பகுதி 3
சென்ற பகுதியில் கடலூரின் சுகாதாரக் கேடுகள் பற்றிப்பார்த்தோம்.
குறைகளை சுட்டிக்காட்டுவது யாருக்கும் மிகவும் எளிது
தீர்வுகள் காண்பது என்பது அதுவும் கடலூர் போன்ற பழமையான ஒரு நகரின்
சுகாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு
எனபது மிகச்சிக்கலானது
அதற்காக சிக்கல் மேலும் மேலும் வளர விட்டு விடாமல் ஒரு நல்ல வழியைக்
காண முயற்சிப்பது நம் அனைவரின் கடமை
ஊர்கூடி இழுத்தால் தேர் நகர்ந்தே ஆகவேண்டும்
முதலில் நாம் ஒன்றைத் தெளிவாக மனதில் நிறுத்த வேண்டும்
சுகாதாரம் ஒரு தனி மனிதனின் பிறப்புரிமை,,ஒரு சமுதாயத்தின் பொறுப்பு,
ஆட்சியாளர்களின் கடமை
முதலில் நம் இருக்கும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும்
குழந்தைகளும் பெரியவர்களும் வீட்டிலும் அலுவலகங்களிலும் பொது
இடங்களிலும் குப்பையை தரையில் போடாமல் குப்பைத் தொட்டியில் போடப் பழகிக்கொள்ள
வேண்டும்
சென்ற பதிவிற்கு ஒரு தோழர்
அரசாங்கத்தை நம்பி பயனில்லை. நாம்தான் சுத்தம் செய்தல் வேண்டும்
.ஓன்று கூடுவோம் தூய்மை பணியை நோக்கி
என்று அழகான கருத்துத் தெரிவித்திருந்தார்
இது உண்மைதான்
ஆனால அரசு எந்திரம் மிகப்பெரியது பலம் வாய்ந்தது .அங்கு இருக்கும்
பணபலத்தை , ஆள் பலத்தை நாம் முழுமையாப் பயன்படுத்திகொள்ளவேண்டும்
கடலூர் நகராட்சியின் வலை தலத்தில் கண்ட சில தகவல்கள்
நகரில் சேரும் குப்பை ஒரு நாளைக்கு எண்பது டன்
அதில் எழுபத்தியேழு % குப்பை ( ஏறத்தாழ அறுபத்தியிரண்டு டன்) பதினோரு
வண்டிகள்-என்ன வண்டி என்று சொலவில்லை –அதோடு எழுபத்தி மூன்று சக்கர வண்டிகள் மூலம் அன்றாடம் அகற்றப்பட்டு விடுவதாக
சொல்கிறார்கள்
(இது சரியான தகவலா என்பது தெரியவில்லை . அப்படி சரியென்றே
வைத்துக்கொண்டாலும் மிஞ்சியுருக்கும் பதினெட்டு டன் குப்பையின் கதி என்ன ? ஆறு
நாளில் நூறு டன் சேர்ந்து விடுமே ஒரு மாதத்தில் ஐநூறு ஒரு ஆண்டில் ஆறுஆயிரம் டன்)
பதினோராவது நிதி ஆணையத்தின் கீழ் புதிய
Tractor
Dozer Front and Loader was purchased for
dozing this solids in roads and dumping
yards
என்று இணையத்தில் ஒரு தகவல் .இந்த வரியின் பொருள் எனக்குத்
தெளிவாகவில்லை
இந்த ட்ராக்டர் தான் பல பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல்
குப்பையாகிக்கொண்டிருக்கிறது என்று நம்
கடலூர் சிறகுகளில் படத்துடன் செய்தி வந்ததாக நினைவு
அகற்றப்படும் குப்பை என்ன செய்யப்படுகிறது என்ற தகவல் இல்லை
நகரில் இருக்கும் நாற்பத்திஐந்து பிரிவுகளில் (வார்ட்) அரசு ஆணையின்
படி எட்டு பிரிவுகளில் –22 இலிருந்து 29 வரை
குப்பை அகற்றும் பணி தனியார் மயமாக்கப்பட்டதாகவும் அங்கு பணி நல்ல முறையில்
நடப்பதாகவும் இணையம் தெரிவிக்கிறது
இது பற்றி அந்தப்பகுதி மக்கள்தான் கருத்துச் சொல்ல வேண்டும்
அண்மையில் வந்த தகவல்படி நகராட்சி 58
இடங்களில் உரம் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது . இது செயல்படுத்தப்பட்டால் உண்மையில்
ஒரு நல்ல திட்டமாக இருக்கும்
அடுத்து கழிவு நீரை ஆற்றில் கலக்க விட்டு மக்கள் நலனைக் காப்பதாய் ஒரு தகவல்
The
sullage water from the houses as well as storm water are collected in open
drainage and disposal in the river and field channels thus
cleaning health hazard to the people in the required area.
பாதாள சாக்கடை திட்டம்
1988 ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 1996 ஆம் ஆண்டு குடிநீர் வடிகால் வாரியம்
ஆய்வுப்பணி தொடங்கியது . பல நூறு கோடி ரூபாய்களையும் பல உயிர்களையும் விழுங்கிய
அந்த பாதாளம் என்ன ஆயிற்று என்பது தெரியவில்லை
பன்றித் தொல்லையை இனம் சார்ந்த ஒன்றாகப்
பார்க்காமல் ஒரு சமுதாயக் கண்ணோட்டத்தில் நோக்கி, வளர்ப்பவர்களுக்கும் இழப்பில்லாத
ஒரு தீர்வு காணவேண்டும் .நகரிலிருக்கும் பன்றிகளை புற நகர் பகுதிக்கு
விரட்டிவிடுவது சரியான தீர்வாகாது
குறைகள் தெளிவாகப் புலப்படுகின்றன .அரசு
யந்திரம் சரிவர இயங்கினால் இவ்வவளவு குறைகள் வந்திருக்க முடியாது
நாம் செய்ய வேண்டியது
அரசை செயல் பட வைப்பது அவ்வளவு எளிதல்ல. .அதற்காக அதிகாரமும் பலமும் பொருந்திய அந்த அமைப்பை நாம்
ஒதுக்கிவிடவும் முடியாது
நாம் செயலில் இறங்கி, பிறகு அவர்களை அதில்
இணைக்க வேண்டும்
சென்னை போன்ற நகரங்களில் எக்ஸ்னோரா (Exnora international) என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் மிகச்
சிறப்பக் செயல் படுவதாய்க் கேள்விப்பட்டிருக்கிறேன் .
சென்னைநகர்ப்பகுதியில் 40 % , புறநகர்ப்பகுதியில் 75% இவர்கள் சேவையில் பராமரிக்கப்படுகிறது .குப்பை அகற்றல், வடிகால்
திட்டத்தில் ஏற்படும் குறைகளை சரி செய்வது போன்ற சேவைகளை மாநகராட்சி,
நகராட்சிகளோடு ஒருங்கிணைந்து செயல்படுத்தி வருகிறர்கள்
நம் கடலூரிலும் தன்னார்வத் தொண்டு
நிறுவனங்கள் ,அரிமா சங்கம், சுழல் கழகம் போன்ற சேவை அமைப்புகள், பள்ளி கல்லூரிகள்
இவற்றை ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் .அதில் நகராட்சியையும் மாவட்ட
நிர்வாகத்தையும் இணைக்க வேண்டும்
இந்த ஒருங்கிணைப்பை நகரின் நலனுக்காக பாடு
படும் நம் கடலூர் சிறகுகள் செய்ய முடியும்
இதற்கு முதல்படி பொதுமக்களிடையே ஒரு
விழிப்புணர்வு –இது நம் நகரம் .இது சுத்தமாய் இருந்தால்தான் நமக்குப்பெருமை என்ற
உணர்வு
. அடுத்து ஒரு நீண்ட கால செயல் திட்டம் .
நகரை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து திட்டத்தை செயல்
படத் துவங்கினால் இறைவனருளால் வெற்றி நிச்சயம்
செய்வோமா !!!
எனக்குத் தெரிந்தவற்றை நான் சொல்லி
விட்டேன், மற்றவர்களிடமிருந்து ஆக்க பூர்வமான கருத்துக்கள் நிறைய வரும்,
வரவேண்டும்
மாசு பற்றி அடுத்த பகுதியில்
kataloor sirkukal FB 04 07 18
Blog 12 07 18
No comments:
Post a Comment