மருமக்கள் மான்மியம்
“உங்கள் மலரும் நினைவுகளில் எங்களைப்பற்றி எழுத மாட்டீர்களா? “
அத்தாவைபற்றி பதிவு
வெளியிட்டபோது கட்செவியில் எனக்கு இப்படி ஒரு குரல் அஞ்சல் வந்தது .
அனுப்பியது ராஜாத்தி (மெஹராஜ் அக்கா)
“ எல்லோரைப்பற்றியும், உன்னைப்பற்றியும்
ஏற்கனவே எழுதியிருகிக்கிறேன் .Blogல் தேடினால கிடைக்கும் “
என்று பதில் அனுப்பினேன்.
கால வெள்ளத்தின் ஓட்டம் மனதில் பதிவதில்லை . நான் சிறு சிறு
பிள்ளைகளாகப் பார்த்து இன்னும் சிறு பிள்ளைகளாகவே நினைத்துக் கொண்டிருக்கிறேன்
அவர்களெல்லாம் வளர்ந்து பலர் பேரன் பேத்தி எடுத்து விட்டார்கள்
.படித்துப் பட்டம் பெற்று மருத்துவர்,
வழக்கறிஞர்கள் தொழில், அறிவியல்
வல்லுனர்கள் ஆக உருவாகி விட்டார்கள்
இருந்தாலும் சின்னப்பிள்ளைகள்தானே என்ற எண்ணத்தில் உடன் பிறப்புகளின்
மக்கள் பற்றி சில நினைவுகள் ,
பாதுகாப்பு கருதி சற்று செயற்கையாக இருந்தாலும் ன் னை ர். ஆக்கி
விட்டேன்
எங்கள் குடும்பத்தின் அடுத்த தலை முறையின் முதல் வாரிசான ஷாகுல்
(முத்தக்கா மகன்) பிறந்தது காரைக்குடியில்
கோவையில் அத்தாவின் நண்பர் நீதி அரசர் பெயர் நினைவில்லை.. அவரின் விசாலமான அரசு இல்லத்திற்கும்
ஆடுதுறையில் உள்ள அவர் சொந்த வீட்டிற்கும் சென்று வந்ததுண்டு..
அவரது அரசு இல்லத்திற்கு எங்கள் அக்கா மகன் சாகுல் ஒரு முறை எங்களுடன் வந்திருந்தார்.. பள்ளிக்குச்
செல்லா இளஞ்சிறுவனாய் இருந்த அவர் அங்கு எல்லோருக்கும் கொடுத்த பானம்-சர்பத்-
சிவப்பு நிறமாகவும் அவருக்குக் கொடுத்தது மட்டும் நீர் நிறமாகவும் இருந்ததனால்
ஐயமுற்று பானத்தில் விரலை விட்டு நாக்கில் வைத்து சோதித்தது ஒரு நகைச்சவை நினவு
சிரின் (நூர்) ஷேக்,, பானு நிலோ
(முத்து ) வஹாப் (ஜென்னத்,) ராஜா, கதீஜா (மும்தாஜ்) இதயதுல்லாஹ் , இப்ரு (ஜோதி) சிட்டு
,நௌசாத் ரபி (சுராஜ்) பிறந்தது நெல்லையில்
பானுவுக்கு காரம், உரைப்பு மிகவும் பிடிக்கும். ஊறுகாயை அள்ளி
அள்ளிச்சாப்பிடும் (EMI என்ற
சிறப்புப் பெயர் பானுவுக்கு)
வகாப் இரவில் வெகு நேரம் தூங்காமல் திரிவார். எதாவது கோரிக்கை – முயல்
வேண்டும் , அணில் வேண்டும்- என்பது போல் –வைத்துக்கொண்டே இருப்பார் ..அயிரை மீன்
பற்றி இரங்கி கண்ணீர் வடிப்பார் –அயிரை மீன் சாப்பிடும் முன்
சாலிஹா தலை சீவ பொறுமையாய்க் கொடுத்துகொண்டே இருக்கும். சீவி
முடித்ததும் சீப்பை வாங்கி வாயில் வைத்துக்கடிக்கும்
கதீஜா (மும்தாஜ் அக்கா) சிறு வயதில் வீட்டை விட்டு தனியாக வெளியே போய்
ஊரைச் சுற்றிப்பார்த்து விட்டு வந்தது
பொள்ளாச்சிக்குப் பிறகு திருநெல்வேலி குறுக்குத்துறையில் இருக்கையில்
சாகுல் எங்களுடன் இருந்தார் அங்கிருந்து ஆரம்பப் பள்ளி சென்று வந்தார். பள்ளியைச்
சேர்ந்த நகராட்சி ஊழியர், தினமும் மிதி வண்டியில் பள்ளிக்கு அழைத்துச் சென்று,
வீட்டில் கொண்டு வந்து விடுவார்.
ஷாகுல் நன்றாகப் படிப்பார்.
ராப்பாடச் சீட்டு என்ற வழக்கம் அப்போது நெல்லையில் நடை முறையில்
இருந்தது. ஆரம்பப் பள்ளி மாணவர்கள் தினமும் இரவில் பாடம் படித்ததாக வீட்டில் இருந்து எழுதி வாங்கி
வர வேண்டும். இதுதான் ராப்பாடச் சீட்டு
ஒரு கோடை விடுமுறையில் ஷாஹுலும் வஹாபும் எங்கள் வீட்டில்
இருந்தார்கள். பொதுவாக சாப்பாட்டை சட்டை செய்யாமல் இருக்கும் வஹாப் ஷாஹுலோடு
போட்டி போட்டுக்கொண்டு மிக விரைவாகச்
சாப்பிடுவார்.
ஷாஹுலுக்கு அங்கு சுன்னத் செய்யப்பட்டது வஹாபுக்குமா என்பது
நினைவில்லை
.
ராஜாத்தி (மெஹராஜ்)க்கு மருந்து புகட்டுவது ஒரு வேடிக்கை விளையாட்டாக
இருக்கும். அம்மா (மெஹராஜ்) கையில் மருந்து மாத்திரையை வைத்துக்கொண்டு
கூப்பிட்டால் வர மாட்டேன் என்று அடம் பிடித்து வீடு முழுக்க பந்து போல்உருண்டு
ஓடும். பிடித்து மடியில் படுக்க வைத்தால் எந்த வித மறுப்புமின்றி மருந்து
மாத்திரையை விழுங்கி விடும்
ஷிரீன் பிறந்தது ஒரு மறக்க முடியாத நிகழ்வு. பேறுகாலம் சிக்கலாக
இருக்கும் என்று பயமுறுத்திய மருத்துவர்கள், மேட்டுத்திடல் (ஹை கிரவுண்ட் )
அரசு மாவட்டத் தலைமை மருத்துவ மனைக்கு
கொண்டு போகச் சொன்னார்கள்.
அந்த மருத்தவமனை ஒரு கொடுங்கோல் ஆட்சிக்கூடம் போல் இருந்தது. மருத்துவர் முதல் பணியாளர்கள்
வரை அனைவரும் கடுவன் பூனை போல் சிடுசிடுத்த முகமாக இருப்பார்கள். நோயாளிளின்
அருகில் யாரும் இருக்க விடாமல் விரட்டுவார்கள் .ஆனால் நொடிக்கொருமுறை அதை வாங்கிவா
இதைக்கொண்டு என்று சொல்வார்கள் அதற்கெல்லாம் மேல் நோயாளிகளைத் திட்டியும்
அடித்தும் கொடுமைப் படுத்துவார்கள்
உடனடியாக பெதடின் ஊசி மருந்து வேண்டும் என்று சொன்னார்கள். அது
சந்திப்பில் உள்ள ஒரே கடையில்தான் கிடைக்கும் என்றும் அவர்களே சொன்னார்கள்.
மருத்துவ மனைக்கும் அந்தக்கடைக்கும்
ஏழு.எட்டு கி மி தொலைவு இருக்கும். நான் மிதிவண்டியில் போய் வாங்கி
வருவதற்குள் குழந்தை பிறந்து விட்டது.
வீட்டுக்கு வந்ததும் அத்தா .அரசுக்கு மருத்துவமனை பற்றி விரிவாக ஒரு
புகார் கடிதம் எழுதியது. அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு பல சீர்திருத்தங்கள்
செய்யப்பட்டன ( ஆக்கபூர்வமாக இயங்கும் அரசு ஒரு காலத்தில் தமிழ் நாட்டில் இருந்தது ).
இதயத்துல்லா எங்கள் வீட்டில் இருந்தார், வயதுக்கு மீறிய பேச்சு, நல்ல
சொல் வளம்.
இப்ரு அழகிய தோற்றம் உதட்டுச்சாயம் பூசியது போன்ற உதடுகள் .என்றும்
இதயக்கனிதான் இப்ரு ஒரு தடவை மாடியின் திறந்த வெளியில் (மொட்டை மாடியில்) இருந்து
பக்கத்து வீட்டுக்குள் விழுந்து விட்டார் . மிக உயரத்தில் இருந்து விழுந்தும்
இறைவன் அருளால் அடி, காயம் எதுவில்லாமல் தப்பித்தார்.
சிட்டு –எழுத்தும் படங்களும் மிக அழகாக இருக்கும்.
நவ்ஷாத்தின் அமைதியான நிதானமான குறும்புத்தனம் ரசிக்கும்படி
இருக்கும்...எங்கள் அம்மா “ ஒரு கட்டுப்பாட்டு இல்லை” என்று திட்டினால்
கட்டுப்பாடு குட்டுப்பாடு என்று திருப்பிச் சொல்வார். மாமி என்றால் மாமி கூமி
என்பார். அந்தக் குழந்தைத்தனம் இப்போதும் அவரிடம் மிச்சமிருக்கிறது
ரபி சிறு வயதிலேயே பேச்சு, நடவடிக்கை எல்லாம் smart
ஆக இருக்கும்
ஒருமுறை நான் வெளியூர் போனபோது பயணப்பெட்டியை மிக அழகாக பாப்பா (ஜென்னத்
அக்கா)அடுக்கிக்கொடுத்து வியக்க வைத்தது
முத்தக்கா மெஹராஜ் அக்காவின் புடவையைக் கட்டிப்பார்க்க,
கைக்குழந்தையாக இருந்த இப்ராஹீம் உற்று உற்றுப் பார்த்த பார்வை தாங்க முடியாமல்
முத்தக்கா உடனே புடவையை மாற்றி விட்டது (நோக்கு வர்மம்?)
முத்தக்கா மகள் பானு ஜென்னத் அக்கா மகள் பாப்பா , மும்தாஜ் அக்கா மகள்
சாலிஹா ,மெஹராஜ் அக்கா மகள் மீரா பொள்ளாச்சியில் பிறந்தார்கள் என நினவு. ராஜா
(மும்தாஜ் ) பாப்பாவை பொள்ளாச்சி என்று உச்சரிப்பு வராமல் பொன்டாச்சிப் பாப்பா
என்று சொல்வார்
மீரா மிகவும் மெலிந்த உருவமாக இருக்கும். போகப்போக சரியாகிவிட்டது
சாகுல் எங்கள் வீட்டில் இருந்தார் .பொள்ளாச்சிக்கு வந்த அத்தம்மாவுக்கும்
அவருக்கும் தலைமுறை இடைவெளிக்குரிய கருத்து மோதல்கள் அவ்வப்போது நடக்கும்
சிறுவனாக இருந்த சாகுல் அடம் பிடித்து அழ ஆரம்பித்தால் நிறுத்தவே
மாட்டார். சற்றுத் தொலைவில் உள்ள பூங்காவுக்குத் தூக்கிச் சென்றால் சிறிது
நேரத்தில் அழுகை அடங்கும்
சாகுலுக்கு முன்னெச்சரிக்கை உணர்வு அதிகம். வீட்டில் உள்ள முற்றத்தில்
“ நான் சின்னப்பிள்ளை எனக்கு இறங்கத்தெரியாது “ என்று சொல்லி இறங்க மாட்டார். அவரை
விட இளையவரான ராஜா (பீர்) அந்த முற்றத்தில் ஒரே தாவலில் குதித்து விடுவார். சாகுல்
மேலும் குதித்து விடுவார்
நூரக்கா முஸ்தபா அண்ணன் பிள்ளைகள் வந்து சில நாட்கள் முத்தூரில் தங்கிப்போனார்கள்..அன்று
மின் தடை . தொலைக்காட்சியில் ஒரு நல்ல படம் ஒளிபரப்பானது .. மின்னாக்கி (
generator ) பொருத்தி படம் பார்த்தோம்
என் நினைவில் இருப்பவற்றை பதிவு செய்து விட்டேன்...அரை
நூற்றாண்டுக்கும் மேலான நினைவுகள்
கோர்வையாக எழுத
முயற்சிக்கவில்லை .
ஏதேனும் விட்டுப்போயிருந்தால் அதைப் பொருட்படுத்த வேண்டாம்
இ (க)டைச்செருகல்
அத்தா பற்றிய பதிவுகளில் சில விடுதல்கள் பற்றி நூர் அக்கா
எழுதியிருந்தது ,நான் எழுதுவது என் கருத்துகள் என் பார்வையில். உடன் பிறப்புகள்
அவரவர் கருத்துக்களை அத்தா பற்றி, அம்மா பற்றி குடும்பம் பற்றி எழுதினால் ஒரு முழு
நூல் போல் உருவாகும். இது பற்றி நான் பல முறை எழுதியிருக்கிறேன், காலம் கடக்கும்
பொது நினைவுகள் மறையலாம் ..அதற்குள் எழுதத் துவங்கலாமே
ஏற்கனவே ஜோதியக்கா இரண்டு பதிவுகளை எனக்கு அனுப்பியுள்ளது .விரைவில்
அது வெளியாகும் .
மற்றவர்கள் ?
மூளைக்கு வேலை
ஆயிரத்தில் ஐநூறைக் கழித்து பின்
நாற்பத்தியாறைக் கழித்தால் வரும் எண் எதைக்குறிக்கிறது
இதுதான் சென்ற வாரப்புதிர்
இது வரை யாரும் சரியான விடை
சொல்லவில்லை.
ஒரு குறிப்பு- இது நினைவுத் திறன்
சார்ந்த புதிர். ஏற்கனவே நான் எழுதிய ஒரு நிகழ்வு பற்றியது
இந்தக்குறிப்புடன் இதையே இந்த
வாரப்புதிராக வைத்துக்கொள்ளுங்கள்
இறைவன் நாடினால்
மீண்டும்
சந்திப்போம்
வலைநூல் முகவரி
sherfuddinp.blogspot.com