Thursday, 12 July 2018

தமிழ்மொழியறி.வோம் 4 உறவுகள்




உறவுகள்


சென்ற பகுதியில் உங்கள் பெற்றோரின் உடன் பிறப்புகள் பற்றிய உறவு முறைகளைப் பற்றிப் பார்த்தோம் ஆங்கிலத்தில் இரண்டே சொற்களில் uncle, auntஅழைக்கப்படும் உறவுகள் தமிழில் பெரியப்பா ,சித்தப்பா,பெரியம்மா சின்னம்மா மாமா அத்தை என் ஆறு உறவுகளாக சொல்லப்படுவதை அறிந்தோம்
இப்போது உங்கள் பெற்றோரின் உடன் பிறப்புகளின் குழந்தைகள் பற்றிய உறவு முறை பற்றிப்பார்ப்போம் (Children of your parent’s brothers and sisters )

Cousin என்று ஒரே சொல்லில் ஆங்கிலத்தில் அறியப்படும் இந்த உறவுகள் தமிழில் ஆறு சொற்களால்அறியப்படுகின்றன
உங்களுக்கு அப்பா முறை – பெரியப்பா,சித்தப்பா –வின் பிள்ளைகள்
உங்கள் அம்மா முறை –பெரியம்மா சின்னம்மா –வின் பிள்ளைகள்
இவற்றில்
ஆண் குழந்தைகள் உங்களுக்கு அண்ணன், தம்பி உறவு
பெண் குழந்தைகள் உங்களுக்கு அக்கா தங்கை உறவு  
உங்கள் மாமா, அத்தையின் பிள்ளைகளில்
ஆண்கள் உங்களுக்கு மச்சான் முறை
பெண்கள் உங்களுக்கு மச்சினி முறை  

உங்கள் உடன் பிறப்புகlளின் மக்கள் –sons and daughters of your sisters and brothers
Nephew, (ஆண் மக்ககள்
                Niece (பெண் மக்கள்)
என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறார்கள்  
இந்த சொற்களுக்கு இணையான இயல்பான பேச்சு வழக்குச் சொல் எனக்குக் கிடைக்கவில்லை
யாருக்காவது தெரிந்தால் சொல்லாம்
திருமணத்தால் ஏற்படும் உறவுகள் பற்றி
அடுத்த வாரம் அடுத்த பகுதியில்

வலை நூல் முகவரி
sherfuddinp.blogspot.com


No comments:

Post a Comment