இதயம் நிறைந்த
ஈகைத் திருநாள் வாழ்த்துகள் !
நோன்பு நோற்றோம் –உணவு ,நீரைத்
துறந்து 14 மணி நேரம்
இறை வணக்கத்தில் இரவும் பகலும்
ஈடுபட்டோம்
ஈத்துவந்து இன்புற்றோம்
ஆனால் ஆனால்
அறியாமல் அல்ல அறிந்தே சினம் கொண்டேன்
புறம் பேசினேன்
பிழைகளை மன்னித்து நற்செயல்களுக்கான
பலனை நம் அணைவருக்கும்இம்மையிலும் மறுமையிலும்
முழுமையாக வாரி வழங்க கருணையே உருவான ஏக இறைவனை வேண்டுகிறேன்
துவங்கிய பணியை நிறைவு செய்ய
திரு மறை சில குறிப்புகள் 30
பகுதி (ஜூஸு) 30
பெயர் அம்ம யடசலூன் 30 Amma
Yatasa'aloon
துவக்கம் 78:1 78. An-Naba
Verse 1
நிறைவு 114: 6 114. An-Nas
Verse 6
22042023
குரானின் நிறைவுப்பகுதியான முப்பதாவது
ஜூசுவில்
ஒன்றல்ல இரண்டல்ல 37 சூராக்கள்
முழுமையாக வருகின்றன
கொஞ்சம் மலைப்பாகத்தான் இருக்கிறது .
வழக்கம் போல் எல்லாம் வல்ல இறைவன் மேல் பொறுப்பை சுமத்தி விட்டு எழுதத்
துவங்குகிறேன்
சுராஹ்
78-அந் நபா –இந்தச்
சொல்லுக்கு தீர்ப்பு நாள் பற்றிய செய்தி என்று பொருள். பெயருக்கேற்ப தீர்ப்பு நாள்,
மறுமை பற்றிய செய்திகள் சொல்லப்படுகின்றன
79-அந்நாஸி ஆத்- பற்றி
இழுப்பவர்கள்
(6-8) ஒன்றன் பின்
ஒன்றாக எக்காளங்கள் ஊதப்பட்டு நிலம் நடுங்கிக் குலுங்கும் அந்த நாளில் இதயங்கள்
அச்சத்தில் நடுங்கித் துடிக்கும்
80- அபஸ- அவர்
கடுகடுத்தார்
(1-2)” கண் தெரியாத
ஒருவரைப் பார்த்து கடுகடுத்தார், முகத்தை திருப்பிக்
கொண்டார் “ என்று நபி ஸல் அவர்களை இறைவன் கண்டிக்கிறான்
81-அத்தக்வீர்
–சுருட்டப்படுதல்
(1-14) கதிரவன்
சுருட்டப்படுதல், கடல் பொங்குதல் என பல நிகழ்வுகளை சான்றாக
வைத்து இறைவன் மறுமை நாள் பற்றி சொல்கிறான்
82- அல் இன்பிதார்
–வெடித்தல்
(1) “வானம் வெடித்து
விடும்போது “ என்று துவங்கி மறுமைக் காட்சிகள்
83- முதப்பிபீன் –மோசடி
செய்தல்
(1) (வணிகத்தில் )
அளவில் மோசடி செய்பவருக்குக் கேடுதான்
84-அல் இன்ஷிகாக் –
துண்டாகுதல்
(1) “வானம் வெடித்துத்
துண்டாகும்போது “ என்ற முதல் வசனத்தைத் தொடரந்து தீர்ப்பு நாள் , மறுமை பற்றிய செய்திகள்.
85-அல் புருஜ்-வானத்து
மாளிகைகள்
(4)நம்பிக்கையாளர்களை
தீயில் போட்டு எரித்து வேடிக்கை பார்த்தவர்களை அழிவு ஆட்கொண்டது
86- அத்தாரிக்
-விண்மீன்கள்
(6, 7) முதுகெலும்புக்கும்
விலா எலும்புகளுக்கும் இடையில் சுரக்கும் ஒரு நீர்மப் பொருளில் இருந்து மனிதன்
படைக்கப்படுகிறான்
87- அல் அலா – மிக
உயர்ந்த
(6, 7)” நபியே நாம்
உங்களை குரானை ஓத வைத்து , அதில் நாம் நாடியதை உங்கள்
நினைவில் நிறுத்துவோம் “
88- அல்
காஷியா-சூழ்ந்து கொள்ளுதல்
(21)நபியே அறிவுரைகளை
நினைவு படுத்துவதே உங்கள் பணியாகும்
89- அல் பஜ்ர்-விடியல்
(19- 26) வாரிசுகளின்
சொத்துகளை முழுமையாக விழுங்கி விடுகிறார்கள் .செல்வத்தின் மீது அளவு கடந்த மோகம்
கொள்கிறார்கள்
நரகம் கண்ணில் காட்டப்படும் நாளில்
அவர்கள் புரிந்து கொள்வார்கள் – சொத்தாலும் செல்வத்தாலும் எந்தபயனும் இல்லை என்பதை
90- அல் பலத் – நகரம்
(5,7)யாருமே அவனைக்
கட்டுப்படுத்த முடியாது, யாரும் அவனைப்பார்க்கவில்லை – என
அவன் நினைக்கிறான்
91-அஷ்ஷம்ஸ்- கதிரவன்
(
92- அல் லைல்-இரவு
(8-10) பொருட்களைப்
பதுக்கி வைத்து தீய வழியில் செல்வோருக்கு நரகம் செல்லும் வழி திறக்கப்படும்
93-அள்ளுஹா-பகல்
(4)நபியே உங்களது கடந்த
காலத்தை விட எதிர்காலம் சிறப்பாக இருக்கும்
(10) தருமம் கேட்டு
வருவோரை விரட்டாதீர்கள்
94-அலம் நஷ்ரஹ்-ஆறுதல்
(2) உங்களை
அழுத்திக்கொண்டிருந்த (மக்களின் அறியாமை, மூட நம்பிக்கை )
இறைவன் இறக்கி வைத்து விட்டான்
95. அத்தீன் –
அத்திப்பழம்
(4)மனிதனை மிகச் சிறந்த
அமைப்பில் படைத்தான் இறைவன்
96-அல் அலக்- இரத்தக்
கட்டி
(1) ஓதுவீராக (நபியே)
உம் இறைவனின் திருப்பெயர கொண்டு
இந்த வசனம் நபி ஸல் அவர்களுக்கு
அறிவிக்கப்பட்ட முதல் குரான் வசனம் என்பது பெரும்பான்மைக் கருத்து
97- அல்கத்ர்- மாட்சிமை
(3மாட்சிமை மிக்க அந்த
(லைலத்தூர் கத்ர்) இரவு ஆயிரம் மாதங்களுக்கு மேலானதாகும்
98- அல் பய்யினா –
தெளிவான சான்று
(5) ஒருமையுடன்
இறைவனுக்கு அடிபணிய வேண்டும்; தொழுகையை நிலை நாட்ட வேண்டும்
.
தருமம் செய்யவேண்டும். இதுவே நேரிய
இறைவழியாகும் .
99-அ ஸ்ஸில்ஸால் ( அல்
ஸல் சலாஹ்)- நில நடுக்கம்
(1,4)தீர்ப்பு நாளில்
நிலம் நடுங்கிக் குலுங்கும்போது இறைவன் ஆணைப்படி பூமி நடந்த நிகழ்வுகள்
அனைத்தையும் ஒப்பிக்கும்
(இந்த சுராஹ் குரானின்
கால் (1/4) பங்குக்கு சமம் என்கிறது ஒரு நபி மொழி)
100-அல் ஆதியாத்
–குதிரைகள்
(6, 7) மனிதன்
இறைவனுக்கு மிகவும் நன்றி கெட்டவனாக இருப்பதற்கு மனிதனே சான்றாக இருக்கிறான்
101- அல் காரி ஆ-
பேரிடர்
மனிதர்கள் சிதறிக்கிடக்கும் ஈசல்கள்
போல் ஆகிவிடும் அந்த (இறுதி) நாளில் நன்மை செய்தோருக்கு அழகான சுவனம் .
மற்றோருக்கு எரியும் நரக நெருப்பு
102 –அத்த்காஸூர்-(அத்தக்காத்தூர்)-
செல்வத்தில் மோகம்
(1) செல்வத்தின்
மேலுள்ள மோகம் உங்களை வழி தவறச் செய்கிறது
103-அல் அஸ்ர்-பிற்பகல்
(1-3)இறை
நம்பிக்கையுடன் நற்செயல்கள் புரிந்து பொறுமை காப்பவர்கள் தவிர மற்ற அனைவரும்
பெரும் இழப்பில் இருக்கிறார்கள்
104-அல் ஹும்ஸா-
தூற்றித் திரிபவர்
(1-3)பிறரைத்
தூற்றிக்கொண்டு, செல்வத்தை சேர்த்துக்கொண்டு ,அந்தச் செல்வம் தன்னை மரணத்தில் இருந்து காக்கும் என நினைக்கும்
அனைவருக்கும் கேடுதான்
105- அல்பில்- யானை
(1-5) யானைப்படையை
இறைவன் எப்படி சிறு பறவைகளைக் கொண்டு அழித்து, மென்று
துப்பப்பட்ட வைக்கோல் போல் ஆக்கினான்!!
106- அஷ்-ஷிதா –குளிர்
காலம் / குறைஷ்
பருவ நிலை மாறுபாடுகளில் இருந்து
காப்பாற்றி பசிக்கு உணவளித்த இறைவனை குறைஷிகள் வணங்கட்டும்
107- அல் மாவூன்- சிறிய
உதவிகள்
(5,6) தொழுகையில்
அக்கறை இல்லாமல் பிறர் பார்க்கவேண்டும் என்பதற்காக் சிலர் தொழுகிறார்கள்
108- அல் கவ்ஸர் –அல்
கவ்ஸர் எனும் இறைபேரரருள்
(3)நபியே நிச்சயமாக
சந்ததி இல்லாமல் போனது நீங்கள் அல்ல – உங்கள் எதிரிகளே
109-அல் காபிரூன்
–இறைநம்பிக்கை இல்லாதோர்
(6)உங்கள் வழி
உங்களுக்கு ‘என்னுடைய வழி எனக்கு
110- அந் நஸ்ர்-உதவி
(2,3)திரள் திரளாய்
மக்கள் இறைவழியில் வந்து சேருவதைப் பார்க்கும் போது இறைவனை வழிபட்டு பாவ
மன்னிப்புக் கோருங்கள்
111-அல் லஹப்(அல் மஸத்)
ஈச்சங் கயிறு
(1) அபு லஹபின் கரங்கள்
முறியட்டும்; அவனும் அழிந்து போகட்டும்
112-அல் இக்லாஸ் (அத்
தவ்ஹீத்)- ஒற்றுமை
(1-4)நபியே சொல்வீராக
இறைவன் ஒருவனே
அனைவரும் அவனிடத்தில் தேவை உடையவர்கள்
அவன் பெறவுமில்லை பெறப்படவுமில்லை
அவனுக்கு இணை யாரும் இல்லை
113- அல் பலக்-வைகறை
நேரம்
வைகறையின் அதிபதியிடம் நான்
பாதுகாப்புத் தேடுகிறேன்
- அவன் படைப்புகளின்
தீங்கிலிருந்தும்
- அடர்ந்த இருளின்
தீங்கிலிருந்தும்
- முடிச்சுகளில் ஊதும்
தீயவரின் தீங்கிலிருந்தும்
- அழுக்காறு கொள்வோரின்
தீங்கிலிருந்தும்
114- அந் நாஸ்- மனித
இனம்
மனித குலத்தின் அதிபதியும், அரசனுமாகிய இறைவனிடம்
நான் பாதுகாப்புத் தேடுகிறேன்
-திரும்பத் திரும்ப
வந்து ஊசலாட்டங்கள் ஏற்படுத்தி மனதில் குழப்பம் விளைவிக்கும் மனிதர்கள், ஜின்களிடமிருந்து
துவக்கத்தில் குறிப்பிட்டது போல்
குரானின் முப்பதாவது ஜூசூ , 37 சூராக்களை கொண்டதாக
இருக்கிறது
எல்லாம் சின்னச்சின்ன சூராக்கள் போல்
இருக்கும் . . ஆனால் கடல்போல் விரிந்த பொருளும் விளக்கமும் கொண்டவை
எடுத்துக்காட்டாக
-சூராஹ் 80 அபஸ- இறைதூதரை இறைவன் கண்டிக்கிறான்
-
சூராஹ் 99- நிலநடுக்கம் –எட்டு வசனங்கள் கொண்ட இந்த
சுராஹ் குரானின் கால் பங்குக்கு சமம் என்று சொல்லப்படுகிறது
சூராஹ் 105 – அல்பில் – ஐந்து வசனங்கள் கொண்ட இந்த
சிறிய சூராவுக்கு விளக்கம் ஐந்து பக்கங்களுக்கு மேல் இருக்கும்
சூராஹ் 108 –அல்கவ்தர் –நபி பெருமான் அவர்களுக்கு
உலகெங்கும் சந்ததிகள் இருப்பார்கள் என்ற மிகப் பெரிய செய்தியைச் சொல்லும் குரானின்
மிகச் சிறிய சூராஹ்
சூராஹ் 112- அல் இக்லாஸ் – நான்கே வசனங்களில் இறைவனின்
வரையறை சொல்லப்படும் இந்த சூராஹ் குரானில் 1/3 பங்குக்கு
சமம் என்று சொல்லப்படுகிறது
சூராஹ் 113,114- இறைவனிடம் பாதுகாப்புத் தேடுவதற்கான
சூராக்கள்
இவையெல்லாம் மிகச் சில
எடுத்துக்காட்டுகள் மட்டுமே
நேற்றைய வினா
“உங்கள் உடைகளைத்
தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள் “ இது வரும் வசனம் எது ?
விடை
(74:4,:5)) உங்கள்
உடைகளைத் தூய்மைப் படுத்துங்கள் . அசுத்தத்தை விட்டு விலகியிருங்கள்
இறைவன் நபியிடம் சொல்லும் இந்தச்
சொற்கள் மிக ஆழமான பொருள் கொண்டவை
சரியான விடை எழுதிய
சகோ ஷர்மதாவுக்கு
வாழ்த்துகள் பாராட்டுகள்
என்னுரை (நிறைவுறை ?)
எல்லாப்புகழும் இறைவனுக்கே ,இறைவனுக்கு மட்டுமே
இந்த ரமலான் மாதத்தில் இறைவன் அருளால்
ஒரு முறை , இருமுறை ,ஏன் மூன்று முறை கூட குரான் ஓதி முடிப்பவர்கள் பலர்
எனக்கு அந்த அளவுக்கெல்லாம் வேகத்தை
இறைவன் அருளவில்லை . ஒரு மாதத்தில் ஒரு முறை முடிப்பது கூட எனக்கு சிரமமான ஓன்று
எனவே ,
ஒரு மாற்று முயற்சியாக ஒரு நாளைக்கு ஒரு ஜுஸு பற்றி எழுதி
இந்தபுனித மாதத்தில் நிறைவு செய்ய
எண்ணி இறைவனின் துணை கொண்டு எழுதத் துவங்கினேன் .
இறைவனின் துணையோடு இன்று நிறைவுப்
பகுதியும் எழுதி விட்டேன்
சொற்பிழை, எழுத்துப்பிழை ,பொருட்பிழைகளை
கருணை மிக்க அந்த இறைவன் மன்னித்தருள வேண்டும்
எழுதும் அளவுக்கு உடல் நலம் , மன நலம் ,கண் நலம்,
கைகால் நலம் , கணினி , தடையில்லா
மின்சாரம், வலைப்பின்னல்
எல்லாம் கொடுத்த இறைவனுக்கு மீண்டும்
மீண்டும் நன்றி
இரண்டு ஆண்டுகள் முன்பு எழுதியதை சிறிய
மாறுதல்களுடன் மீண்டும் போட்டேன்
ஆனால் புதிதாகப் படித்து புதிதாகப்
பதிந்தது போல் உணர்வு எனக்கு
கருத்துகளும் பாராட்டுகளும்
தெரிவித்து உற்சாக மூட்டிய
சகோ ஜோதி மெஹராஜ், சுராஜ் மும்தாஜ் , சிராஜுதீன் ஷர்மதா ,
ஹசன் அலி , நஜீமா பெரொஸ் ரவி ராஜ்
அனைவருக்கும் நன்றி
பெரும்பாலான வினாக்களுக்கு விடை
அனுப்பிய
சகோ ஷர்மதா அடுத்து சகோ சிராஜுதீன் ,
எப்போதாவது விடை அனுப்பிய சகோ ஹசன் அலி, பாப்டி அனைவர்க்கும் மீண்டும் பாராட்டுகள்
சகோ தல்லத் துவக்கத்தில் பனி
இஸ்ராயில் என்று எத்தனை முறை குர்ஆனில் வருகிறது என்ற வினாவுக்கு அனுப்பிய விடையில்
எனக்குக் கொஞ்சம் தெளிவின்மை இருந்ததால் பிறகு பார்க்கலாம் என்று தள்ளி வைத்து விட்டேன்
மீண்டும் இறைவனுக்கு நன்றி
இந்தப் புனித முழு மாதத்தின் சகரையும்,
தராவிஹ் தொழுகையையும் தெரிந்த வரை முழுமையான சக்காத் எனும் தருமத்தையும் நிறைவேற்றிக் கொடுத்த இறைவனுக்கு நன்றி.
சிறப்பான இந்த மாதத்தில் நம்முடைய
தொழுகை ,நோன்பு, சக்காத் எல்லாவற்றையும் இறைவன் ஏற்றுக்கொண்டு பாவங்களை மன்னித்து
இம்மையிலும் மறுமையிலும் சிறப்பான வாழ்வைக்கொடுக்க அவனிடம் கையேந்துவோம்
இறைவன் நாடினால் மீண்டும்
சிந்திப்போம்
(Source – Surah names- IFT Tamil
Quran, Pickthal English Quran-
Tamil versions mostly mine )
01 ஷவ்வால் (10) 1444
22042023 சனிக்கிழமை
No comments:
Post a Comment