pollution என்ற சொல்லுக்குத்
தமிழில் மாசு என்று சொன்னாலும் மாசு
என்பது குப்பை அழுக்கு தூய்மைஇன்மை இவற்றைக் குறிக்கும் பொதுச் சொல்தான்
அப்படிப் பார்த்தால் கடலூர் நிறைய
மாசுதான்
Pollution என்று பார்த்தால் இன்னும் நிறைய.
ஊதுபத்தி விற்பனை கடலூரில் கொடி
கட்டிப் பறப்பது மாசினால்தான் என்கிறார்கள்
காற்று நிலம் நீர் எல்லாம் வரம்பு
மீறி மாசடைந்து விட்டதாக கூறப்படுகிறது
அதிகாலை நேரத்தில் தியானமும்
மூச்சுப்பயிற்சியும் செய்வது என் வழக்கம்
சில நாட்களில் அப்படியே யாரோ
அமுக்குவது போவ் மூச்சுத்திணறும் அளவுக்கு வேதிக்கழிவு. நாற்றம் சூழ்ந்த கொள்ளும்
கடலூர் சிதம்பரம் சாலையில் பயணிப்பவர்கள்
இந்த நாற்றத்தை உணராமல் தப்பிக்க முடியாது
மழைத்துளி உடலில் பட்டதும் ஒரு
அரிப்பை உணர்ந்ததும் உண்டு
மாசு கடலூரின் தலையாய பிரச்சினைகளில்
ஒன்றாகும்
கடலூர் மாசு பற்றி இணையத்தில் கண்ட
தகவல்களில் ஒரு சிலவற்றை தமிழில் சுருக்கமாக் கீழே தருகின்றேன்+
இணையத்தில் உள்ள தகவல்களின் இன்றைய
நிலைஎன்ன என்பது தெரியவில்லை
07 08 2017
இந்தியன்
எக்ஸ்பிரஸ்
பசுமை
தீர்ப்பாயத்தின் தென் அமர்வு அண்மையில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியருக்கு
அனுப்பியுள்ள உத்தரவு
அமெரிக்க உணவு
மற்றும் மருந்து நிர்வாகத்தின் ஒப்புதல் பெற்று கடலூரிலும் பாண்டியிலும் துவங்கஉள்ள
மருந்து ஆலைகள் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் சட்டபூர்வமான ஒப்புதல்
பெறாததால் அவற்றை மூடும் பணிகளை மா.சு. பொறியர் துவங்க வேண்டும்
24 03 14
உப்பனாற்றில் குப்பைகளைக்
கொட்டுவதாலும் சுத்தகரிக்கபடாத தொழிற்சாலைக் கழிவுகளைக் கலப்பதாலும் சதுப்புநிலக்
காடுகள் அழிந்து வரும் நிலை
சதுப்புநிலக்காடுகளில்
வசிக்கும் பல பறவை இனங்களும் விலங்கினங்களும் அழியும்
இயற்கைச் சீற்றங்களிலிருந்து
பாதுக்காக்கும் ஒரு அரணாகவும் சதுப்புநிலக் காடுகள் விளங்குகின்றன
சதுப்புநிலத்தில் காணப்படும்
மீன்களை நம்பி வாழும் மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிகப்படுகிறது
08 11 2007
சுற்றுப்புற ஆர்வலர்கள், வழக்கரிஞர்கள் அறிவியலர்,பொது நல
ஆர்வலர்கள்அடங்கிய கூட்டுக்குழு கடலூரின் மாசு நிலை பற்றிக்கவலை
தெரிவிக்க்கப்பட்டது
கடலூர் மாசு செறிவு நிலையை (saturation point) தாண்டிப் போய்விட்டது
எனவே புதிய தொழிற்ச்சாலைகள் திறக்க அனுமதிக்ககூடாது
இருக்கும் தொழிற்சாலைகள் மாசுக்கட்டுப்பட்டு விதிகளை மீறாமல்
அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்
18 09 2014
கடலூர் சிப்காட்பகுதியில் நிலத்தடி நீர் மாசு அனுமதிக்கப்பட்ட அளவை விட 130 பங்கு
கூடுதலாக உள்ளது
இதனால் வாயில், வயிற்றில் புண்,குருதிக்குறைவு, சிறார்களின் உடல், மன
வளர்ச்சியில் குறைபாடு என பல நோய்கள் உண்டாக வாய்ப்புள்ளது
இணைய தளத்தில்
Cuddalore
pollution
என்று
தேடினால் இன்னும் நிறைய தகவல்கள் காணலாம்
மாசு
பற்றி ஓரளவு சுருக்கமாய்ச் சொல்லி விட்டேன்
போக்குவரத்துபற்றி
அடுத்த பகுதியில்
Kadaloor
sirakukal fb 12 07 18
Blog
12 07 18
No comments:
Post a Comment