Monday, 24 April 2023

தண்ணீர் தண்ணீர்







 தண்ணீர் தண்ணீர்

தொலைக் காட்சிப் பெட்டியை நேற்றுத்தான் திறந்தேன் ஒரு மாத இடைவெளிக்குப்பின்
முன்பு வழக்கமாக் பார்த்துக் கொண்டிருந்த தொடர் பாக்கியா
நமதுதொ கா தொடர்களில் ஒரு சிறப்பு .—சில நாட்கள் , ஒரு வாரம், ஒரு மாத இடைவெளிக்குப்பின் பார்த்தாலும் கதை பெரிதாக ஒன்றும் நகர்ந்திருக்காது
கதாநாயகி முகம் கழுவுவதை மூன்று நாளைக்குக் காண்பித்தாலும் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பது தமிழ் நாட்டின் சிறப்புகளில் ஓன்று என்று முன்பு எப்போதோ குமுதத்தில் படித்த நினைவு.
முக்கியமான காட்சி எதாவது விட்டுப்போய்விடக் கூடாது என்ற துடிப்பு
இதில் தண்ணீர் எங்கே வந்தது ?
பார்ப்போம்
சில பல காரணங்களால் சொந்த வீட்டை விட்டு வெளியேறிய கோபி தன் இரண்டாவது மனைவி ராதிகாவுடன் மீண்டும் அந்த வீட்டுக்கு அழையா விருந்தாளியாய் நுழைகிறார்
அவரின் பெற்றோர்,, மக்கள் ,மருமக்கள் , முகல் மனைவி பணிப்பெண் என அனைவரும் அவருக்கு எதிரணி
தன் வீட்டிலேயே தனிமைப் படுத்த பட்ட கோபி ,தாகத்தால் தவித்து தண்ணீருக்கு ஆர்டர் கொடுக்கப் போகிறேன் என்கிறார்
(ஒரு வழியாக தண்ணீர் வந்து விட்டதா ?)
இதை விளையாட்டாக எடுத்துக் கொள்ள என்னால் முடியவில்லை
வான் பொய்ப்பினும் தான் பொய்யா வற்றாக் காவிரி இன்னும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது
வானும் அப்படிப் பெரிய அளவில் வஞ்சனை செய்யாமல் பொழிந்து கொண்டுதான் இருக்கிறது
பின் ஏன் தண்ணீர் ஒரு வணிகப் பொருளாய் மாறியது ?
பள்ளி , கல்லூரிகளில் பானையில் இருக்கும் தண்ணீரை குவளையால் எடுத்துக் குடித்து நன்றாகத்தானே வாழ்ந்து கொண்டிருந்தோம்
வெகு அரிதாக மூன்று பானைகள் கொண்ட வடிகட்டி இருக்கும் .அதில் பயன்படுத்தப் படுபவை எல்லாம், மணல், கல் போன்ற இயற்கைப் பொருட்கள்தான்
மருத்துவ மனைகளில் வெள்ளை நிறத்தில் பீங்கானால் ஆனவடிகட்டி இருக்கும்
மற்றபடி பொதுவாக இயற்கை அள்ளித்தரும் தண்ணீரை எந்த விதத் தயக்கமும் இல்லாமல் குடித்துக் கொண்டுதான் இருந்தோம்
ஆனால் இப்போதோ இயற்கை நீர் ஒரு நஞ்சு போல் சித்தரிக்கப்படுகிறது
அதே நீரை குப்பியில் அடைத்து விலை வைத்தால் அது புனித நீராகி விடுகிறது
தண்ணீரை சுத்தம் செய்யும் ஆர்வோ இல்லாத வீடு மனிதர்கள் வாழத் தகுதி இல்லாததாக கருதப் படுகிறது
மிகப் பரந்து விரிந்த நிலம் , மிகக் குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட ஆஸ்திரேலியாவில் ஆழ்துளை கிணறுக்கு அனுமதி கிடையாதாம்
தரை மட்ட நீரைப் பயன்படுத்தினால் போதும் என்ற கட்டுப்பாடு , அதற்குக் கீழ் உள்ளது அடுத்தடுத்த தலை முறையினருக்காம்
தண்ணீர் தனியார் மயமாக்க்கபட்ட ஒரு நாட்டில் வீடுளில் கிணறு போன்ற நீர் ஆதாரங்களுக்கு அனுமதி கிடையாதாம்
மழை நீரை சேமித்து வைத்தால் கூட அந்த நீர் உரிமை பெற்ற நிறுவனம் அந்தத் தொட்டியை உடைத்து விடுமாம்
நம் நாடும் தனியார் மயமாக்களில் விரைந்து முன்னேறுகிறது
சட்டம் இருக்கிறது நம்மூரிலும் –
நிலத்தை கருப்பு, சாம்பல் ,வெள்ளை நிறம் என்று வகைப்படுத்தி, கருப்பு நிலத்தில் ஆழ்துளைக்கு அனுமதியே கிடையாது , சாம்பலில் அரசின் முன் அனுமதி பெற வேண்டும் என்று
நம் நாட்டில் சட்டங்கள் என்பது தாண்டி அல்லது மிதித்துப் போகத்தானே
“மழை நீரை உப்பாக்கி விட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள் ?”
“தண்ணீர் பூமிக்குள் உறிஞ்சப்பட்டு விட்டால் உங்களுக்கு நீர் கொடுப்பது யார் ?”
இவை படைத்தவன் விடுக்கும் எச்சரிக்கைகள்
இறைவன் நாடினால் மீஎண்டும் சிந்திப்போம்
25042023 செவ்வாய்
சர்புதீன் பீ

No comments:

Post a Comment