எந்தையும் தாயும்
கம்பனை ரசிக்க எனக்குக் கற்றுகொடுத்தவர் அறைத்தோழர் காதர் முஹைதீன்
என்று முகநூல் தோழர் டி பீ கே ஒரு செய்தியைப் பதிந்திருந்தார்
அதற்கு நான் எங்கள் தந்தை ஹாஜி கா பீர்முகமது அவர்கள் பற்றி ஏறத்தாழ
அரை நூற்றாண்டுக்கு முன் திருநெல்வேலியில் நிகழ்ந்த ஒரு செய்தியை சுருக்கமாகப் பதிந்தேன் ---
கனரா வங்கி துணைப் பொது மேலாளர் திரு வெங்கட்ராமன் (எஸ் வீ)
அவர்களுக்கு நெல்லையில் அளிக்கப்பட்ட வரவேற்பில் எங்கள் தந்தை ஆற்றிய உரையில் அவர்
கையாண்ட கம்ப இராமாயண மேற்கோள்களை திரு எஸ் வீ மிகவும் ரசித்து வியந்து
பாராட்டினார் -----
தோழர் டி பீ கே அதற்கு----
நெல்லை நகரமன்ற ஆணையாளர் .......
அந்தக்கூட்டத்தில் நானும் கலந்துகொண்டு அவர் உரையைக் கேட்டேன் .
அழகான உரை –
என பதில் போட்டார்
காலம் இடம் என்ற வரையறைகளைக் கடந்து பிறர் நினைவில் நிலைத்திருக்கும் பெருமைமிகு
எங்கள் தந்தை பற்றிய சில நினைவுகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்
.
அப்பாவை நாங்கள் பேச்சு வழக்கில் சொல்லும் அத்தா என்ற சொல்லைப்
பயன்படுத்தினால் இயல்பாக இருக்கும்
அத்தா என்று சொன்னால் எனக்கு உடன் நினைவுக்கு வருபவை
வையத்து வாழ்வாங்கு வாழ்பவன்----- என்ற குறள்
அடுத்து some
are born great some become great ------என்ற ஷேக்ஸ் பியர் மொழி
எங்கள்சொந்த ஊரான திருப்பத்தூரில் (சிவகங்கை) ஒவ்வொரு
குடும்பத்துக்கும் ஒரு பட்டப்பெயர் இருக்கும்.
எங்கள் குடும்பத்துப்பெயர் முனுசு அம்பலார் என்பதாகும் .முனுசு என்பது
முன்சீப் என்பதன் திரிபு என்பார்கள் .ஊருக்கு நீதி சொல்லும் குடும்பம்
சின்ன துரை என்றுதான் அத்தாவை எல்லோரும் அழைப்பார்கள்
...சிவகங்கையில்
பள்ளிப்படிப்பு .
உணவகத்தில் காலை உணவு கஞ்சியும் நேற்று வைத்த மீன் குழம்பும்தான்
திரு அண்ணாமலைச் செட்டியார்
எங்கள் வீட்டுக்கு நேரில் வந்து அவர் வண்டியிலேயே அத்தாவை அழைத்துச்சென்று
பல்கலைக்கழகத்தில் B.Sc.,
Honours கணிதவியல் வகுப்பில் சேர்த்து மாதம் ஒரு ரூபாய் உதவித்தொகையும்
வழங்கினார்
கணிதத் தேர்வில் அத்தா நூற்றுக்கு நூற்றியிருபது மதிப்பெண் பெறுவது
வழக்கம்
கேள்வித்தாளில் உள்ள கேள்விகளில் முக்கால் பங்குக்கு சரியான விடை
எழுதினால் முழு மதிப்பெண் கிடைக்கும். அதற்கு மேலும் தெரிந்தவர்கள் முடிந்தவர்கள்
எழுதலாம் என்று ஒரு விதி இருந்ததாம் இப்போது அந்த விதி எங்காவது இருக்கிறதா என்று
தெரியவில்லை
இறுதித் தேர்வு காலத்தில் அத்தாவின் அத்தா காலமானதால் தேர்வு
எழுதமுடியாமல் போக ஹானர்ஸ் இல்லாமல் பீ எஸ்ஸி பட்டம் வழங்கப்பட்டது
எங்கள் குடும்பத்தில், எங்கள் ஊரில் முதல் பட்டதாரி , முதல் அரசு இதழ்
பதிவு அதிகாரி , (Gazetted
Officer) ,முதலில் ஹஜ் புனிதப்பயணம் செய்தவர் என்ற பல முதல்கள் எங்கள்
அத்தாவின் சிறப்புக்கள்
முகத்தில் ஒரு புன்னகை, எளிதில் யாருடனும் பழகும் குணம் , சிறுவர்களா
காரம் போர்ட் விளையாடுவோம் , இளைஞர்களா சீட்டாடுவோம் முதியவர்களா இலக்கியம் பேசுவோம் அதையும் தாண்டி
ஆன்மிகம் பேசுவோம் என்று எந்தக் குழுவிலும் கலந்து விடும் தன்மை
எதையும் எளிதில் புரிந்துகொண்டு உடனடி முடிவெடுக்கும் ஆளுமைத்திறனால்
மிகச்சிறந்த நிர்வாகியாக வலம் வந்தவர்
நல்ல வாழ்க்கைத்துணை
,குறைவற்ற மக்கட்செல்வம், நிறைய பேரன் பேத்திகள் என நிறைவான வாழ்க்கை
நல்ல கலை இலக்கிய ரசனை
.உணவை ரசித்து ருசிக்கும் குணம்
.மீன், முட்டை ,
மாம்பழம் பலாப்பழம் வாழைப்பழம், பால் காபி இவையெல்லாம் மிகப்பிடித்த உணவுகள்
கால் லிட்டர் பாலை தண்ணீர் கலக்காமல் காய்ச்சி நெஸ்கபே தூள் கலந்து
அளவாக சீனி போட்டு குடிப்பது ,
.தேனீரில் வெண்ணெய் போட்டுக் குடிப்பது
அத்தாவின் சிறப்பு உணவுகள்
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அசைவ உணவு விடுதி துவங்கியதும் அத்தாதான்
அத்தாவின் சாதனைகள் சிறப்புகள் சொல்லிக்கொண்டே போகலாம். அலுவலகப்
பணியாக அத்தா வெளியே போகும்போது பலமுறை நானும் போகும் வாய்ப்பு கிடைத்தது
காலையில் பெரும்பாலும் அலுவலகம் போவது கிடையாது .ஆறரை மணிகெல்லாம் ஒரு
சுகாதார ஆய்வாளர் வீட்டுக்கு வருவார்.
நகரின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு நாள் போய் முழு ஆய்வு நடக்கும் .தெருவில் குப்பை
அகற்றுவது, கழிவு நீர் கால்வாய்கள் சுத்திகரிப்பு ,பொதுக் கழிவறைகள், தினசரி
சந்தைகள், உணவு விடுதிகள் திரை அரங்குகள் பள்ளிகள், பால் விற்பனை என எல்லாம் ஆய்வுக்கு உள்ளாகும்
ஏதேனும் குறைகள் இருந்தால் பணியாளர்கள்
எச்சரிக்கப்படுவது முதல் இடை நீக்கம் வரை செய்யப்படுவது வரை நடக்கும் .நிறுவனங்களுக்கு உரிமம் ரத்து வரை
செய்யப்படும்.இதெல்லாம் உடனடியாக நடக்கும் நிர்வாக நிகழ்வுகள்
அலுவலகத்தில் அத்தா பொதுமக்களை சந்திக்கும் முறையில் கூட ஒரு ஒழுங்கு
இருக்கும் வரும் அனைவருக்கும் வரிசை எண் சீட்டு கொடுத்து உட்கார வைக்கபடுவார்கள்
மிக முக்கியமான யாரவது வந்தால் அத்தாவே அறையை விட்டு வெளியே வந்து
அவரிடம் கொஞ்சம் பொறுங்கள் விரைவில் உங்களை அழைக்கிறேன் என்று சொல்ல, ஆணையரே
நேரில் சொல்லி விட்டாரே என்று அதற்குமேல்
எவ்வளவு நேரமானலும் அவர் பொறுமை காப்பார்
ஒரு பெட்டி நிறைய கோப்புகள் மாலையில் வீட்டுக்கு வரும் .அதிகாலையில்
அவையெல்லாம் பார்த்து முடித்து அலுவலகம் போய்விடும் .
நகர்மன்றத்தலைவர்கள் பெரும்பாலும் பலம் பொருந்திய உள்ளூர்
அரசியல்வாதிகளாக இருப்பார்கள். அவர்களிடமிருந்து ஐயா உங்களைப் பார்க்க
விரும்புகிறார்கள் என அத்தாவுக்கு அழைப்பு வரும் . எப்போது வேண்டுமானாலும் என்னை
என் வீட்டில் சந்திக்கலாம் என்பதுதான் அத்தாவின் மறுமொழி
பணிக்காலத்தில் அத்தாவின் ஒரு சில சாதனைகள்
சுத்தகரிப்பு பணியில் ஈடுபடும் நகராட்சி வண்டிகள் ஒரு வழிப்பாதையின்
இரு வழிகளிலும் செல்ல பொது அனுமதி வாங்கியது
பொள்ளாச்சியில் மிகப்பெரிய அரசியல்வாதி வசம் இருந்த பேருந்து
நிலையத்தை நகராட்சிப் பேருந்து நிலையமாக ஆக்கியது
திருநெல்வேலி குறுக்குதுறையில் பயனில்லாமல் இருந்த கட்டிடத்தை ஆணையர்
குடியிருப்பாக மாற்றி துணிந்து அங்கு குடிபோனது – நிறைய பாம்புகள் உள்ள இடம்,
மேலும் இடுகாட்டுக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது –
அலுவலக ஏவலரை (Peon) அதிகாரியின் மாட்டு வண்டி ஓட்டப் பயன்படுத்தலாம் என ஒரு பொது ஆணை
பெற்றது ஒரு சுவையான நிகழ்வு
அத்தா அருப்புக்கோட்டையில் பணி புரிந்தபோது ஒரு
மாட்டு வண்டி (இப்போது மகிழுந்து போல்) வாங்கி அலுவலகப்பணிக்குப் பயன்படுத்தியதில்
ஒரு பிரச்சனை முளைத்தது
அலுவலக ஆய்வுப்பணிக்காக அத்தா செல்லும்போது ஏவலரை மாட்டு வண்டி
ஓட்டச்சொல்வது தவறு என மன்ற உறுப்பினர்கள் வாதிட்டு மன்றத்தில் ஒரு தீர்மானம்
நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைத்தனர்
அரசு இது பற்றி அத்தாவிடம் விளக்கம் கேட்க
அத்தா அனுப்பிய பதில் :
---எனது மாட்டுவண்டியை அலுவலகப் பணிக்குப் பயன்படுத்த அனுமதி உண்டு.
ஆய்வுப்பணிக்காக வெளியே போகும்போது ஏவலரை அழைத்துச் செல்லவும் அனுமதி உண்டு
வண்டிக்கு ஓட்டுனர் வைத்துக்கொள்ளும் அளவுக்கு எனக்கு பொருளாதார வசதி
இல்லை
இந்த நிலையில் எனக்கு இரண்டு வழிகள்தான் தெரிகின்றன
ஓன்று நான் வண்டிக்குள் உட்கார்ந்துகொண்டு ஏவலரை வண்டி ஓட்டச்சொல்லலாம்
அல்லது ஏவலரை வண்டிக்குள் உட்கார வைத்து நான் வண்டி ஓட்டலாம்
இது பற்றி உங்கள் மேலான அறிவுரைக்காகக் காத்திருக்கிறேன் ---
இந்த பதிலால் வாயடைத்துப்போன அரசு உடனடியாக ஒரு பொது ஆணை மூலம் அரசு
அலுவலர்கள் தங்கள் ஏவலரை வண்டி ஓட்டப் பயன்படுத்தலாம் என அனுமதி வழங்கியது
இலக்கியத்தில் குறிப்பாக கம்ப ராமாயணத்தில் மிகவும் ஈடுபாடு உண்டு..
பல கூட்டங்களில் சிறப்பான உரையாற்றியது உண்டு .ஓரிரு முறை வானொலியில் பேசியதும்
உண்டு
.
அத்தா பணியிலிருந்து ஒய்வு பெற்றபின் ஒரு முறை சென்னை கம்பன் விழாவில்
பேச அழைப்பு வந்தது .
ஐந்து நிமிட பேச்சுக்கு அத்தா பயிற்சி செய்த முறை ஏதோ நீட்
தேர்வுக்குத் படிப்பது போல் இருந்தது . பல நூல்களைப் பார்த்து பேச்சை எழுதி பல
முறை அதை சரி பார்த்து திருத்தி ஒலி நாடாவில் பதிவு செய்து பல முறை
கேட்டுப்பார்த்து ஒரு முழுமை பெரும் வரை பயிற்சி தொடர்ந்தது .
இந்த உண்மையான உழைப்பும் எதையும் எளிதாக எண்ணாத தன்மையும் அத்தாவின்
உயர்வுக்கும் சிறப்புக்கும் அடித்தளமோ என்ற எண்ணம் தோன்றியது .
அதே போல் நான் கேரளாவில் பணியாற்றியபோது எங்களுடன் அத்தா வந்து
தங்கியிருந்தபோது ஒரு மலையாள மொழி நூலை
வாங்கி இடைவிடாமல் முயற்சி செய்து படித்து ஒரு பொதுக்கூட்டத்தில் மலையாளத்தில்
உரையாற்றும் அளவுக்கு தேர்ச்சி பெற்று உரையும் ஆற்றி பேர் பெற்றது அத்தாவின்
இன்னொரு வெற்றிக்கதை
பஞ்சாப் ஜலந்தரில் வந்து தங்கியிருந்த சில மாதங்களில் நூற்றுக்கணக்கான
நண்பர்கள் ,நண்பிகள்
கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு சிறப்பு மேல் சிறப்பு
இப்படிஅத்தாவின் பெருமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
பணி ஓய்வுக்குப்பின் எங்கள் திருப்பத்தூர் பெரிய பள்ளிவாசல்
நிர்வாகப்பொறுப்பை ஏற்ற அத்தா மலேசியா போன்ற வெளிநாடுகள் போய் ஒரு பெருந்தொகை
பள்ளிவாசல் கட்டிட நிதியாகத் திரட்டி வந்தது மேலும் ஒரு சாதனை
இன்னும் ஒரே ஒரு நிகழ்வை சொல்லி இந்தப்பகுதியை நிறைவு செய்கிறேன் ---
வங்கிப்பணியில் நான் சேர்ந்த பின் அத்தாவும் நானும் கீழக்கரை போய் பெரியத்தா மகன் சரிவண்ணன்(பஞ்சாயத் நிர்வாக
அதிகாரி) வீட்டில் தங்கி :அங்கிருந்து ஏறுவாடி போய் வந்தோம்
ஏறுவாடியிலிருந்து திரும்புகையில்
இரவு வெகு நேரமாகிவிட இனிமேல் கீழக்கரை போக பேருந்து ஏதும் இல்லை என்று
சொல்லிவிட்டார்கள்
.வந்த ஒரு பேருந்தில் அத்தாவும் நானும் ஏறி அமர்ந்து விட்டோம்.
.வண்டி கீழக்கரைக்குப் போகாது வழியில் இறக்கி விடும் இடத்திலிருந்து கீழக்கரைக்கு
போக வண்டியும் கிடையாது நடந்து போகவும் முடியாது.
இந்த நிலையில் அத்தாவின் நிர்வாகத்திறன் வேலை செய்யத்துவங்கியது
.எத்தனை பேர் கீழக்கரை போகிறார்கள் என்று கேட்டு அவர்களிடம் ஒரு சிறு தொகை வாங்கி
அதை நடத்துனரிடம் கொடுக்க அவர் உடனே மகிழ்வோடு வண்டியை கீழக்கரைக்கு ஓட்ட
ஒத்துக்கொண்டார் ---
தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் மட்டும் அல்ல அவரவர்
மறைவுக்கும் இறுதி ஊர்வலத்துக்கு வரும் கூட்டத்தாலும் அறியப்படும்
அதிலும் சாதனை படைத்த பெருமை எங்கள் அத்தாவுக்கு உண்டு
பூந்தமல்லியில் எங்கள் அக்கா வீட்டில் சில மாதங்கள் தங்கியிருந்த
வாழ்வின் நிறைவு நாட்களில் வழக்கம்போல் நிறைய நண்பர்கள்..
உடல் நலம் குன்றி படுத்திருந்த அத்தாவின் உடல் நிலையைப் பரிசோதித்த
மருத்துவர் ஹி இஸ் ஆல்ரைட் என்று சொல்லிப்போன சிறிது நேரத்தில் ஒரு வரலாறு
நிறைவடையப்போகும் அறிகுறிகள்.
.
என் மகன் பைசல் அத்தாவுக்குப் பிடித்த காபியை வாயில்
ஊற்ற உயிர் பிரிந்தது
.வழியனுப்ப வந்தது
போல் அத்தாவின் மக்கள் அனைவரும், பல பேரன் பேத்திகள் இன்னும் பல உறவினர்கள், அந்த
அறையில் கூடியிருந்தோம்
பூந்தமல்லியில் அத்தா இருந்தது சில காலம்தான் என்றாலும் இது வரை
யாருக்கும் வராத ஒரு கூட்டம் அத்தாவின் இறுதி ஊர்வலத்துக்கு வந்தது
பூந்தமல்லி பள்ளிவாசலின் வரலாற்றில் இல்லாத ஒரு நிகழ்வாக அத்தாவுக்காக
ஒரு சிறப்புத் தொழுகை நடைபெற்றது
புகழோடு தோன்றி புகழோடு மறைந்தது ஒரு வரலாற்றுப்பொற்காலம்.
இ(க)டைச்செருகல் :
ஒரு கருப்பொருளை மனதில் நினைத்து விட்டால் எண்ணங்கள் அலைபோல் பாயும்.
அதை அப்படியே தட்டச்சுச் செய்து விடுவேன் .
அந்த அளவுக்கு ஓட்.டம் அத்தாவைபப்ற்றி எழுதும்போது வர மறுக்கிறது .
இன்னும் அம்மாவைப் பற்றி எழுத எண்ணும் போதெல்லாம் மன ஓட்டமே நின்று போன நிலை.
இது ஏன் என்று தெரியவில்லை சில ஏன்களுக்கு காரணமே கிடையாது .
இருந்தாலும் அம்மாவைப்பற்றி அடுத்த் பகுதியில் எழுத இறைவன் துணையுடன்
முயற்சிக்கிறேன்
மூளைக்கு வேலை
சென்ற பகுதியில்
சால்ட்மாமாமாமாமாமாமாமாமாமாமா
இது என்ன என்று கேட்டிருந்தேன்
உப்புமா பத்துமா
என்பது சரியான விடை
முதலில் விடை தெரிவித்த
ரிபாத் , அடுத்துச் சொன்ன
பர்வேஸ்
அதற்குபின் சொன்ன
உடன் பிறப்புகள் ஜோதி , மெகராஜுக்குப்
பாராட்டுகள்
முயற்சித்து அரைக்கிணறு தாண்டிய ரசூலா , ராஜாத்தி (மெகராஜ்) க்கும்
ஆறுதல் பாராட்டுகள்
என் இளம் பருவத்தில் பார்த்த சக்ரவர்த்தித் திருமகன் என்ற
திரைப்படத்தில் வந்தது இந்தப்புதிர்
இனி இந்த வாரப்புதிர்
இரவு மணி பத்துக்கு மேல். .
நகராட்சி ஆணையர் இல்லத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு .
பதற்றமான குரலில் பேசுகிறார் ஒரு நகராட்சி ஊழியர்
--- என் மகளுக்கு பேறுகால நேரம் . சற்றுத் தொலைவில் உள்ள சாந்தி
மருத்துவ மனையில் சேர்க்க வேண்டும் . அவ்வளவு தொலைவுக்கு வாடகை வண்டி அமர்த்த
பொருள் வசதி இல்லை. உடனடியாக எனக்கு நகராட்சி ஆம்புலன்சை அனுப்பி வையுங்கள் அவசரம்
–
நீங்கள் ஆணையராக இருந்தால் உங்கள் பதில் என்ன ?
விடை பலருக்கும் தெரிந்திருக்கும்..
மற்றவர்கள் பொறுத்திருங்கள்
இறைவன் நாடினால்
அடுத்த வாரம்
சந்திப்போம்
வலைநூல் முகவரி
கூகிள் தேடலில்
sherfuddinp.blogspot.com
[18:46, 7/15/2018]
Meharaj 2
: ஷர்புதீ ன்!அத்தாவின் நினைவுகளை எழுதி என்னை அழ வைத்து விட்டாய். கண்கள் மட்டும் இல்லை. உடம்பே சிலிர்த்து விட்டது. போன வாரம் பேப்பரில் இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்று ஒரு செய்தி படித்தேன். அதைப் படித்த போது நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது,ஒன்று முதல் ஆயிரம் வரை நம்பர் எழுதச் சொல்லி ஒரு டீச்சர் வீட்டுப்பாடம் கொடுத்திருந்தார். நான் மாலை ஆறு மணி யிலிருந்து எழதிக்கோண்டே இருந்தேன்.முடியவில்லை. பின் காலையில் எழுந்து எழுதியும் எழுத முடியவில்லை. நூர் அதைப்பார்த்து விட்டு அத்தாவிடம் போய் சொல்லி விட்டது.அத்தா அந்த டீச்சரை கண்டித்திருக்கும்போல்.அதன் பின் என்னைப் பார்த்து எல்லா டீச்சர்களும் நடுங்குவார்கள்"பாப்பா அப்பாட்ட போய் எதையும் சொல்லிராதப்பா"என்று. இன்னும் எவ்வளவோ இருக்கு. எழுத முடியவில்லை. உன் வண்ணச்சிதறல்கள் படித்ததும் அப்படியே மனம் கசிந்து விட்டது. அத்தா அம்மாவின் மகளாக இருந்த அந்தக் காலம் திரும்ப வராதா என்றிருக்கிறது. அடுத்து அம்மாவின் நினைவு கள் பற்றி நீ எழுதப்போவதை மனம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது
Suraj
: ஷர்புதீ ன்!அத்தாவின் நினைவுகளை எழுதி என்னை அழ வைத்து விட்டாய். கண்கள் மட்டும் இல்லை. உடம்பே சிலிர்த்து விட்டது. போன வாரம் பேப்பரில் இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்று ஒரு செய்தி படித்தேன். அதைப் படித்த போது நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது,ஒன்று முதல் ஆயிரம் வரை நம்பர் எழுதச் சொல்லி ஒரு டீச்சர் வீட்டுப்பாடம் கொடுத்திருந்தார். நான் மாலை ஆறு மணி யிலிருந்து எழதிக்கோண்டே இருந்தேன்.முடியவில்லை. பின் காலையில் எழுந்து எழுதியும் எழுத முடியவில்லை. நூர் அதைப்பார்த்து விட்டு அத்தாவிடம் போய் சொல்லி விட்டது.அத்தா அந்த டீச்சரை கண்டித்திருக்கும்போல்.அதன் பின் என்னைப் பார்த்து எல்லா டீச்சர்களும் நடுங்குவார்கள்"பாப்பா அப்பாட்ட போய் எதையும் சொல்லிராதப்பா"என்று. இன்னும் எவ்வளவோ இருக்கு. எழுத முடியவில்லை. உன் வண்ணச்சிதறல்கள் படித்ததும் அப்படியே மனம் கசிந்து விட்டது. அத்தா அம்மாவின் மகளாக இருந்த அந்தக் காலம் திரும்ப வராதா என்றிருக்கிறது. அடுத்து அம்மாவின் நினைவு கள் பற்றி நீ எழுதப்போவதை மனம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது
[18:49, 7/15/2018]
Meharaj 2: எதற்கு தொலைவிலுள்ள சாந்தி மருத்துவ மனை? அருகாமையில் உள்ள அரசு
மருத்துவமனைக்கு போகலாமே! இதுதான்
என் பதிலாக இருக்கும்.
[05:50, 7/16/2018]
Meharaj 2: அஸ்ஸலாமுஅலை க்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ
பரக்காத்துஹூ
வாடகை வண்டிக்கு இல்லாத பொருளாதார ம்
தனியார் மருத்துவமனைக்கு எப்படி கிடைக்கும்!.
[08:37, 7/16/2018] Ayub Sharmatha:
மாமாவைப் பற்றி. அவர்கள் ஆளுமைத் திறன் பற்றியும் விரிவாக தெரிந்து
கொள்ள முடிந்து,மாஷா
அல்லாஹ் இந்த வையம் உள்ளவும் அவர்கள்
புகழ் நீடித்து
நிற்கும்🌺
[09:03, 7/16/2018] Ayub Sharmatha: மாமாவின் நிர்வாகத் திறன் பற்றியும் அது மற்றுமின்றி அவர்கள்
பேச்சுத் திறமையைப் பற்றியும் எங்கள்
அம்மாவிடம் இருந்து அறிந்திருக்கின்றோம்
அம்மா மாமாவை அலுவல் விசயமாக மற்றும்
பல்வேறு காரணங்களுக்கா சந்திக்க வருவோர் பற்றியும் பெருமையுடன்
சொல்லடையில் கூறும்
கூற்றை நினைவு கூறுகிறேன்
பார்க்க வருவார் கோடி
பாதையிலே நிற்பார கோடி,தேடி வருவார் கோடி தெரு முனையில்
நிற்பார் கோடி என்று
அடிக்கடி சொல்வார்கள்
அத்தா! அத்தா!அத்தா!வேறு வார்த்தை
வரவில்லை.படிக்கப் படிக்க கண்ணீர் மட்டும் வருகிறது.
அருவியாய்க் கொட்டும் எழுத்து நடை
அல்லாவின் அருள்.அத்தா அம்மா நமக்குக் கிடைத்த வரம்.அத்தாவுடன் இருந்தது போன்ற
உணர்வு கொடுத்த எந்தையும் தாயும் உரைக்கு நன்றி.நன்றி.
அம்மாவைப் பற்றி ஆவலுடன் .
[20:02, 7/17/2018] noor 2:
அக்கா வீட்டில்
அத்தாவின் இறுதி நாட்களைப்பற்றி அவ்வளவு எழுதிய நீ ஏன் அக்கா அத்தா ?விற்கு செய்தவற்றை ப்பற்றி பாதுகாத்ததைப்பற்றி ஏன் ஒரு வார்த்தை கூட
எழுதவில்லை
[20:04, 7/17/2018] noor 2: நான்
மட்டுமில்லை மருமகன் பேரப்பிள்ளைகள் எல்லோரும் கண்ணைப் போல் காத்ததுபற்றியும்தான்
[20:51, 7/17/2018] Sherfuddin Peermohamed: கருத்துக்கு நன்றி
இதைத்தான் நான் வலியுறுத்தி சொல்கிறேன்
நான் எழுதுவது என் பார்வை என் எண்ணம்
என் கோணத்தில்.
என் உடன் பிறப்புகள் தங்கள்
எண்ணங்களைப் பதிவு செய்தால் ஒரு முழு ஆவணமாக உருவாகும்
இதுவரை இதை யாரும் செய்யவில்லை
எழுத்தாற்றல் மிக்க நீங்களே இதைத்
துவக்கி வைக்கலாமே
எல்லோ
[21:29, 7/17/2018] noor 2: இதற்குப் பெரிய
ஆவணமெல்லாம் தேவையில்லை.
[21:30, 7/17/2018] Sherfuddin Peermohamed: Then leave it
[21:46, 7/17/2018] noor 2: இதற்குப் பெரிய ஆவணமெல்லாம் தேவையில்லை 23112022 -----109 ஆவது பிறந்த நாள்
முத்து ரவி
எல்லா பிள்ளைகளுக்கும் அவரவர் தந்தை நிச்சயம் உயர்வுதான்..ஆனால் தங்களின் தந்தை(அத்தா)யைப் பற்றி தாங்கள் விவரிக்கும் போதுதான் தெரிகிறது அவர் உண்மையிலேயே தங்களுக்கு மட்டுமன்றி அனைவருக்குமே பிடித்தமானவராக வாழ்ந்திருக்கிறார் என்பது.எங்கோ வாழ்ந்து மறைந்த ஒருவரைப்பற்றி (நான் உள்பட) எல்லோரும் அறியும் வண்ணம் எடுத்துரைத்து "மகன் தந்தைக்காற்றும் உதவி"யை செவ்வனே செய்துள்ளீர்கள்.வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்பதற்கிணங்க தங்கள் தந்தை சொர்க்கத்தில்தான் வாழ்ந்து கொண்டிருப்பார்
முகநூல் 11/2 பக்க நாளேடு
அப்பாவை
படிக்கத் தெரியாத
அப்பா விகள்
சில பேர்
அப்படி என்ன
அப்பா என்று
அசட்டைகள் செய்யும்
பல பேர்
அந்தக் காலப்
பேர்வழி என்று
அலட்சியம் காட்டும்
நம் ஊர்
ஆதவனுக் கொப்பாய்
அப்பா போற்றும்
அறிவுடை மாந்தரில்
உம் பேர்
கருத்தே
காவியம் போல்
ஓவியமாய்
நீள்கிறது
கண்களோ
மீண்டும் படிக்க
வேண்டும் என்று..
மீள்கிறது
விருத்தம் போல்
வெண்பா போல்
விளக்கங்கள்
விரிகிறது
வியக்க வைக்கும்
நயந்த பண்பு
விரல் நுனியில்
தெரிகிறது
எழுதத் தெரியா
எனக்கும் கூட
எந்தை பெருமை
புரிகிறது
மெழுகென
வாழ்ந்தவர்
மேன்மைகள்
நெஞ்சில்
உறைகிறது
பெருமைகளை
உரைத்த விதம்
அருமையிலும்
அருமை
பெற்றோரை
பெரிதுவக்கும்
பேறு பெற்றால்
பெருமை
சோமசேகர் cbroa pondy
அருமையான நினைவு கூறல்.
இவன் தந்தை என்நோற்றான் என்று எண்ணும் அளவுக்கு உங்களது பதிவு மிக அருமையாக இருந்தது. தந்தையைப் பற்றி தனயன் பெருமித்த்துடன் கூறிய பதிவிற்கு நன்றி
Selvaraj cbroa pondy
எஞ்ஞான்றும்பெருமிதம் கொள்ளத்ததக்க நினைவலைகள்.. அத்தாவின் பண்புகள்ங்கள் தங்களிடமும் பரவியுள்ளதை அறிகிறேன்.
Ganesa subramanian what's app
எந்தந்தையின் 109வது பிறந்த தினம்
அடுத்து அடுத்து ப் போட்டாலும்படித்தாலும் அலுப்புத் தட்டாது.இன்று புதிதாய் படிப்பது போன்றே அத்தாவின் நினைவலைகளில் கண்ணீர்.
நாளைக்கே போட்டாலும் படிப்போம் நன்றி!நன்றி!நன்றி
Suraj WhatsApp!
மாமாவின் பணிக்காலம் தொட்டு அவர்கள் இறுதி நாட்கள் வரையான ஆத்மார்த்தமான நினைவுகளையும்,தாங்கள் பதிவை படித்து மிகுந்த ஆச்சரியமான,அதிசயிக்கத்தக்க மனிதராகத்தான் மாமா அவர்கள் இருந்திருக்கிறார்கள் என்று நினைக்க வைக்கிறது.மாஷா அல்லாஹ்.
Sharmatha WhatsApp poo
No comments:
Post a Comment