சுத்தம் சுகாதாரம், மாசு பற்றி இதுவரை பார்த்தோம்
இந்தப்பகுதியில்
போக்குவரத்து
பற்றிப்பார்ப்போம்
தொடரி நிலையம் ஒன்று,
சந்திப்பு ஓன்று ,பேருந்து நிலையம் துறைமுகம் ,அருகில் நெய்வேலியில் விமான நிலையம்
என்று நீர் நிலம் வான் என எல்லா வழிகளும் உண்டு கடலூரில் ஆனால் எதுவும் சரியாக இல்லை
சாலைகள் ஒரு நாட்டின், ஒரு ஊரின் பொருளாதார வளர்ச்சிக்கு நாடி
நரம்பகள் என்பார்கள் .நம் கடலூருக்கோ நாடி நரம்பெல்லாம் தளர்ந்து சிதைந்து போய்
விட்டது
கடலூர் நகருக்குள் , சுற்றுப்புறத்தில் எங்காவது ஒரு கிலோமீட்டர் சாலை
நூறு விழுக்காடு அல்லது தொண்ணூறு விழுக்காடு சரியாக இருக்கிறது என்று யாரவது சொல்ல
முடியுமா ?
என் கண்ணில் பட்டதெல்லாம் சாலைகளில் குண்டும் குழியும், ஓட்டை உடைசல்
ஓரத்தில் ஒட்டுபோட்டது போல் தோற்றம் , ஒழுங்கற்ற சாலை ஓரங்கள்
குறிப்பாக இவையெல்லாம் இரு சக்கர வண்டிகளுக்கு மிகவும் இடரானவை.
.நெல்லிக்குப்பம் சாலையில் உண்ணாமலைச்சாவடி பிரிவு வரும் இடத்தில் ஒரு நான்கு சாலை
சந்திப்பு இருக்கிறது ..இரு சக்கர வண்டிகளில் வருபவர்கள் பலர் அங்கு தடுக்கி
விழுவார்கள் . ஒரு சிறிய இடத்தில் அவ்வளவு மேடு, பள்ளங்கள் .இவ்வளவுக்கும் இது ஒரு
மாநில நெடுஞ்சாலை(SH9)
வாகனங்களின் எண்ணிக்கையும் சாலை போக்குவரத்தும் நாளுக்குநாள் பெருகி
வரும் நிலையில் அதற்கேற்ப சாலை வசதிகள் இல்லாதது விபத்துக்களுக்கு ஒரு காரணமாக
அமைகிறது
தேசிய நெடுஞ்சாலை ஒன்றும் மாநில நெடுஞ்சாலைகள் மூன்றும் கடலூர் வழியே
செல்கின்றன. மாநில நெடுஞ்சாலை ஒன்றின்(SH 9) நிலையை மேலே குறிப்பிட்டிருக்கிறேன்.
அண்மையில் கடலூர் சிறகுகள் முகநூலில் படத்துடன் வெளியான ஒரு நெஞ்சைப்
பிளக்கும் செய்தி
சாலை சீரமைப்புப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கி ஒரு குழந்தை
பெற்றோர் கண் முன்னே உயிர் துறந்தது .ஒரு பச்சிளம் உயிரைக் குடித்த அந்தப்பள்ளம்
உடனே மூடப்பட்டது
அதாவது பணி நிறைவுற்றபின் பள்ளத்தை மூடாத அலட்சிய போக்குக்கு ஒரு உயி
பலி
புறநகர்ப் பகுதிகளில் புதிதாக அமைக்கும் சாலைகளில் கழிவுநீர் கால்வாய்
அமைப்பதில்லை .சில செங்கல்களை அடுக்கி கால்வாய் அமைத்தது போல் படம்
பிடித்துக்கொள்கிறார்கள் அதன் அடிப்படையில் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது
கடலூர் பொதுவாக நல்ல மழை பெய்யும் பகுதி. .வெள்ளம், புயல் போன்ற
பேரிடர்களுக்கு உள்ளாகும் பகுதி
பணம் கொடுக்குமுன் நேரில் போய் ஆய்வு செய்ய யாருமில்லையா ? வெள்ளம்
மழை வரும்போது கால்வாய்கள் இல்லாத பகுதிகள் என்ன ஆகும் என்ற சிந்தனை யாருக்குமே
இல்லையா ??
திரு சிங் அவர்கள் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது சாலைகளின் நடுவில்
தடுப்பு அமைத்து அதில் செடிகளும் விளம்பரப் பலகைகளும் வைத்து நகரை ஓரளவு அழக
படுத்தும் பணிகள் நடந்தன.
கடலூர் பேருந்து நிலையம் பற்றி என்ன சொல்வதென்று தெரியவில்லை மழை
பெய்யும்போது நனையாமல் யாரும் பேருந்தில் ஏறிவிட முடியாது
பயணிகள் நலனையும் வசதியையும் கருதாது ஒரு ஒழுங்கில்லாத வணிக வளாகம்
போன்ற அமைப்பு . வாடகையாவது ஒழுங்காக வசூலாகிறதா என்று தெரியவிலை
பேருந்துநிலையம் அருகில் உள்ள சுரங்கப்பாதை ஒரு குகை போல் இருக்கிறது.
எப்போதும் ஒரு நீர்க்கசிவு (என்ன தண்ணியோ) தரையில் தேங்கி நிற்கும்
அண்மையில் அரசு தூங்கும் வசதி, கழிவறை உள்ள பேருந்துகள் இயக்கம் பற்றி
அறிவித்ததில் கடலூரில் இருந்து புறப்படும் பேருந்து எதுவும் இல்லை . சில ஆண்டுகளுக்கு
முன்பு ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலிருந்தும் சென்னைக்கு சொகுசு குளிர் வசதி
பேருந்துகள் இயக்கப்பட்டபோதும் கடலூர் புறக்கணிகபட்டது .
மோசமான சாலைகள்தான் இவற்றிற்கு காரணம் என்று சொல்லப்பட்டது .மோசமான
சாலைகளுக்கும் கரணம் அரசுதானே
கடலூர் தொடரி சந்திப்பிலும்திருப்பாதிரிப்புலியூர் நிலையத்திலும்
ஏறத்தாழ முப்பது துரித வண்டிகள் நின்று செல்கின்றன
திரு.நிலையத்துக்கு செல்ல சரியான ஒரு பாதை கிடையாது பயணிகள்
காத்திருக்கும் அறை, கழிவறை எல்லாம் மூடியே கிடக்கும் நீளமான நடைமேடையில் பாதிக்கு
மேல் கூரை இல்லாமல் திறந்த வெளியாக இருக்கும்..குறிப்பாக உட்கார்ந்து செல்லவும்
குளிர் பெட்டிகளில் பயணிக்கவும் முன் பதிவு செய்தவர்கள் வெய்யில் , மழையில் நிற்க
வேண்டிய அவலம்.
ஒரு தனி மனிதனின் ஏற்பாட்டால் குடி தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல்
இருக்கிறது ..
துறைமுக சந்திப்பு நிலையத்துக்குச் செல்ல சாலை வசதி இருக்கிறது என்பது
தவிர வேறு ஒன்றும் பெரிதாக இல்லை
ஒரு மாவட்டத் தலை நகரில் உள்ள தொடரி நிலையம் போல் இரண்டுமே இல்லை
.குறிப்பாக திரு. நிலையம் ஒரு எலும்புக்கூடு ( skeleton ) போல்தான்
தோற்றமளிகிறது
தொடரி பெட்டியின் படிக்கட்டுக்கும் நடைமேடைக்கும் இடையில் உள்ள இடைவெளி பயணிகளை குறிப்பாக மூத்த
குடிமக்களை அச்சுறுத்துகிறது
சென்ற வாரம் சோழன் விரைவு வண்டியில் சென்னை செல்ல முன்பதிவு செய்து
அட்டவணை நேரமான 1.25
க்கு முன்பே நிலையத்துக்குப் போய்விட்டேன் .,நிலைய
அறிவுப்புப் பலகை 1.35 க்கு
வண்டி வரும் என்கிறது .இணையம் 2.10 க்கு வண்டி வரும் என்கிறது
எந்த வித அறிவிப்புமின்றி 2.00 மணிக்கு வண்டி வருகிறது . அரக்கப் பரக்க நடந்து (ஓடும் வயதெல்லாம்
தாண்டி விட்டது ) ஏதோ ஒரு பெட்டியில் ஏறி வண்டிக்குள்ளேயே நடந்து எங்கள்
இருக்கைக்கு வந்து சேர்ந்தோம்
நிலையத்தில் வண்டி நிற்பது ஒரே ஒரு நிமிடம்தான்
போக்குவரத்து பற்றி எனக்குத் தெரிந்த அளவுக்கு எழுதி விட்டேன்
கடலூர் துறைமுகம் போக்குவரத்துக்கு இப்போது பயன்படுவதாய்த்
தெரியவில்லை .விமான நிலையம் நெய்வேலியில் . எனவே இவை பற்றி நான் எழுதவில்லை
கல்வி பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்
வலைநூல்முகவரி
sherfuddinp.blogspot.com
18072018
No comments:
Post a Comment