Thursday, 12 July 2018

நம் கடலூரை மீட்போமா ! 1




 பகுதி 1

தமிழ் நாட்டின் பழம்பெரும் நகராட்சிகளில் ஓன்று , பழமையான மாவட்டங்களில் ஓன்று கடலூர் .
வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டின் தலைநகராகவும் இருந்தது கடலூர் .
ஆனால் அவையெல்லாம் இன்று பழங்கதையாக, கனவாகிப்போய்விட்டன .
ஒரு மாவட்டத் தலைநகர், ஒரு நகராட்சிக்குரிய கம்பீரம், அழகு, வசதிகள் எதுவுமே சொல்லிகொள்ளும்படி இல்லாமல் பொலிவிழந்து நிற்கிறது கடலூர்.
நம் கடலூர் சிறகுகள முகநூலிலும் கட்செவியிலும் அவ்வப்போது கடலூரின் அவல நிலை- அங்கே குப்பை , இங்கே கழிவு நீர் தேக்கம், சாலைகள் சரியில்லை என்று பதிவுகள் வருகின்றன. நானே பல பதிவுகள் போட்டிருக்கிறேன்
ஆனால் சற்று சிந்தித்துப்பார்த்தால் பெரும்பாலும் கடலூரில் எதுவுமே சரியாக இல்லை என்ற உண்மை விளங்கும்
குறை சொல்வது என் நோக்கம் அல்ல .
முப்பதுக்கும் மேற்பட்ட ஊர்களில் வாழ்ந்த அனுபவம், - கடலூர் என் சொந்த ஊர் இல்லை. இருந்தாலும் என் அறுபத்தியெட்டு ஆண்டு வாழ்வில் நான் நீண்ட காலம் இருந்தது, இருப்பது கடலூரில்தான் . வங்கி கிளை மேலாளராக மூன்று ஆண்டுகள், பிறகு பணி ஓய்வுக்குப்பின் எட்டு ஆண்டுகள் என்று மொத்தம் பதினோரு ஆண்டுகளை இங்கே கழித்து விட்டேன்
அந்த உரிமையில், மற்ற ஊர்களின் அளவுக்கு கடலூரும் உயர என்னாலான சிறு முயற்சிதான் இது
ஒரு நல்ல பேருந்து நிலையம்,, தொடரி நிலையம் , தினசரிச் சந்தை ,சாலை வசதி, கழிவு நீர் வெளியேற்றம் , தூய்மைபபணிகள் , கல்வித்தரம், பூங்கா  என்று எதாவது ஒன்றை சுட்டிக்காட்டி பெருமை கொள்ள முடிகிறதா?

என்ன இல்லை நம் ஊரில் ? பணம் இல்லையா மனம் இல்லையா ?
அக்ஷதயத் திருநாளில் விற்பனயாகும் தங்கத்தின் அளவு கடலூரின் பண பலத்தைச் சுட்டிக்காட்டுகிறது
ஆழிப்பேரலை சீறிய போதும், அடுத்து வெள்ளப்பெருக்கிலும் அதையடுத்து தானே புயலிலும் தாமாக முன்வந்து வாரி வழங்கியதில் இங்குள்ள நல்ல மனங்களை அறிந்தோம்
பணபலத்தையும் மன வலிமையையும்  அரசு எந்திரத்தையும் ஒருங்கிணைக்க ஒரு ஊக்க சக்தி தேவை .
 அது நம் கடலூர் சிறகுகளாக இருக்க வேண்டும் என்பது என் எண்ணம்
குழு நிர்வாகம் அனுமதித்தால் தொடர்ந்து வாரம் ஒரு நாள் எழுத எண்ணுகிறேன்

20 06 2018 kadalur sirakukal FB



No comments:

Post a Comment