திரு மறை சில குறிப்புகள் 11
பகுதி (ஜூஸு)11
பெயர்
யடஜரூன் 11 Yatazeroon துவக்கம் 9:93
9. At-Tauba Verse 93 நிறைவு 11:5
11. Hud Verse 5
03 042023
1.[9:98] இன்னும் அரபு
மக்களில் சிலர் அவர்கள் செய்யும் தருமத்தை ஒரு தண்டனையாகவும் ,தண்டமாகவும் நினைக்கிறார்கள் .எல்லாம் அறிந்த இறைவன் அவர்களை வேதனைக்கு
உள்ளாக்குவான்
(இது இப்போது பலருக்கும் இது பொருந்தும்
)
2. [9:112] இறைவனின்
நல்லடியார்கள் எப்போதும் இறைவனை வணங்கிக் கொண்டும் ,அவன்
புகழ் பாடிக்கொண்டும் அவனிடம் பாவமன்னிப்புக் கேட்டுக்கொண்டும் அவனுக்குத் தலை
வணங்கி ,சிரம் தாழ்த்திகொண்டும் ,இறைவன்
விதித்த வரம்புகளை மீறாமலும் தீயவற்றை விலக்கி நற்செயல்கள் புரிந்து
கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு நல்ல செய்தி கூறி வாழ்த்துங்கள்
3. (9:113)
இறை நம்பிக்கை அற்றவர்களுக்காக பாவ மன்னிப்பது கோருவது தவறு
தன் தந்தைக்குக் கொடுத்த வாக்கை
காப்பாற்ற இப்ராகிம் நபி தந்தைக்காக பாவமன்னிப்புக் கேட்டார்கள்
பிறகு தந்தை முழுக்க இறைவழிக்கு எதிரானவர்
என்பது தெளிவானதும் தந்தையை விட்டு விலகிப் போய் விட்டார்கள்
4.
[9:128] உங்களில் ஒருவரே இறைதூதராக வந்திருக்கிறார் .உங்கள் நலனில்
மிகுந்த அக்கறை உடையவர் அவர் .மென்மையான குணம் கொண்ட அவர் மிகவும் இரக்க சிந்தனை
உடையவர்
5
(10
1-10) இந்த உலகத்தை
உருவாக்கி உயிர்களைப்படைத்து திரும்பவும் படைக்கும் இறைவன் ஒருவன் மட்டுமே . வானம்,
பூமி, கதிரவன், நிலவு
இரவு, பகல் எல்லாமே அவனது மாட்சிமைக்கு சான்றுகள் ஆகின்றன்
6
(10:13:14)) நிச்சயமாக
நாம் முந்திய சமுதாயங்கள் பலவற்றை அழித்திருக்கிறோம்—புகழ் பெருமையின் உச்சியில்
நின்ற அவர்கள் தவறான வழியில் சென்றதால் . அவர்கள் இடத்தில்
உங்களை நியமித்து உங்கள் செய்லக்ளைக் கண்காணித்து வருகிறோம்
7
(10:19) ஒரே சமுதாயமாக இருந்த மனித குலம் பின் பல் ;வேறு
கொள்கைகைளை உண்டாக்கி பிரிந்து போனாது
8
(10:24.இறைவன் அனுப்பிய மழையால்
பயிர்கள் செழித்து வளன்ர்ந்து மனித்ர்களுக்கும் கால் நடைகளுக்கும் உணவாயின .
பயிர்கள் நன்கு வளர்ந்து இந்த உலகமே அழகான நிலையில் பூமி தங்கள் கட்டுப்பாட்டில்
வந்து விட்டது என மக்கள் பெருமிதம் கொண்டிருந்தனர் .ஆனால் இறைவனை மறுத்த
அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் முகமாக ஒரே நாளில் பயிர்களை ஒன்றும் இல்லாமல்
ஆக்கி விட்டான் இறைவன்
9.
(10:31) வானத்தில் இருந்தும் பூமியில் இருந்தும் வாழ்வாதாரம்
அளிப்பதும், பார்வையையும் செவிப்புலனையும் கட்டுபடுத்துவதும்
உயிர்ப்பிப்பதும் மரிக்கச் செய்வதும், மீண்டும்
உயிர்ப்பிப்பதும்,உலகின் அனைத்து நிகழ்வுகளையும்
கட்டுபடுத்துவதும் அந்த ஏக இறைவன் மட்டுமே
10
(10:37) புனித குரான்
இறைவனால் இறக்கி அருளப்பெற்றது. வேறு யரும் அதைப் படைக்க முடியாது
11
(10:44) நிச்சயமாமாக
இறைவன் எந்தத் தவறும் செய்வதில்லை. மனிதர்கள் தங்களுக்குத் தாங்களே தீங்கு
செய்துகொள்கிறார்கள்
12
(10:69, 70) இறைவனுக்கு
எதிராகப் பொய் புனைபவர்கள் இவ்வுலக வாழ்வில் நலமாக இருப்பது போல் தோன்றலாம் .
ஆனால் இறுதியில் அவர்கள் இறைவனிடமே போய்ச் சேர வேண்டும் . அங்கு அவர்களுக்கு கடும்
தண்டனை காத்திருக்கிறது .
13
..சில பல செய்திகள்,
தேவை,முக்கியத்துவத்துக்கு ஏற்ப குர்ஆனில்
திரும்பத் திரும்ப சொல்லப்படும் அந்த வகையில்
சூரா 10
71-73ல் நுஹ் நபியின் வரலாறும்
10 83-92ல் மூசா
நபியின் வரலாறும் வருகிறது
14
(10:88) மூசா நபி
இறைவனை நோக்கி சொன்னது “இறைவனே நீ பிர்அவுனுக்கும் அவனுடன் இருப்பவர்களுக்கும்
இவ்வுலக வாழ்வில் .செல்வத்தையும் செல்வாக்கும் வழங்கினாய் .அவர்கள் அதைவைத்து
மக்களை வழிதவறச் செய்கிறார்கள் .அவர்கள் செல்வச் செருக்கை அழித்துஅவர்களுக்கு
கொடிய வேதனையை அழித்தால்தான் அவர்கள் நேர்வழிக்குத் திரும்புவார்கள் “
15
(11:92)பின் வரும்
சந்ததியனருக்கு ஒரு படிப்பினை தரும் சான்றாக பிர் அவுனின் உடலை இறைவன் பாதுகாக்கிறான்
16
. (10:100) இறைவன்
நாடினால் ஒழிய யாரும் இறைநம்பிக்கை கொள்ள முடியாது .இதனைப் புரிந்து கொள்ள
முடியாதவர்களுக்கு பெரும்வேதனை காத்திருக்கிறது
\
இது குரான் ஜூசு
11 ன் சுருக்கமோ,
தொகுப்போ, விளக்கமோ இல்லை .சில குறிப்புகள்
மட்டுமே
குரானைப் படிக்க ஒரு தூண்டுதலாக
எடுத்துக் கொள்ளளாம்
குரான் வசனங்களின் கருத்து மட்டுமே
சொல்லியிருக்கிறேன் .முழு மொழிபெயர்ப்பு இல்லை
நேற்.றைய வினா :
சக்காத்
பற்றி ஒரு பொதுக் கேள்வி
உலக
அளவில் வழங்கப்படும் சக்காத்தின் தொகை மொத்தம் எவ்வளவு ?
1/2 trillion dollars
எளிதாக 5 டாலர் என்று நினைவில்
வைத்துக்கொள்ளுங்கள்
அந்த 5க்குப்பின் ஒரு 11 0 க்கள் ௦௦ ௦௦
௦௦ ௦௦ ௦௦௦
இந்திய ரூபாயில்
5x80 4௦௦
400 குப்பின் 11 0 க்கள்
400 000 000 000 00
நாற்பது
லட்சம் கோடி
இது சில
ஆண்டுகள் முன் காணொளி ஒன்றில் வந்த செய்தி
இன்னொரு
செய்தி
உலகில் அதிக
அளவில் முஸ்லிம்கள் இருப்பது நம்
நாட்டில்தான்
உலக முஸ்லிம் மக்கள் தொகையில் ஏறத் தாழ 8%
இந்தியாவில்
நம் நாட்டில்
சக்காத்துத் தொகை ஆண்டுக்கு 7500 கோடி முதல் 40 ஆயிரம் கோடி வரை இருக்கலாம் என
நம்பப்படுகிறது
எதற்கு இந்த
செய்திகள் ?
நீங்களே
சிந்தித்து செயலாற்றுங்கள்
=------”
இன்றைய வினா
சுராஹ் பத்தில் சூராவின் பெயராகிய
நபியின் பெயர் வரும் வசனம் எது ? என்ன சொல்லப்படுகிறது
11 ஆவது சகரை நிறைவேற்றிக் கொடுத்த இறைவனுக்கு
நன்றி
இந்தப் புனித மாதத்தின் நன்மைகள்
அனைத்தும் நம் அனைவருக்கும் நிறைவாகக் கிடைக்க எல்லாம் வல்ல ஏக இறைவன் அருள்
புரிவானாக
இறைவன் நாடினால் மீண்டும்
சிந்திப்போம்
11 ரம்ஜான் (9) 1444
03042023 திங்கள்
சர்புதீன் பீ
--------------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment