பகுதி 2
முதல் பகுதியை வெளியிட்டு தொடர்ந்து எழுத அனுமதித்த குழு
நிர்வாகிகளுக்கு நன்றி
நிறைய விருப்பங்களும் கருத்துக்களும் தெரிவித்து ஊக்கமளித்த நல்ல
உள்ளங்கள் அனைவற்றிற்கும் நன்றி நன்றி
சென்ற பகுதியில் கடலூரின் குறைபாடுகள் பலபற்றிப் பொதுவாகப் பார்த்தோம்
எல்லா பிரச்சனைகளையும் சேர்த்துப்பார்த்தால் குழப்பம், திகைப்பு,
மலைப்புத்தான் மிஞ்சும்
எனவே முதலில் ஒன்றை எடுத்து அலசிப்பார்க்கலாம் என்று எண்ணுகையில் என்
மனதில் தோன்றியது தூய்மை , சுத்தம், சுகாதாரம்
நாடு தழுவிய தூய்மை இந்தியா திட்டம் இருக்கிறது
ஸ்மார்ட் சிட்டி திட்டம் பெரிதாகப் பேசப்பட்டது
மாவட்ட அளவில் முழு சுகாதாரத் திட்டம் செயல்
பாட்டில் உள்.ளது
இதற்கெல்லாம் மேல் ஊரைத் தூய்மையாக வைப்பதை ஒரு தலையாய பணியாகக் கொண்ட
நகராட்சி இருக்கிறது
நகர சுகாதார அதிகாரி, சுகாதார ஆய்வாளர்கள் , துப்புரவுப்பணியாளர்கள்
என ஒரு சிறிய படையே இருக்கிறது
இவ்வளவு இருந்தும் கடலூர் நகர் சுத்தமாக இல்லை, இல்லை என உரக்கக் கூவ
வேண்டும் போல் இருக்கிறது
ஒழுங்கான குப்பைத்தொட்டிகள் கிடையாது . இருக்கும் சில தொட்டிகளும் நிரம்பி
வழியும்
கழிவு நீர்த்தேக்கம் சொல்லி மாளாது .
தொடரி நிலையத்துக்கு தேரடி தெருவிலிருந்து செல்கையில் முகம் சுளிக்க
வைக்கும் கழிவு நீர்.
பேருந்து நிலைய சுகாதாரம் சொல்லவே வேண்டாம்
செமண்டலம் குடிமைப்பொருள் வழங்கு கிட்டங்கியின் முன்னால் மழை
நாட்களில் குளம்போல் தேங்கி நிற்கும் கழிவு நீர்
பின் பகுதியில் எப்போதும் ஒரு துர் நாற்றம்
தலைமை அஞ்சல் நிலைய நுழைவு வாயில் அருகில் இரு பக்கமும் கழிவு நீர் –
இந்த தெருவில்தான் எதிர் வரிசையில் ஆட்சியர் குடியிருப்பு -,
(இதை நான் படத்துடன் பதிவு செய்திருந்தேன் . அதற்கு ஒரு அன்பர்
நகாட்சி ஆணையர் இல்லம் முன்பு பன்றி மேய்கிறது என்று குறிப்பிட்டிருந்தார் )
பழமுதிர் நிலையம் முன்பு
நீதியரசர்கள் குடியிருப்புப் பகுதி
இப்படி பட்டியல் நீண்டுகொண்டே போகிறது
முதுநகர் தினசரிச்சந்தையில் மழைக் காலத்தில் நுழைந்து விட்டால் சைவ
அசைவ உணவுகள் எல்லாம் வெறுத்துப்போகும் .
கழிவு நீர்க் கால்வாய்களை சுத்தம் செய்கிறோம் என்று அதிலிருக்கும்
குப்பை சேர்ந்த கழிவு மண்ணை அள்ளி அப்படியே சாலை ஓரங்களில் குவித்து வைக்கும்
அவலம் வேறு
நகராட்சி எல்லைக்கு அப்பால் இருக்கும் சாவடி, கோண்டூர் இங்கெல்லாம்
தூய்மைப்பணி என்று ஓன்று இருப்பாதே ஊராட்சிக்கு மறந்து போய் விட்டது .தேர்தல்
நடக்கவில்லை எனவே ஊராட்சி, உறுப்பினர்கள் இல்லை எனபது ஒரு சாக்கு .
செயல் அலுவலர் என்ன செய்கிறார் ?
காலையில் தொழுகைக்காக கோண்டுரில் என் வீட்டிலிருந்து சாவடி
பள்ளிவாசலுக்குப் போகும்போது மூக்கைப் பொத்திகொண்டுதான் போகவேண்டும் . குப்பை
மேடுகள், தங்குதடையின்றி உலவும் பன்றிகள், செடி மறைவில் இயற்கையின் அழைப்புக்காக
ஒதுங்கும் பெண்கள்- நாலு ஆண்டுகளாக இவற்றில் எந்த மாற்றமும் இல்லை
காற்று மாசு ஒரு மிகப்பெரிய சுகாதாரப் பிரச்சினை. அதைத் தனியாகப்
பார்ப்போம்
எனக்குத் தெரிந்த அளவுக்கு தூய்மைக் குறைபாடுகளை எடுத்துக்
காட்டியிருக்கிறேன்
இவையெல்லாம் வெறும் எடுத்துக்காட்டுகள்தான்.
கடலூரில் எந்த ஒரு பொது இடமும் பளீரென்று மிகவும் சுத்தமாக இருப்பதாய்
சொல்ல முடியாது
இவற்றையெல்லாம் எப்படி சரி செய்யப்போகிறோம் ?
அடுத்த பகுதியில் பார்ப்போம்
27 06 2018 FB kataloor sirakukal
12 07 18 blog
No comments:
Post a Comment