அனுமதியின்றி யாரும் அவனிடம் யாருக்காகவும் பரிந்து பேச முடியாது .
அவன் மிகவும் மகத்தானவன்
12. (34:28) நபி
பெருமான் மனித குலம் முழுதுக்கும் ஒரு எச்சரிக்கை செய்பவராகவும் நல்ல செய்திகள்
சொல்லும் தூதுவராகவும் இருப்பதை பலரும் அறிவதில்லை
13. (34:37) உங்கள்
செல்வச் செழிப்போ மக்கள் பேறோஉங்களை இறைவனுக்கு நெருக்கமாக்குவதில்லை.
மாறாக நற்செயல் புரியும்
நம்பிக்கையாளர்களுக்கு மறுமையில் அழகிய மாளிகைகளில் நிம்மதியான வாழ்வு உண்டு
14. (34:39) செல்வங்களை
வாரி வழங்குவதோ, குறைத்துக் கொடுப்பதோ இறைவன்
நாடியபடியேதான்.
.கொடை வள்ளலாகிய அவன் நீங்கள் நல்வழியில் செலவழிக்கும்
அனைத்தையும் திருப்பிக் கொடுத்து விடுவான்
15, (34:51:52) தீர்ப்பு
நாளின் கடுமைகள் நெருங்கி வரும்போது நம்பிக்கைஇல்லாதோர் அனைவரும் நம்பிக்கை
கொண்டோராக மாற விரும்புவார்கள் . .
ஆனால் அவர்க்ளுக்குக் கொடுத்த
காலக்கெடு முடிந்து விட்டதால் அவர்கள் தப்பிக்க முடியாது
16. (35:2) மிகவும்
ஞானமும் வலிமையும் நிறைந்த இறைவன் தன அருட்கொடையை மக்களுக்கு அள்ளிக்கொடுக்க
நாடிவிட்டால் அவனை யாரும் தடுக்க முடியாது.
அதே போல அவன் கொடுப்பதை நிறுத்தி
விட்டால் வேறு யாரும் கொடுக்கவும் முடியாது
17. (35:5)இறைவனின் வாக்குறுதி
நிச்சயம் நிறைவேற்றப்படும் .
இறைவனை மறக்கடிக்க முயலும் .இவ்வுலக
வாழ்வும் ,வஞ்சகர்களும் உங்களை
திசை திருப்பிவிடாமல் பாதுகாத்துக்கொள்ளுங்கள்
18, . (35:10) கண்ணியத்தை
தேடுவோர் தெரிந்து கொள்ளட்டும் ; கண்ணியமும் பெருமையும்
இறைவனுக்குமட்டுமே உரியவை . உங்கள் நற்செயல்களும் சொற்களும் உங்களை அவனிடம்
உயர்த்தும்
19. . (35:15)மனிதர்களுக்கு
இறைவன் அருள் தேவை
..புகழுக்குரிய அவன்தேவைகள் எதுவும்
இல்லாமல் முழுமை பெற்றவன்
20. . (35:29) தொழுகையை
நிலை நிறுத்தி,இறைவழியில் பொருளை செலவு செய்பவருக்கு இறைவன்
ஒரு இழப்பே இல்லாத வணிகத்தைக் கொடுக்கிறான்
அந்த வணிகத்தில் அவர்களுக்கு உரிய
ஊதியத்தை முழுமையாக் கொடுத்து மேற்கொண்டும் தன் அருட்கொடையிலிருந்தும் வாரி
வழங்குவான்
21 . (35:41 இறைவன்
அருளால் அசையாமல் நிற்கும் வானங்களையும் பூமியையும் அவன் அசைக்க நாடி விட்டால் அவை
அசைவதை யாரும் நிறுத்த முடியாது
22.. (35:45) மக்கள்
செய்யும் தவறுகளுக்காக இறைவன் உடனே தண்டிக்க எண்ணினால் இவ்வுலகில் யாரும் இருக்க
முடியாது
.ஆனால் இறைவன் எல்லோருக்கும் ஒரு
காலக்கெடு விதித்திருக்கிறான் .
அது முடியும் வரை இறைவன் தண்டிப்பதில்லை
23.. 36. 1-12 புனித
குரானின் இதயம் என்று அழைக்கப்படும் யாசீன் சுராஹ் துவக்கத்தில் hமக்களை எச்சரிக்கை செய்யவே குரான் இறக்கப்பட்டது என்றும் இறையச்சம்
உள்ளவர்களை மட்டுமே எச்சரிக்கை செய்ய முடியும் என்றும் சொல்லப்படுகிறது
இது குரான் ஜூசு
22ன் சுருக்கமோ,
தொகுப்போ, விளக்கமோ இல்லை .சில குறிப்புகள்
மட்டுமே
குரான் வசனங்களின் கருத்து மட்டுமே
சொல்லியிருக்கிறேன் .முழு மொழிபெயர்ப்பு இல்லை
குரானின் இந்தப்பகுதியில
வளர்ப்பு மகன்கள் மகன்கள ஆக
மாட்டார்கள் என்ற விதியை வலியுறுத்தும் வகையில் இறைவன் ஆணைப்படி நபி அவர்கள் தம்
வளர்ப்பு மகன் திருமணம் செய்த பெண்ணை மண முறிவுக்குப்பின் தாம் மணம் முடித்தது :
சுலைமான் நம்பியின் இறப்பு
போன்ற செய்திகள் சொல்லப் படுகின்றன
குரானின் இதயம் என்று பெயர் பெற்ற
யாசீன் சுராஹ் (36)
இந்தப் பகுதியில் துவங்குகிறது
நேற்.றைய வினா
“அவர்களைப் புறக்கணித்துவிட்டு
தீர்ப்பு நாளை எதிர் நோக்குங்கள் “
என்ற பொருள் கொண்ட வசனம் எது ?
விடை (32:29,30)
தீர்ப்பு நாளன்று நம்பிக்கை கொள்ள
நினைப்பவர்களுக்கு நரக விடுதலை கிடைக்காது
எனவே அவர்களைப் புறக்கணித்துவிட்டு
காத்திருங்கள் . அவர்களும் காத்திருக்கட்டும்
சரியானா விடை எழுதி வாழ்த்து
பாராட்டுப் பெறுவோர்
சகோ
சிராஜுதீன் – முதல் சரியான விடை
ஷர்மதா
இன்றைய வினா
“வானங்களும் பூமியும்
மலைகளும் அஞ்சி ஏற்றுக்கொள்ள மறுத்த பொறுப்பை மனிதன் ஏற்றுக்கொண்டான் “
இது வரும் வசனம் எது ?
22 ஆவது சகரை நிறைவேற்றிக் கொடுத்த
இறைவனுக்கு நன்றி
இந்தப் புனித மாதத்தின் நன்மைகள்
அனைத்தும் நம் அனைவருக்கும் நிறைவாகக் கிடைக்க எல்லாம் வல்ல ஏக இறைவன் அருள்
புரிவானாக
இறைவன் நாடினால் மீண்டும்
சிந்திப்போம்
22ரம்ஜான் (9) 1444
14032023 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment