Thursday, 20 April 2023

திரு மறை சில குறிப்புகள் 29 பகுதி (ஜூஸு)29

 




 திரு மறை சில குறிப்புகள் 29

பகுதி (ஜூஸு)29


பெயர் தபாரக்கல்லதி      29   Tabarakallazi

துவக்கம் 67:1     67. Al-Mulk Verse 1

நிறைவு 77:50        77. Al-Mursalat Verse 50


21042023

 

1. (67:2) இறப்பையும் பிறப்பைபும் மனிதர்களின் செயல்களில் நல்லவற்றைக் கண்டறியும் ஒரு சோதனைக்களமாக இறைவன் ஆக்கியிருக்கிறான்

 

 

2. (67:19)வானத்தில் சிறகை விரித்தும் ,மடக்கியும் பறக்கும் பறவைகளை தாங்கிப்பிடிப்பவன் கருணை மிக்க இறைவனேயன்றி வேறு யார் !!

 

 

3. (68:4) நற்குணங்கள் அனைத்தும் உடைய மகத்தான மனிதனாக இறைவன் நபி பெருமானைப் படைத்திருக்கிறான்

 

 

4. . (68:42) தீர்ப்பு நாளில் மக்கள் அனைவரும் ஓன்று கூட்டப்பட்டு சிரம் தாழ்த்தி வணங்குமாறு சொல்லப்படும் . . இறை நம்பிகையில்லாமல் இவ்வுலகில் வாழ்ந்தோருக்கு அவ்வாறு வணங்க முடியாது

 

 

Alhaqqa

اَلۡحَـآقَّةُ

5. (69:1) தீர்ப்பு நாளைக்குறிக்கும் அல் ஹாக்க என்ற சொல்லையே முதல் வசனமாகக் கொண்ட இந்த சூராவில் தீர்ப்பு நாள் பற்றி விவரிக்கப்படுகிறது

 

 

6. (69:38) உங்களுக்கு கண்ணில் தெரிவதிலும், கண்ணில்

தெ ரியாததிலிருந்தும் உண்மையைக் கண்டறிந்து சொலவதே நபி மொழியாகும்

 

 

7. (70:8-16) உருகிய செம்பு போல் வானம் வண்ணம் மாறும் நாளில் ,மலைகள் பஞ்சு போல் பிரிந்து போகுபோது உங்கள் நட்புகளோ நெருங்கிய உறவினர்களோ உங்களைக் கண்டு கொள்ளமாட்டரக.ள்

 

உங்கள் தோல்களை எரித்து விடும் நரக நெருப்பிலிருந்து உங்களை யாரும் காப்பாற்றவும் முடியாத

 

 

8. (71:7) நுஹ் நபி தன் கூட்டத்தாருக்காக இறைவனிடம் பாவமன்னிப்புக் கேட்கும்போது அவர்கள் காதுகளை விரலால் மூடிக்கொண்டு, முகங்களை ஆடைகளால் மூடிக்கொண்டு ஆணவத்துடன் திரிந்தார்கள்

 

 

9. (71:26)பொறுமை இழந்த நுஹ் நபி “ இறைவா இன்னும் இவர்களை விட்டு வைத்தால் உலகையே வழி கெடுத்துவிடுவார்கள் .

 இவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளும் நம்பிக்கை இல்லாதவர்களாகவே இருப்பார்கள்

.

 எனவே இவர்களை முற்றிலுமாக அழித்து விடு “ என்று சொன்னார்

 

 

10. (72:1) ஜின்கள் சிலர் குரான் ஓதுவதை கவனமாகக் காது கொடுத்துக் கேட்டனர் .

 

 

11. (72:2)அவர்கள் தங்கள் (ஜின்) கூட்டத்தினரிடம் போய்நேர்வழிப்படுத்தும் அற்புதமான குரான் மொழியை நாங்கள் கேட்டு அதில் நம்பிக்கை கொண்டு விட்டோம். இனிமேல் இறைவனுக்கும் அவன் புனிதத்துக்கும் எதையும் இணை வைக்க மாட்டோம் “ என்று சொன்னார்கள்

 

 

12. (72:6)மேலும்

மனிதர்களில் சிலர் ஜின்களை சிலரை தங்களுக்குப் பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்கிறார்கள் .

இதனால் அந்த ஜின்களின் ஆணவம் அதிகமாகிறது “ என்றும் சொன்னார்கள்

 

 

13. (73:6) இரவில் எழுந்து இறைவனை வணங்குதல் அகத்தையும் புறத்தையும் ஒருங்கிணைத்து பேச்சையும் செம்மைப்படுத்துகிறது

 

 

14. (73:20)” நபியே இரவில் பாதி நேரத்துக்குமேல் தொழுகையில் ஈடுபடுகிறீ.ர்கள் ..

 

உங்களோடு இன்னும் சிலரும் தொழுகிறார்கள் .

 

இரவு பகலின் அளவை இறைவனே சரியாக அறிவான்

 

.உங்களுக்கும் உங்களைச் சார்ந்தவர்களுக்கும் பகலில் பல விதமான வேலைகள் இருக்கும்.

எனவே உங்களால் முடிந்த அளவுக்கு

குரானை ஓதுங்கள்;

தொழுங்கள் ;

தருமம் செய்யுங்கள் .

 

உங்கள் நற்செயல்கள் அனைத்தும் இறைவனிடம் போய் சேர்ந்து உங்களுக்கு நன்மை தரும் .

 

கருணை மிகுந்த இறைவனிடம் மன்னிப்புக் கேளுங்கள் "

 

 

15. (74:6) பிறரிடம் எதையும் எதிர்பார்த்து அவர்களுக்கு உதவி செய்யாதீர்கள்

 

 

16. (74:29-51)) இறைவனின் செய்திகளை மறுத்து பேசுபவர்களுக்கு தீர்ப்பு நாளில் தீயின் கடுமை அவர்கள் தோலை சுட்டுப் பொசுக்கி விடும்

 

 

17. (74:52) இறைவன் தங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக செய்தி அனுப்பவேண்டும் என்பது இறைநம்பிக்கை இல்லாதோரின் எண்ணம்

 

 

18. (75:4) உங்கள் விரல் நுனியின் அமைப்பைக் கூட மாற்றி அமைக்கும் சக்தி இறைவனுக்கு உண்டு

 

 

19. (75:17) “நபியே, குரான் வசனங்களை உங்கள் நினைவில் நிறுத்துவது இறைவனின் கடமை

 

 

20. (75:36) கேள்வி கேட்பார் இல்லாமல் தான் தனியே விடப்பட்டு இருப்பதாய் மனிதன் நினைக்கிறானா?

21. (76:3) நன்றி செலுத்தினாலும் செலுத்தாவிட்டாலும் மனிதர்களை நேர்வழிப்படுத்தவே இறைவன் எண்ணுகிறான்

 

 

22. (76:28). இறைவன் மனிதனைப் படைத்துஅவனை வலிமையைக் கொடுத்தான். இறைவன் நினைத்தால் மனிதனை முழுதாக உருமாற்றி விடலாம்

 

 

23. (77:1-28 ) தொடர்ந்து வீசி மழையைக் கொண்டு வரும் புயல் காற்றின் மீதும் ,வானவர் மீதும் சத்தியம் செய்து இறைவன் தீர்ப்பு நாள் பற்றி விவரிக்கிறான்

 

 

24. (7729-40) நம்பிக்கை இல்லாதோர் தீர்ப்பு நாளில் அவர்கள் மறுத்த அந்த நரக நெருப்புக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்

 

 

இது குரான் ஜூசு

29ன் சுருக்கமோ, தொகுப்போ, விளக்கமோ இல்லை .சில குறிப்புகள் மட்டுமே

 

குரான் வசனங்களின் கருத்து மட்டுமே சொல்லியிருக்கிறேன் .முழு மொழிபெயர்ப்பு இல்லை

 

குரானின் இந்தப்பகுதியில்

முழுமையாக 11 சூராக்கள் இடம் பெற்றுள்ளன

 

 

இந்தப்பகுதியில் சொல்லப்படும் செய்திகளில் சில

 

- தீர்ப்பு நாளின் ஒரு நாள் மனித வாழ்வில் ஐம்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு சமம்

பின்னிரவு( தஹஜ்ஜத்) தொழுகை பற்றி வருகிறது

 

உடை உடல் சுத்தம் வலியுறுத்தப்படுகிறது

 

 ஒரு ஜின் கூட்டத்தினர் குரான் ஓதுவதைக் கேட்டு ஏக இறைவன் வழிக்கு வந்தது

 

 

நேற்றைய வினா

நீங்கள் சொல்வது உண்மை என்றால் இறப்பை அழையுங்கள் “

இது வரும் வசனம் எது ?

 

விடை62:6) “நீங்கள் மற்றவர்களை விட இறைவன் அருள் அதிகமாகப் பெற்றவர்கள் என்பது உண்மை என்றால் நீங்கள் இறப்பை விரும்பி அழையுங்கள்” என யூதர்களிடம் சொல்லப்படுகிறது

 

சரியான விடை எழுதிய சகோ

ஷர்மதாவுக்குப் பாராட்டுகள்

 

 

 

இன்றைய வினா

 

 உங்கள் உடைகளைதூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள் “

இது வரும் வசனம் எது ?

 

29 ஆவது சகரை நிறைவேற்றிக் கொடுத்த் இறைவனுக்கு நன்றி

 

இந்தப் புனித மாதத்தின் நன்மைகள் அனைத்தும் நம் அனைவருக்கும் நிறைவாகக் கிடைக்க எல்லாம் வல்ல ஏக இறைவன் அருள் புரிவானாக

 

இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்

 

29ரம்ஜான் (9)1444

21042023 வெள்ளி

சர்புதீன் பீ

Sherfuddin P

 


 

No comments:

Post a Comment