Friday, 14 April 2023

திரு மறை சில குறிப்புகள் 23 பகுதி (ஜூஸு) 23

 





 திரு மறை சில குறிப்புகள் 23

பகுதி (ஜூஸு) 23

 

 பெயர  வ மலி 23    Wa Mali

துவக்கம்  36:28 36. Ya-Sin Verse 28

நிறைவு  39:31   39. Az-Zumar Verse 31

15042023

 

 

1(36:14,26)) இறைவன் அனுப்பிய மூன்று தூதர்களை மக்கள் நம்ப மறுத்தனர். தூதர்களை நம்பிய ஒருவரை கொலை செய்து விட்டனர் .இறைவன் அவருக்கு சுவனபதியை

கொடுத்தான்

 

2. (36:29) ஒரு பலத்த ஓசை வந்து நம்பாதவர்கள் அனைவரையும் அழித்துவிட்டது {

 

3. (36:40) கதிரவன் நிலவை முந்த முடியாது .இரவு பகலை முந்த முடியாது

 

4. (36:47) தான தருமங்கள் செய்யுங்கள் என்று சொன்னால் – இறைவனே கொடுக்க விரும்பாத ஒரு ஏழைக்கு நாங்கள் ஏன் கொடுக்க வேண்டும் என்று கிண்டலாகப் பேசுவார்கள் தவறான வழியில் போகிறவர்கள்

 

}

5. (36:58) இறைவன் சுவன வாசிகளுக்கு சொல்லும் சொல் ஸலாமுன் சலாம் (சாந்தி, அமைதி) “

6. (36:65) நரக வாசிகளின் வாய்கள் பூட்டப்படும். அவர்கள் கைகள் இறைவனிடம் பேசும் . அவர்கள் செய்த செயல்களுக்கு அவர்கள் கால்கள் சான்றளிக்கும்

 

7. 37 (1-15) அணிவகுத்து நிற்கும் வானவர் மீது சத்தியமாக இறைவன் ஒருவனே என்று கூறும்

 

அந்த எல்லாம் வல்லவன் நம்பிக்கை இல்லாதோர் பற்றிக் கூறுகிறான் :

இறை அற்புதங்களை அவர்கள் கிண்டல் செய்வார்கள்

அறிவுரைகளுக்கு செவி சாய்க்க மறுப்பார்கள்

இவையெல்லாம் வெறும் மந்திர தந்திரமே என இறையரற்புதங்களை இகழ்ந்து பேசுவார்கள்

 

8. தீர்ப்பு நாளில் இறைநம்பிக்கை இல்லாதோர் , அவர்களை அவர்களை வழி கெடுத்த தலைவர்களிடம் -நீங்கள்தான் எங்களை இப்படி கெடுத்து நரகத்தில் தள்ளி விட்டீர்கள் – என்று குற்றம் சுமத்துவார்கள்

 

அதற்கு அந்தத் தலைவர்கள் – ஆம் உங்களைக் கெடுத்து நாங்களும் கெட்டு விட்டோம் – என்பார்கள்

 

சுவன வாசிகளுக்கு சுகமான இருக்கைகள் , சுவையான உணவுகள், பானங்கள் , குளிச்சியான தங்குமிடங்கள் , நல்ல துணைவர்கள் எல்லாம் கிடைக்கும்

 

இதற்கு எதிர் மாறாக நரக வாசிகள் துனபம் துயரில் இருப்பார்கள்

 

9. (37:101) இப்ராகிம் நபியின் இறைஞ்சுதலை ஏற்றுகொண்ட இறைவன் அவருக்கு முதுமையில் ஒரு மகனை அளிக்கிறான்.மகனே உன்னை பலியிடுவது போல் கனவு கண்டேன் இது பற்றி உன் கருத்தென்ன ?” என்று அந்தச் சிறுவனை கேட்க “ இறைவன் கட்டளை அப்படி இருந்தால் அதை நிறைவேற்றுங்கள் தந்தையே “ என்கிறார் அந்த உறுதியான இறைநம்பிக்க கொண்ட சிறுவன் .

 

பலி கொடுக்க முற்படுகையில் இறைவன் “ இப்ராஹீமே நீங்கள் உங்கள் கனவை நிறைவேற்றி இறை சோதனையைக் கடந்து வந்து விட்டீர்கள் என்று சொல்லி மகனுக்குப் பதில் ஒரு பெரிய ஆட்டைப் பலி கொடுக்கச் செய்தான் .

 

இப்ராகிம் நபியின் பெயர் என்றென்றும் நினவு கூறப்படும் வரத்தை இறைவன் அவருக்கு கொடுத்தான்

 

10. {114-138) நபிமார்கள் மூஸா, ஹாருன் ,இலியாஸ் ,லூத் ஆகியோருக்கு இறைவன் அருளியவை பற்றிக் கூறபடுகிறது

 

11. அதிகக் கூட்டம் நிறைந்த கப்பலில் யூனுஸ் நபி ஏறினார். குழுக்களில் அவர் பெயர வந்ததால் கப்பலின் சுமையைக் குறைக்கும் பொருட்டு அவர் கடலுக்குள் வீசப்பட்டார்

 

.(இறைவன் அனுமதியில்லாமல் அவருக்குக் கொடுக்கபட்ட பணியை முடிக்காமல் விட்டு வந்ததற்கு தண்டனையாக) ஒரு மீனின் வயிற்ருக்குள் சென்ற அவர் தொடர்ந்து இறைவனை வேண்டியதால் நிலத்தை வந்து அடைந்தார் .

 

. உடல் நலமில்லாமல் இருந்த அவருக்கு நிழல் தர ஒரு கொடியை இறைவன் படர விட்டான் . அந்தக்கொடி அவர் உடல் நிலையை சரியாக்கியது . பின் அவர்தம் மக்களிடம் சேர்க்கப்டார்

 

12. (37:171) நபி மார்கள் அனைவருக்கும் இறைவன் உதவி செய்வதாய் வாக்களித்திருக்கிறான்

 

13. (38:1 )அறிவுரைகள் நிறைந்த இந்தக் குரானை வீண் பிடிவாதத்தாலும் ஆணவத்தாலும் இதை நம்ப மறுப்பவபர்கள் பலர்

14. (38:17- 20) எப்போதும் இறைவன் நினைவில் இருந்த தாவூத் நபிக்கு இறைவன் அளப்பறிய வலிமையைத் தந்திருந்தான்

 

.அவரோடு சேர்ந்து மலைகளும் பறவைகளும் இறைவனின் புகழைப் பாடுகின்றன

 

தாவூத் நபிக்கு நல்ல ஞானத்தையும் நீதி வழங்கும் ஆற்றலையும் இறைவன் கொடுத்திருந்தான்

 

15. (38:35மிகப்பெரும் கொடையாளியான இறைவனிடம் சுலைமான் நபி வேண்டுகிறார் :

 

இதுவரையும் இனிமேலும் யாருக்கும் கிடைக்காத ஒரு நாட்டை (அரசாங்கத்தை ) எனக்குக் கொடுப்பாயாக “

 

இறைவன் அவருக்குக் காற்றை கட்டுப்படுத்தும் சக்தியைக் கொடுத்தான் .ஜின்களில் நல்ல கட்டிடக் கலைஞர்களையும் முத்.துக்குளிப்பவர்களையும் இன்னும் பலரையும் அவர் கட்டுப்பாட்டில் வைத்தான்

 

16. (38:42) இறைவன் ஆணைப்படி அயுப் நபி பூமியைக் காலால் உதைக்க , அங்கு பொங்கி வந்த நீர் அவருடைய நீண்டநாள் வியாதியைக் குணமாக்கி, அவர் குடும்பத்தையும்அவருடன் சேர்த்து வைத்தது

 

17. (39:3) வழிபாட்டுக்குரியவன் இறைவன் மட்டுமே.

 

அவனையன்றி மற்றவற்றை வணங்குபவர்கள் சொல்வது

இறைவனிடம் நெருங்குவதில் அவை எங்களுக்கு உதவுகின்றன”

 

இது போல் பொய் சொல்பவர்கள் என்றும்இறை வழியில் சேரமாட்டார்கள்

18. (39:15)நம்பிக்கை இஇல்லாதவர்கள் தங்களை இழந்து தங்கள் சுற்றம் நட்பையும் இழந்து ஒரு மிகப்பெரிய இழப்பை தீர்ப்பு நாளில் சந்திப்பார்கள்

 

19. (39:23) முரண்பாடுகள் எதுவும் இல்லாத ஒரு திருமறையை இறைவன் அருளியிருக்கிறான் .

 

மிகச்சிறந்த அறிவுரைகளைக் கொண்ட இது ஒரு முழுமையான வேதமாகும் ..

 

 மனதில் எளிதில் பதிவதற்காக பலமுறை திரும்பச் சொல்லப்படும் செய்திகள் கேட்பவர் மனதில் ஒரு திடுக்கத்தையும் நடுக்கத்தையும் உண்டாக்கும் .

 

இறைவழியில் செல்பவர்களுக்கு நல்வழி காட்டும் இந்த வேதம் வழி தவறியோருக்கு வழி காட்டியாக இருக்காது

 

இது குரான் ஜூசு

23ன் சுருக்கமோ, தொகுப்போ, விளக்கமோ இல்லை .சில குறிப்புகள் மட்டுமே

 

குரான் வசனங்களின் கருத்து மட்டுமே சொல்லியிருக்கிறேன் .முழு மொழிபெயர்ப்பு இல்லை

 

குரானின் இந்தப்பகுதியில

திருமறையின் இதயமாக விளங்கும் யாசீன் சூராஹ்வின் (36) வின் பெரும்பகுதி வருகிறது

 

மிக நுடபமான செய்திகள சில

--தாவூத் நபி தான் வழங்கிய தீர்ப்பு தப்பு என்று அஞ்சி இறைவனை சிரம் தாழ்த்தி வணங்கியது

 

-- சுலைமான் நபி தன் குதிரைகளை இறைவனுக்காக பலி கொடுத்தது

நேற்றைய வினா

 

வானங்களும் பூமியும் மலைகளும் அஞ்சி ஏற்றுக்கொள்ள மறுத்த பொறுப்பை மனிதன் ஏற்றுக்கொண்டான் “

இது வரும் வசனம் எது ?

 

விடை

(33:72)

இந்த உலகின் பொறுப்பை ஏற்றுகொள்ளஅ ஞ்சி வானங்களும் பூமியும் மலைகளும் மறுத்தன. ஆனால் மனிதன் இதில் உள்ள சிரமங்கள் ,சோதனைகள் பற்றி அறியாமல் பொறுப்பை ஏற்றுகொண்டான்

 

சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப்பெறுவோர்

 

சகோ

 

ஷர்மதா –முதல் சரியான விடை

 

ஹசன் அலி

 

 

இன்றைய வினா

முதுமையில் மனித உருவில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி சொல்லும் வசனம் எது ?

 

23 ஆவது சகரை நிறைவேற்றிக் கொடுத்த இறைவனுக்கு நன்றி

 

இந்தப் புனித மாதத்தின் நன்மைகள் அனைத்தும் நம் அனைவருக்கும் நிறைவாகக் கிடைக்க எல்லாம் வல்ல ஏக இறைவன் அருள் புரிவானாக

 

இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்

23ரம்ஜான் (9) 1444

15042023 சனிக்கிழமை  

சர்புதீன் பீ

 

 

No comments:

Post a Comment