திரு மறை சில குறிப்புகள் 13
பகுதி
(ஜூசு)13
பெயர்
வமா உப்ரியூ
13 Wa Ma Ubrioo துவக்கம் 12:53 12. Yusuf
Verse 53 நிறைவு 14. Ibrahim
Verse 52
05042023
1.யூசுப் சொன்ன கனவின்
பலன்களைகேட்டு மகிழ்ந்த மன்னன் அவரை :அழைத்து வரச் சொல்ல யூசுப் வந்தவரிடம் உங்கள்
மன்னரிடம் பெண்கள் கையை வெட்டிக்கொண்ட நிகழ்வை நினைவூட்டுங்கள் எனச் சொல்லி
அனுப்பினார் .மன்னர் அந்தப் பெண்ணிடம் விசாரிக்க தாம்தான் தவறு செய்த்தது யூசுப்
அல்ல என்று ஒத்துக்கொண்டார் ..
2.இல்லத் தலைவன் இல்லாத
நேரத்தில் தான் அவருக்கு துரோகம் செய்யவில்லை என்பதை இதன் மூலம் உறுதி செய்த
யூசுப் சொன்னார் : என் இறைவன் என்னைக் காத்திருக்கா விட்டால் நானும் தவறு
செய்திருப்பேன் என்றார்
3.யூசுபை பணியில்
சேர்த்துக்கொண்ட மன்னர் யூசுப் விரும்பியபடி நாட்டின் வளங்களைக் காக்கும் பொறுப்பை
அவரிடம் ஒப்படைத்தார்
4.இதன் மூலம் இறைவன்
தான் நாடியவருக்கு நல்ல பதவியும் இடமும் கொடுத்து விடுவான் என்பதை உறுதிப்படுத்தி
விட்டான்
5.(12:58-68)நாட்டில்
கடும் உணவுப்பற்றாக்குறை ஏற்பட(யூசுபை கிணற்றில் தள்ளிய ) யுசுபின் சகோதரர்கள்
உணவுப்பொருட்கள் வாங்க யூசுபை நாடி வந்தனர் .யூசுப் அவர்களைத் தெரிந்து கொண்டார்
ஆனால் அவர்கள் யூசுபை அறியவில்லை ..அவர்களுக்கு வேண்டிய உணவுப் பொருட்களை நிறைய
அளித்த யூசுப் அடுத்த முறை வரும்போது அவர்கள் (யூசுபின் ) தம்பியை கண்டிப்பாக
அழைத்து வர வேண்டும் என்று சொன்னார் .அதோடு உணவ வாங்க அவர்கள் கொண்டுவந்த
பொருட்களையும் அவர்களுக்குத் தெரியாமல் அவர்கள் பையில் வைக்கச் செய்தார் .யூசுபின்
சகோதரர்கள் தங்கள் தந்தை யகூபிடம் (யுசுபின் ) சகோதரரை தங்களுடன் அனுப்பி
வைத்தால்தான் அடுத்து உணவுப் பொருள் கிடைக்கும் என்று சொல்ல மிகுந்த
தயக்கத்துடஅனுப்பி வைக்கிறார்
6. (12:69-79)
அடுத்த முறை அவர்கள் வந்தபோது யூசுப்
தன்சொந்தத் தம்பியை தனியே கூப்பிட்டு நான்தான் உனது அண்ணன் என்று சொல்கிறார்
(.தம்பியை தன்னோடு வைத்துக்கொள்வதற்காக) தன் கோப்பையை தம்பியின் பையில் வைத்து அவர்
திருடி விட்டார் என்று சொல்லி அதற்கு தண்டனையாக தம்பியை தன்னோடு வத்துகொள்கிறார்
யூசுப் உங்கள் இளைய மகன் திருடியதால் அவனைப் பிடித்து வைத்குக்கொண்டனர் என்று
யகூபிடம் அவர் மக்கள் சொல்ல , அவர் துக்கம் தாளாமல் யுசுபுக்கு தீங்கு செய்தது போல் அவர் தம்பியையும்
நீங்கள் எதோ செய்து விட்டீர்கள் என்று கண்ணீர் விட்டு அழுகிறார் . கண் பார்வை
மிகவும் மறைந்த நிலையில் இறைவனிடம் முறையிடுகிறார் . எப்படியாவது யுசுபையும் அவர்
தம்பியையும் என்னிடம் கொண்டு வந்து சேருங்கள் என்று மக்களிடம் சொல்கிறார்கள்
7.12:80-93
மீண்டும் யூசுபிடம் வந்த சகோதரர்கள்
நாங்கள் மிகவும் சிரமமான நிலையில் இருக்கிறோம் . எங்களிடம் இருக்கும் சிறிதளவு
பொருளைப் பெற்றுகொண்டு நிறைய உணவுப் பொருட்களை எங்களுக்கு தருமம் செய்யுங்கள்
என்று சொன்னார்கள் .நீங்கள் யுசுபையும் அவரது தம்பியையும் என்ன செய்தீர்கள் என்று
கேட்ட யுசுபை அறிந்து கொண்ட அவர்கள் ,
நீர்தான் யுசுபா , உங்களை இறைவன் மிக நல்ல
நிலையில் வைத்திருக்கிறான் நாங்கள் தவறு செய்து விட்டோம் என்கிறார்கள் . அவர்கள்
தவறை மன்னித்த யூசுப் தன் சட்டையைக் கொடுத்து இதை தந்தையின் முகத்தில் போடுங்கள்
.அவருக்குக் கண் பார்வை திரும்பி விடும் . நம் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக
இங்கே வாருங்கள் என்று சொன்னார்
8.12:94-104
அவர்கள் அங்கிருந்து புறப்படும்போதே
யகூப் நபி தன் மகன் யூசுபின் அருகாமாயை உணர்ந்து சொல்ல முதுமையின் பிதற்றல் என்று
மற்றவர்கள் கேலி பேசினார் . யூசுபின் சட்டை யகூபின் முகத்தில் போடப்பட்டு அவருக்கு
பார்வை திரும்பியதும் தான் உணர்ந்தது உண்மைதான் என அறிந்து இறைவனுக்கு நன்றி
செல்த்தினார் . அவர் மக்கள் தம் தவறை உணர்ந்து அவரிடம் மன்னிப்புக் கோரினர் .
பின்னர் ஒரு குழுவாக யஊசுபைக்கான எகிப்திக்குப் புறப்பட்டனர் யூசுப் நபி அவர்களை
வரவேற்று ,பெற்றோரை கண்ணியமான
முறையில் வரவேற்று தம் அருகில் வைத்துக்கொண்டார் . பெற்றோர்கள் அவறை சிரம்
தாழ்த்தி வணங்கினர் .ஆட்சி அதிகாரத்தயும் ஞானத்தை யும் வழங்கிய இறைவனுக்கு நன்றி
செலுத்திய யூசுப் நபி தாம் ஏக இறைவனை நம்பிய நிலையிலேயே உயிர் பிரிய வேண்டும் என
வேண்டினார்
9.முகமது நபி ஸல்
அவர்கள் அறிந்திராத இந்த கதையை இறைவன் வஹி மூலம் அவர்களுக்கு அறிவித்தான்
இந்த அழகிய கதையைச் சொன்ன இறைவன்
தொடர்ந்து குரான் கூறும் அடிப்படைக் கருத்துக்களை – ஏக இறைக்கொள்கை, இறைவன் காட்டும் அடை யாளங்கள் ,நபி மார்களுக்கு ஏற்படும் சோதனைகள் , மறுமை நாள் –
எல்லாம் வலியுறுத்திச் சொல்லி குர்ஆனில் வரும் செய்திகள் எல்லாம் வெறும்
கட்டுக்க்கதை அல்ல ,குரான் ஒரு வழிகாட்டியாகவும் இறைவனின்
அருட்கொடையாகவும் இருக்கிறது என்று சொல்லி இந்த யூசுப் சூராவை இறைவன் நிறைவு
செய்கிறான்
(ஒரே முறையில் முழுமயாக
இறக்கபட்ட இந்த சுராஹ் யுசுப் நபியின் சரிதையை முழுமையாகச் சொல்கிறது எனவே நானும்
முடிந்த வரை முழுமையான சூராவின் சுருக்கத்தை கொடுக்க முயற்சி செய்திருக்கிறேன்
)
1
10.(13:4) பல் வேறு
வகைபட்ட நிலங்களில் பல்வேறு வகையான செடி, கொடி ,மரங்கள் வளர்கின்றன . ஒரே நீர்தான் எல்லாவற்றிற்கும் பாய்கிறது . ஆனால் பல
வகையான சுவையுடன் கனி, காய்கள் விளைகின்றன. சிந்தித்துப்
பார்ப்பவர்களுக்கு இதில் இருக்கும் இறை அற்புத சின்னங்கள் தெளிவாகும்
11.(13:13)இடி முழக்கம்
இறைவனின் புகழ் பாடிபுனிதமான அவனைக் கொண்டாடுகின்றன . அவன் மாட்சிமை பற்றி
வாதத்தில் ஈடு படுவோரை அவன் இடியின் மூலமே வீழ்த்தவும் செய்கிறான்
12. (13:25) உறுதி
செய்யப்பட்ட உடன் படிக்கைகளை மீறுவோர் ; இறைவன் சேர்த்து
வைக்க ஆணை இட்டதை வெட்டிப் பிரிப்போர் ; பூமியில் குழப்பம்
விளைவிப்போர் –இவர்கள் எல்லாம் இறைவனின் சினத்துக்கு உள்ளாகி மறுமையில் நரக
வாழ்வுக்குத் தள்ளப்படுவார்கள்
13. (13:28:29) நபி ஸல்
அவர்களின் செய்திகளில் நம்பிக்கை வைத்து இறைவனின் நினைப்பில் இருப்பவர்களின்
இதயங்கள் நல்ல அமைதி பெறும். அவர்களுக்கு நல வாழ்வும் மறுமையில் சிறந்த தங்குமிடமும்
நிச்சயம்
14. (13:37) அரபு
மொழியில் தெளிவாக விதிகளை (குரானை ) உங்களுக்கு இறக்கி வைத்திருக்கிறோம். இந்தத்
தெளிவுக்குப்பிறகும் தவறான வழியில் மனதை செலுத்த எண்ணினால் நீங்கள்
தண்டனையிலிருந்து தப்பிக்கவே முடியாது
5.(13:39) இறைவேதத்தின்
தாய் நூலான உம்முல் கிதாப் இறைவனிடமே இருக்கிறது . அவன் நாடியபடி அதில் கூட்டவோ
குறைக்கவோ செய்வான்
16.(14:1) மனித குலத்தை
இருளில் இருந்து மீட்டு ,எல்லாம் வல்ல இறைவனின் நல் வழியில் செலுத்தவே
இந்த மறை நூலை இறைவன் இறக்கி அருளினான்
17. (14:7) “ நீங்கள்
நன்றி உடையவராய் இருந்தால் நான் என் அருளை உங்களுக்கு மேலும் வழங்குவேன் . மாறாக
நீங்கள் நன்றி மறந்தால் கடும் தண்டனை உண்டு” என இறைவன் அறிவிக்கிறான்
18. (14:18) ஒரு புயல்
காற்று எப்படி சாம்பலை பறக்கச் செய்யுமோ அதே போல் இறை நம்பிக்கை இல்லாதவர்கள்
செயல்கள் அனைத்தும் வீணாகி விடும்
19. (14:24,25) ஒரு
நல்ல சொல் (லும் நல்ல செயலும்) ஒரு நல்ல மரத்துக்கு ஒப்பாகும் .வேரூன்றி நிற்கும்
அந்த மரத்தின் கிளைகள் வானளாவி நிற்கின்றன இறையருளால் ஒவ்வொரு பருவத்திலும் நல்ல
பழங்களை அந்த மரம் கொடுக்கிறது
,
20.(14:31) இறை
நம்பிக்கை கொண்டோர் தொழுகையை நிலை நிறுத்த வேண்டும் . இறைவன் அவர்களுக்கு
அருளியதிலிருந்து அவர்கள் மறை முகமாகவும் பிறர் அறியும்படியும் தான தருமங்கள்
செய்யவேண்டும்
21 (14:34) மனிதன் கேட்பதை எல்லாம்
இறைவன் நிறைவாகக் கொடுக்கிறான் . இறைவனின் அருட்கொடைகளை கணக்கிட முயன்றால் அது
மனிதனால் முடியாதசெயல்
ஆனால் மனிதன் அநீதி செய்பனாகவும்
நன்றி மறந்தவனாகவும் இருக்கிறான்
22 .(14:37)
"இறைவா இந்த வறண்ட வெறுமை பூமியில் உன் புனித ஆலயம் அருகில்
என் சந்ததியினரை உன்னை வணங்குவதற்காக விட்டுச் செல்கிறேன் . அவர்களுக்கு மக்கள்
ஆதரவையும் ,அவர்கள் சாப்பிட கனி வகைகளையும் வளங்குவாயாக “
இன்று நபி இப்ராகிம் இறைவனிடம் வேண்டினார்
( அதை ஏற்றுக்கொண்ட
இறைவன் , இன்றளவும் அந்தப் புனித பூமியில் எல்லாக்
காலங்களிலும் எல்லா வகையான கனிகளும் உணவு வகைகளும் கிடைக்கச் செய்திருக்கிறான்
என்பது கண்கூடு )
23 . (14:42,52))
தீயவர்களின் செயல்கள் அனைவற்றையும் இறைவன் அறிந்தே இருக்கிறான் .
அவவர்களுக்கு ஒரு காலக்கெடு நிர்ணயம் செய்திருக்கிறான் “ என்று கூறும் இறைவன்
அந்தக் கெடு முடிந்ததும் எப்படியெல்லாம் அவர்கள் வேதனைக்கு உள்ளாவார்கள் என
விவரிக்கிறான்
இது குரான் ஜூசு
13 ன் சுருக்கமோ,
தொகுப்போ, விளக்கமோ இல்லை .சில குறிப்புகள்
மட்டுமே
குரான் வசனங்களின் கருத்து மட்டுமே
சொல்லியிருக்கிறேன் .முழு மொழிபெயர்ப்பு இல்லை
நேற்.றைய வினா :
அவர்கள் தங்கள் செயல்களின் விளைவு
என்ன என்பதை அறியாதவர்களாய் இருக்கிறார்கள் “
என்ற பொருள் எந்த வசனத்தில் வருகிறது ?விளக்கம் என்ன
விடை
(12:15) யூசுப் நபியை
அவர் சகோதரர்கள் கிணற்றில் தள்ளி விட்டபோது
இறைவன் யுசுபுக்கு அருளிய வசனம்
: அவர்கள் தங்கள்
செயல்களின் விளைவு என்ன என்பதை அறியாதவர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் செயல்கள்
பற்றி நீங்கள் அவர்களுக்கு நினைவு படுத்தும் காலம் ஓன்று வரும்
விடை அனுப்ப முயற்சித்த சகோ சிராசுதீனுக்கு
நன்றி
இன்றைய வினா
சிறு வயதில் யூசுப் நபி கண்ட கனவு
என்ன ? அது பற்றி அவர் தன்
தந்தையிடம் சொன்னபோது தந்தை சொன்ன மறு மொழி என்ன
13 ஆவது சகரை நிறைவேற்றிக் கொடுத்த
இறைவனுக்கு நன்றி
இந்தப் புனித மாதத்தின் நன்மைகள்
அனைத்தும் நம் அனைவருக்கும் நிறைவாகக் கிடைக்க எல்லாம் வல்ல ஏக இறைவன் அருள்
புரிவானாக
இறைவன் நாடினால் மீண்டும்
சிந்திப்போம்
13 ரம்ஜான் 1444
05042023 புதன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment