ஆடும் ஆடும்
ஐந்து வாரங்கள் தொடர்ந்து உறவுகள் பற்றி
எழுதினேன் .எல்லோருக்கும் ஓரளவு தெளிவு கிடைத்திருக்கும்
சில காலம் முன்பு .ஒரு விருந்தில் உணவு உண்டு கொண்டிருந்தபோது என்
அருகில் இருந்தவர் விருந்தளிப்பவரடம் கறி ஆட்டுக்கறி போலிருக்கிறது சரியாக
வேகவில்லை என்றார்
விருந்தளிப்பவர் முகத்தில் ஒரு வியப்பு – என்ன
இப்படிச் சொல்கிறீர்கள் நான் எப்போது ஆட்டுக்கறிதான் வாங்குவேன் . மாடெல்லாம்
கிடையாது என்றார்
இருவர் சொன்னதும் ஒரே சொல்தான் – ஆடு.
ஆட்டுக்கறி – ஆனால் இருவரும் வேறு வேறு பொருளில் பயன்படுத்தினார்கள்
சாப்பிட்டவர் குறிப்பிட்டது பெண் ஆடு என்ற
பொருளில் . விருந்தளிப்பவர் சொன்னது ஆடு என்ற பொதுவான பொருளில்
.
இது பற்றி சிறிது விளக்கமாகப் பார்ப்போம்
ஆடுகளில் மிகப்பலவகை இருந்தாலும் உணவுக்குப்
பயன்படுவது பெரும்பாலும் இரண்டே இரண்டுதான்
செம்மறி ஆடு (Sheep)
வெள்ளாடு (Goat)
இரண்டிலும் ஆண் பெண் உண்டு
செம்மறியில் ஆண் Ram பெண் Ewe என்று சொல்லப்படும்
வெள்ளாட்டில் ஆண் He goat , பெண் She goat
பேச்சு வழக்கில் இரண்டு ஆண் ஆடுகளும் கிடாய்
என்றும்
பெண் ஆடுகள் ஆடு, பெ(பொ)ட்டையாடு என்றும்
அறியப்படும்
இதைத்தான் சாப்பிட்டவர் ஆடு (பெண்) என்று
குறிப்பிட்டார் .
செம்மறியாடு சற்று முரடாக ஒரு புழுதி படிந்த
நிறத்தில் இருக்கும்
வெள்ளாடு வெள்ளை. கருப்பு, என பல நிறங்களிலும்
சற்று மெலிதாக இருக்கும்
சுவை விரும்புவோர் செம்மறிக்கறிதான் வாங்குவார்கள்
.அதில் கொழுப்புச்சத்து அதிகமாக இருக்கும். பிரியாணிக்கு அதுதான் பொருத்தமாக
இருக்கும்
சுவையை விட உடல் நலம்தான் பெரிது என்பவர்கள் செம்மறிக்கறியை விரும்புவர்.. அதில் கொழுப்புச்சத்து குறைவு என்பார்கள்
..பத்திய உணவு உண்பவர்கள் வெள்ளாட்டுக்கறியை சாப்பிடுவார்கள்
கறிக்கடையில் போய் வெள்ளாடு எது செம்மறி ஆடு எது
என்று கண்டு பிடிப்பது எளிதல்ல. கடைக்காரர் சொல்வதைக் கேட்டுக்கொள்ள வேண்டியதுதான்
ஆடு ஆணா பெண்ணா என்பதில் கவனம் தேவை. ஆண்தான்
சமையலுக்கு ஏற்றது. பெண் ஆட்டுக்கறி எளிதில் வேகாது என்பார்கள்
பின் தொடைக்கறி பிரியாணி , பொரியலுக்கு
பொருத்தமாக இருக்கும் குழம்புக்கு முன் தொடை
செம்மறியா, வெள்ளாடா, ஆணா பெண்ணா முன் தொடையா
பின் தொடையா என்றெல்லாம் குழம்பாமல் இருக்க ஒரு எளிய வழி இருக்கிறது ..ஒரே கடையில்
தொடர்ந்து வாங்க வேண்டும் . நம் தேவை என்ன என்பதை கடைக்காரரிடம் சொல்லி நல்லதாய்க்
கொடுங்கள் என்று ஒவ்வொரு முறையும் சொல்ல வேண்டும்
பெரும்பாலும் ஏமாற்ற மாட்டார்கள் .கறியில் இருக்கும்
கழலைக்கட்டிகளை எடுத்து விடச் சொல்ல வேண்டும்
ஆட்டின் உடல் நலத்தை ஈரலைப் பார்த்து ஓரளவு
அறிந்துகொள்ளலாம் .ஈரல் மிகவும் சுருங்கிப்போய் நிறம் மாறி இருந்தால் அந்த
ஆட்டுகறியை வாங்கக்கூடாது
நல்ல கறி என்பதற்கு சான்றாக நகராட்சி அலுவலர்கள்
ஆட்டுத்தொடையில் முத்திரை வைப்பார்கள்
அதிக அளவில் கறி வாங்கும்போது தொடையை நீள வாக்கில்
அறுத்துப்பார்க்க வேண்டும் .கருப்பு நிறம் தெரிந்தால் அதை வாங்கக்கூடாது
மொழியில் துவங்கி தொடை வரை போய்விட்டது. சரி
இதுவும் ஒரு பயனுள்ள தகவல் என்றே தோன்றியது
அடுத்த வாரம் வேறொரு பதிவில்
வலைநூல் முகவரி
sherfuddinp.blogspot.com
No comments:
Post a Comment