திரு மறை சில
குறிப்புகள் 28
பகுதி (ஜூஸு)28
பெயர கத் சமி அல்லாஹ் 28 Qadd Sami Allah
துவக்கம் 58:1 58.
Al-Mujadilah Verse 1
நிறைவு 66:12 66.
At-Tahrim Verse 12
20042023
1. (58:2) உங்களைப்
பெற்றவரைத்தவிர யாரும் உங்கள் தாயாக முடியாது. “என் மனைவி என் தாயைப் போல்
இருக்கிறாள் “ என்று சொல்லி மணமுறிவு செய்வது மிகவும் தவறாகும்
2. (58:7) வானங்களிலும்
பூமியிலும் உள்ள அனைத்தையும் அறிந்த அவனுக்குத் தெரியாமல் யாரும் யாருடனும்
மறைமுகமாகப் பேச முடியாது
3. (58:17) அவர்களுடைய
செல்வங்களோ மக்கட்பேறோ தீய வழியி போனவர்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றாது
4. (59:4) அவர்கள்
இறைவனுக்கு எதிராகவும் நபிக்கு எதிராகவும் நடந்துகொண்டதால் இறைவன் அவர்களைக்
கடுமையாக
தண்டித்தான்
5. (59:21) புனிதகுரானை
ஒரு மலை மேல் இறக்கி வைத்தால், இறையச்சத்தில் அந்த
மலைஉடைந்து தூளாகிவிடும்
6. (59:22, 24) இறைவன்-
அவனைத்தவிர வேறு இறைவன் கிடையாது –
அவன்-மறைவானதையும் வெளிப்படையானதையும் அறிந்தவன்
-
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்
-உலகங்களின் அரசன் ,புனிதமானவன்
-
சமாதானத்தையும் பாதுகாப்பையும்
அளிப்பவன்
-
கண்காணிப்பவன், வலிமையும் வல்லமையும் மிக்கவன் .
-
மகத்தான அவன் மிகவும் உயர்ந்தவன் –
அவனோடு ஒப்பிட உலகில் எதுவும் இல்லை
-
திட்டம் தீட்டி, திட்டத்தை செயல்படுத்துபவன் ,
படைப்புகளை அழகு படுத்துபவன்
-வல்லமையும் ஞானமும்
மிக்க அவனுகுக்கு பல அழகிய பெயர்கள் உள்ளன
7. (60:8) உங்களுக்கு
எதிராக நடக்காத , உங்களைத் துரத்தாதவர்கள் – அவர்கள் மாற்று
மதத்தினராக இருந்தாலும் – அவர்களோடு அன்பாக நடந்து கொள்ளுவதை இறைவன் தடை
செய்யவில்லை
8. (61:3) செய்யாத
ஒன்றை செய்ததாகச் சொல்வதுஇறைவன் பார்வையில் மிக இழிவானதாகும்
9. (61:11) இறைவன் இறைவனின்
்,இறை தூதர் மேல் நம்பிக்கை வைத்து இறைவழியில் அயராது
உழையுங்கள்.
இறைவன் உங்களுக்கு சுவனத்தில்
மிகப்பெரிய மாளிகைகளில் இடம் கொடுப்பாண் .இது மகத்தான வெற்றியாகும்
10.(62:5) தவ்ராத்
வேதம் அருளப்பெற்றும் அதைக் கடைப்பிடிக்காதவர்கள் வேத நூல்களை சுமந்து செல்லும் கழுதை
போன்றவர்கள் . அதிலும் மோசமானவர்கள் இறைவனின் சான்றுகளைப் பொய்யாக்க முயற்சிப்பவர்
11. (62:9) வெள்ளிக்கிழமை
கூட்டுத் தொழுகைக்கு அழைப்பு விடுக்கப்பட்டவுடன் உங்கள் வர்த்தகங்களை நிறுத்தி
விட்டு இறைவனை வழிபட விரைந்து செல்லுங்கள்
12. (63:8)” நாங்கள் மதினாவுக்குத்
திரும்பி வரும்போது கண்ணியம் மிக்கவர்கள் தாழ்ந்தவர்களை விரட்டி விடுவார்கள் ‘
என்று நயவஞ்சகர்கள் சொல்கிறார்கள் .
அவர்களுக்குத் தெரியாது கண்ணியம்
என்பது இறைவனுக்கும் அவனது தூதருக்கும் நம்பிக்கை கொண்டோருக்குமே உரியது என்று
13. (64:7) இறந்தபின் உயிர்ப்பிக்கப்பட்டு
அவர்கள் செயல்கள் அவர்களுக்கு அறிவிக்கப்படும் என்ற உண்மையை நம்பிக்கை இல்லாதோர்
வன்மையாக மறுக்கிறார்கள்
14. (64:11) எல்லாம்
அறிந்த இறைவன் நாட்டம் இல்லாமல் எந்தத் தீங்கும் நடக்க .முடியாது
.தன்னை நம்புபவர்களுக்கு இறைவன்
நேர்வழி காட்டுவன்
15. 65:1-7 மணமுறிவு
பற்றிய சட்டங்கள்
16. 65:9) அவர்கள்
செய்த தீய செயல்களின் கசப்பான பலனை அவர்கள் சுவைக்கிறார்கள்
17. (66:3)நபி அவர்கள்
தம் மனைவியர் ஒருவரிடம் இரகசியமாகச் சொன்ன செய்தியை மனைவி வேறொருவரிடம் தெரிவித்து
விட்டார் .
இது பற்றி இறைவன் நபிக்கு அறிவித்து
விடுகிறான். நபி தன் மனைவியிடம் இதுபற்றிக் கேட்க உங்களுக்கு யார் சொன்னது என்று
கேட்கிறார் மனைவி .
அதற்கு நபி அவர்கள் எல்லாம் வல்ல
இறைவனே எனக்கு அறிவித்தான் என்கிறார்
18. (66:10) நுஹும்
லூத்தும் இறைவனின் தூதர்கள்தான் .
இருந்தாலும் அவர்கள் துணைவியர்கள்
இறைநம்பிக்கை கொள்ளாததால் நரக நெருப்பில் புகுத்தப்படனர்
19. (66:11)அதேபோல் இறை
நம்பிக்கை இல்லாத பிர் அவுன் மனைவி நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்ததால்
சுவனம் புகுந்தார்
இது குரான் ஜூசு
28ன் சுருக்கமோ,
தொகுப்போ, விளக்கமோ இல்லை .சில குறிப்புகள்
மட்டுமே
குரான் வசனங்களின் கருத்து மட்டுமே
சொல்லியிருக்கிறேன் .முழு மொழிபெயர்ப்பு இல்லை
குரானின் இந்தப்பகுதியில்
முழுமையாக ஒன்பது சூராக்கள் இடம்
பெற்றுள்ளன
சிறியதாக இருக்கும் அவை பொருளிலும்
விளக்கத்திலும் மிகப் பரந்து விரிந்தவை
சொல்லப்படும் சில செய்திகள்
-
ஒரு பெண்ணின் குறையைத் தீர்க்க இறைவன்
உடனே நபிக்கு செய்தி அனுப்பியது
-இறைவனின் அழகிய
திருப்பெயர்கள்
- இறைவன் ஆகுமாக்கிய
(ஹலாளான) தை மறுப்பது தவறு
-
வெள்ளிக்கிழமை கூட்டுத் தொழுகை
நேற்றைய வினா
“வானம் குமுறும்
நாளில்”
இது எந்த வசனத்தில் வருகிறது ?
விடை
(52:9) “வானம்
துடித்துச் சுற்றிக் குமுறும் நாள் “
என்று தீர்ப்பு நாள் பற்றி வருகிறது
சரியான விடை எழுதிய சகோ
ஷர்மதாவுக்கு
வாழ்த்துகள் பாராட்டுகள்
இன்றைய வினா
“நீங்கள் சொல்வது உண்மை
என்றால் இறப்பை அழையுங்கள் “
இது வரும் வசனம் எது ?
28 ஆவது சகரை நிறைவேற்றிக் கொடுத்த இறைவனுக்கு
நன்றி
இந்தப் புனித மாதத்தின் நன்மைகள்
அனைத்தும் நம் அனைவருக்கும் நிறைவாகக் கிடைக்க எல்லாம் வல்ல ஏக இறைவன் அருள்
புரிவானாக
இறைவன் நாடினால் மீண்டும்
சிந்திப்போம்
28ரம்ஜான் (9) 1444
20042023 வியாழன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment