உறவுகள்
சாவி எழுதிய வாஷிங்டனில் திருமணம் தொடர் மூலம் சம்பந்திச் சண்டை என்ற
சொல் பெரிய அளவில் பரவியது
சம்பந்தி என்ற சொல்லுக்கு நேரான சொல் ஆங்கிலத்தில் இல்லை
உங்கள் பெற்றோருக்கு உங்கள் துணை(Life Partner)யின்
பெற்றோர் சம்பந்தி ஆவார்கள்
இதில் ஆண் பால் பெண்பால் ஒருமை பன்மை போன்ற வேறுபாடுகள் இருப்பதாகத்
தெரியவில்லை
சம்பந்தி அம்மா என்பது பயன்பாட்டில் இருந்தாலும் பொதுச் சொல்லான
சம்பந்தி யே எல்லோரும் சொலவது
திருமணத்தில் இணையும் ஆண் பெண் கணவன் மனைவி என்று அறியப்படுகிறார்கள்
நீங்கள் ஆண் என்றால் உங்கள் துணை உங்களுக்கு மனைவி(Wife)
இதுவே நீங்கள் பெண் என்றால் உங்கள் துணை உங்களுக்கு கணவன் (Husband)
உங்கள் துணையின் பெற்றோர் நீங்கள் ஆணானாலும் பெண்ணானாலும் உங்களுக்கு
மாமனார் (Father in Law) மாமியார் (Mother in Law )
ஆவார்கள்
உங்கள் மாமனார் மாமியாருக்கு
நீங்கள் ஆணாக இருந்தால் மருமகன் (Son in Law)
பெண்ணாக இருந்தால் மருமகள் (Daughter in Law)
நீங்கள்ஆண் என்றால் உங்கள் துணைவியின் உடன் பிறப்புகளில்
ஆண்களுக்கு மச்சினன் /மைத்துனன் (Brother in Law) என்ற சொற்களும்
பெண்களுக்கு மச்சினி ,மைத்துனி , கொழுந்தியா (Sister in Law ) என்ற சொற்களும் பயன்பாட்டில் உள்ளன
நீங்கள் பெண் என்றால் உங்கள் துணைவரின் உடன்பிறப்புகளில்
ஆண்களைக் குறிக்க கொழுந்தன்,
,மச்சினன் (Brother in Law) என்ற சொற்களும்
பயன்படுகின்றன
பெண்களைக் குறிக்க
நாத்தனார் என்ற சிறப்புச் சொல் இருக்கிறது
கொங்கு மண்டலத்தில் நங்கையார் என்ற சொல் வழக்கில் உள்ளது
உங்கள் அண்ணன் மனைவி உங்களுக்கு அண்ணி முறை
அண்ணன் மனைவி தம்பி மனைவி ஓரகத்திகள் (Co sisters) என்று
சொல்லப்படுவார்கள்
அக்கா தம்பியின் கணவர்கள் சகலர், சகலை ,சட்டகர் (Co brothers)
எனப்படுவர்
உறவுகள் பற்றிய விளக்கம் போதும் என தோன்றுகிறது .இதற்கு மேலும்
விவரித்தால் குழப்பமாகி விடும்
அடுத்த வாரம் வேறொரு பகுதி
வலைநூல் முகவரி
sherfuddinp.blogspot.com
சிறப்பு
ReplyDelete