திரு மறை சில குறிப்புகள் 21
பகுதி (ஜூஸு) 21
பெயர் உட்லு மா ஊஹி 21 Utlu
Ma Oohi
துவக்கம் 29:46 29. Al-Ankabut
Verse 46
நிறைவு 31:30 33. Al-Azhab
Verse 30
1304 2023
முன் குறிப்பு
இறைவன் அருளால் புனித ரமலான்
மாதத்தின் நிறைவுப் பத்தை அடைந்திருக்கிறோம்
நிறைவுத் தேர்வு போல் மிக
முக்கியமானது என்று இந்த பத்து நாட்களைக் குறிப்பிடுவார்கள்
, தொழுகை ,நோன்பு , சக்காத் எல்லாம் மறுமையில்
சுவன பதவியை நோக்கித்தான் என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது
உயர் சுவன பதவிக்காக இந்தப் பத்து நாட்களில் இறைவனிடம்
அதிகமாக இறைஞ்ச வேண்டும் என்பார்கள்
நம் எல்லோருக்கும் சிறப்பான இம்மை மறுமையை
இறைவன் அருள்வானாக
இனி
1 .(29:48,49)) நபியே
நீங்கள் முன்பு எந்த நூலையும் ஓதவில்லை ,உங்கள் கையால் எழுதவும்
இல்லை .
அறிவுடையவர்கள் இதில் தெளிவான
சான்றுகளைக் காண்கிறார்கள் ..இதை மறுப்பவர்கள் நீதியை மிகவும் மறந்தவர்கள் மட்டுமே
2, (29:56) என்னை
நம்புபவர்களுக்கு பூமியை பரந்து விரிந்ததாக ஆக்கியிருக்கிறேன்.
என்னையே வழிபடுங்கள்
3. (29:60) விலங்குகள்
தங்களுக்குத் தேவையான உணவை சுமந்து கொண்டு திரிவதில்லை.
எல்லாம் அறிந்த இறைவனே அவற்றிற்கும்
உங்களுக்கும் உணவளிக்கிறான் –
4. 5.55 (29:67) உங்களுக்கு
ஒரு புனிதமான பாதுகாப்பான இடத்தை (மக்கமா நகரை) கொடுத்து அருளிய இறைவனை விடுத்து ,
அவன் அருளை மறந்து மற்ற தெய்வங்களை இன்னும் நம்புகிறீர்களா ?
5. (30:2,3)ரோமானியர்கள்
தோற்கடிக்கப்பட்டார்கள் . ஆனால் விரைவில்அவர்கள் வெற்றி அடைவார்கள்
6 (30:4) என்றும் எல்லா
அதிகாரமும் இறைவனிடமே
7. (30:5) .எல்லாம்
வல்ல இறைவன் தான் நாடியவருக்கு வெற்றியை கொடுக்கிறான்
8. (30:20-25) மண்ணில்
இருந்து மனிதனாக உருவாகி பூமியில் பல்கிப் பெருகுவதும் :
அன்பும் பாசமும் கொண்ட இணைகளை
உருவாக்கி உங்களுக்கு அமைதியைக் கொடுப்பதும் ;
வானங்களையும் பூமியையும் படைத்து
அதில் பல வித நிறங்களில் பலவித மொழி பேசும் மனிதர்களை உருவாக்கியதும் ;
இரவில் நீங்கள் ஓய்வாக உறங்குவதும்
பகலில் அவன் அருளையும் பொருளையும் தேடுவதும் ;
அச்சுறுத்தி இறைநம்பிக்கை ஊட்டும்
மின்னலும் வறண்ட பூமி மழையால் புத்துயிர் பெறுவதும்
இவை அனைத்தும் இறைவனின் அருளுக்கும்
ஆற்றலுக்கும் சான்று சொல்கின்றன
9.. (30:30) நபியும்
அவரைப் பின்பற்றுவோரும் ஒருமையுடன் உண்மையின் பக்கம் திரும்பி இறைவன் காட்டிய
உண்மையின் வழியே நடக்க வேண்டும்
உண்மை நேர்மையில் இறைவன் படைத்த அந்த
வழி மாற்றமில்லாதது என்பதை பலரும் அறிவதில்லை
10. (30:39) செல்வத்தைபெருக்குவதாக
மக்கள் எண்ணும் வட்டி இறைவன் பார்வையில் அப்படி இல்லை
இறைவன் அருளை நாடி மக்கள் கொடுக்கும்
சக்காத் எனும் தருமம் பன்மடங்கு பெருகி நன்மையைக் கொடுக்கும்
11. (30:41) மனிதனின்
செயல் பாடுகளால் பூமியிலும் கடலிலும் தீமை பல்கிப் பெருகி விட்டது..
மனிதர்களைத் திருத்தும் நோக்கில்
இறைவன் அந்தத் தீய செயல்களின் பயனை மனிதனை உணர வைக்கிறான்
12. (30:54) இறைவன்
மனிதனை வலிமையற்றவனாகவே படைத்தான்.
பின்பு வலிமையைக் கொடுத்தான் .பின்பு
மீண்டும் முதுமையையும் வலிமை இன்மையையும் கொடுத்தான்
.எல்லாம் அறிந்த ,வல்லமை மிகுந்த அவன் தான் நாடியதைப்
படைக்கிறான்
13. (30:58) குரானை
மிகத் தெளிவாக பல வழிகளில் விளக்கியிருக்கிறோம் .
ஆனால் சிலர் பிடிவாதமாக அறிந்து கொள்ள
மறுத்து இது பொய் என்கின்றனர்
14. (31:6) மனதை
மயக்கித் திசை திருப்பும் வீணான கவர்ச்சிகளைக் காட்டி மக்களை தீய வழியில்
செலுத்தும் சில அறிவீனர்கள் இருக்கிறார்கள்.
இறைவனை இழிவு படுத்தும் அவர்களுக்கு
மிகவும் இழிவு தரும் வேதனை நிச்சயம்
15. (31:7) அவர்கள் இறை
மொழிகள் ஓதப்படும்போடுது அவை காதில் விழாதது போல ஆணவத்துடன் முகத்தைத் திருப்பிக்
கொள்கிறார்கள்
16. (31:14) பெற்றோரைக்
கவனித்துக் கொள்ளவேண்டியது பிள்ளைகளின் கடமை.
மிகவும் உடல் வலிமையற்ற நிலையில்
பிள்ளையைக் கருவில் சுமந்த தாய் இரண்டாண்டுகள் பாலூட்டினார் .
எனவே எனக்கும் பெற்றோருக்கும் நன்றி
செலுத்துங்கள்
17. (31:18) பூமியில்
செருக்குடன் நடக்காதீர்கள் .
வெறுப்பான பார்வையுடன் பிறரிடமிருந்து
முகத்தைத் திருப்பிக்கொள்ளாதீர்கள் .
ஆணவம் கொண்டோரையும் வீண் பெருமை
பேசுவோரையும் இறைவன் விரும்புவதில்ல
18.(31:19) உரத்த குரல்
கொண்ட கழுதையை யாருக்கும் பிடிக்காது .
எனவே குரலைத்தாழ்த்திப் பேசுங்கள் .
பூமியில் செருக்குடன் நடக்காதீர்கள்
19. (31:20) எண்ணற்ற
வளங்களை இறைவன் மனிதனுக்கு வழங்கியிருக்கிறான் .
வானங்கள் பூமியில் உள்ள அனைத்தும்
மனிதனுக்காகவே படைக்கப்பட்டிருக்கின்றன.
இருந்தும் இறைவனை நம்ப சிலர் மறுக்கிறார்கள்
.
20. (31:34) தீர்ப்பு
நாள், நேரம் பற்றி அறிந்தவன் இறைவன் மட்டுமே. .
அவனே மழையை அனுப்புகிறான் .
தாயின் கருவில் உள்ளது பற்றி அவனே
அறிவான் .
நாளை என்ன நடக்கும் ,மரணம் எந்த இடத்தில் நிகழும் இதெல்லாம் இறைவன்
மட்டுமே அறிவான்
21. (32:4)பூமியையும்
அவற்றிற்கு இடையில் உள்ள அனைத்தையும் இறைவன் ஆறு நாட்களில் படைத்தான். பிறகு அர்ஷ்
எனும் தனது உயர்வான ஆசனத்தில் அமர்ந்தான் .அவனை அன்றி உங்களுக்கு உதவுவர்
யாருமில்லை
22. (32:16)சுகமான
தூக்கத்தை தரும் படுக்கையை உதறிவிட்டு அச்சத்தோடும் ஆர்வத்தோடும் இறைவனை வணங்கும்
அந்த நம்பிக்கையாளர்கள் இறைவன் அவர்களுக்கு அளித்ததிலிருந்து தாரளமாக தான
தருமங்கள் செய்கிறார்கள்
23. (32:26) இதற்கு
முன் பல சமுதாயங்களை இறைவன் அழித்திருக்கிறான். அந்தச் சான்றுகளைப் பார்த்து
இவர்கள் பாடம் கற்றுகொள்ளவில்லை 24.
(32:27) வறண்ட வெற்று நிலத்தில்
மழை நீரைப் பாய்ச்சி அதில் செழிப்பாக பயிர்கள் வளர்வதை இவர்கள் பார்க்கவில்லையா ?
- 25. (33:4) என்
மனைவியின் முதுகுப்புறம் என் அம்மாவுடைய முதுகுப்புறம் போல் இருக்கிறது என்பதைச்
சொல்லி யாரும் தம் மனைவியை மண முறிவு செய்யக்கூடாது :
உங்கள் தத்துப்பிள்ளைகள் உங்கள்
பிள்ளைகள் இல்லை என இறைவன் வகுத்த இரு முக்கிய சட்ட விதிகள் இந்த வசனத்தில்
வருகின்றன
26. (33:10) எதிரிப்படை
உங்களை மேலிருந்தும் கீழிருந்தும் தாக்கிய போது நீங்கள் அச்சத்தில் விழிபிதுங்கி
திகைத்து நின்றீர்கள் .உங்கள் இதயங்கள் உங்கள் தொண்டைக்கு வந்து விட, நீங்கள் இறைவனைப்பற்றி பலவேறு விதமாக சிந்திக்கத் துவங்கினீர்கள்
27. (33:21)இறுதி
தீர்ப்பு நாளில் நம்பிக்கை கொண்டு இறைவனை நினைவு கொள்பவர்களுக்கு அழகிய ஒரு முன்
மாதிரியாக விளங்குவது பெருமானார் நபி ஸல் அவர்கள் வாழ்ந்த முறை
இது குரான் ஜூசு
21ன் சுருக்கமோ,
தொகுப்போ, விளக்கமோ இல்லை .சில குறிப்புகள்
மட்டுமே
குரான் வசனங்களின் கருத்து மட்டுமே
சொல்லியிருக்கிறேன் .முழு மொழிபெயர்ப்பு இல்லை
குரானின் இந்தப்பகுதியில்
விலங்குகள் தங்களுக்குத் தேவையான உணவை
சுமந்து கொண்டு திரிவதில்லை
வட்டி செல்வத்தைப் பெருக்காது
மாறாக சக்காத் போன்ற தருமங்கள் செல்வத்தைப்
பெருக்கும்
வீண் கவர்ச்சி காட்டி மக்களை திசை திருப்புவோருக்கு
மிகக் கடுமையான தண்டனை உண்டு (எனக்கு டிவி நினைவில் வந்தது )
தாய்ப்பால் ஊட்டும் காலம் இரண்டு
ஆண்டுகள்
போன்ற பல செய்திகள் சொலலப்படுகின்றன
மேலும் தத்துப் பிள்ளைகள் உங்கள் பிள்ளைகள்
இல்லை, என்று தெளிவாக்குகிறான் இறைவன்
லிகர் எனும் மணமுறிவு முறை ஒழிக்கப்படுகிறது
.
நேற்.றைய வினா
சிலந்தி வலைக்கு ஒப்பாக இறைவன் எதைச்
சொல்கிறான் ?
விடை
(29:41) ஏக இறைவனை
நம்பாமல் மற்றவற்றை நம்புவோரின் பாதுகாப்பு ஒரு சிலந்தி வலைபோல் மெல்லியதாகும்
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப்பெறுவோர்
சகோ
ஹசன் அலி – முதல் சரியான விடை
சிராஜுதீன்
பாப்டி
ஷர்மதா
இன்றைய வினா
“அவர்களைப்
புறக்கணித்துவிட்டு தீர்ப்பு நாளை எதிர் நோக்குங்கள் “
என்ற பொருள் கொண்ட வசனம் எது ?
21 ஆவது சகரை நிறைவேற்றிக் கொடுத்த இறைவனுக்கு நன்றி
இந்தப் புனித மாதத்தின் நன்மைகள்
அனைத்தும் நம் அனைவருக்கும் நிறைவாகக் கிடைக்க எல்லாம் வல்ல ஏக இறைவன் அருள்
புரிவானாக
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
21ரம்ஜான் (9) 1444
13042023 வியாழன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment