உறவுகள்
உறவு முறைகளில் உங்கள் பெற்றோர்,பெற்றோரின் பெற்றோர், பெற்றோரின்
பிள்ளைகளாகிய உங்கள் உடன் பிறப்புக்கள (Brothers and Sisters) பற்றிப் பார்த்தோம்
இப்போது உங்கள் பெற்றோரின் உடன்பிறப்புகள் Brothers and Sisters of Your Father
and Mother
பற்றிப்பார்ப்போம்
ஆங்கிலத்தில் - uncle , aunt என்ற
இரண்டே சொற்களில் வரும் இவை தமிழில் பெரியப்பா , சித்தப்பா, பெரியம்மா, சின்னம்மா,
மாமா, அத்தை என பல பெயர்களில் வருகிறது
கணித விதி (Mathematical
Formula) போல்
இவற்றை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள் :
உங்கள் அப்பாவின் ஆண் உடன் பிறப்புக்கள்(Your Father’s Brothers) எல்லாம்
உங்களுக்கு
அப்பா முறை
உங்கள் அம்மாவின் பெண் உடன் பிறப்புக்கள் (Your Mother’s Sisters) எல்லாம் உங்களுக்கு
அம்மா முறை
இது தெளிவாகியிருக்கும்
இதில் அடுத்து வயதைப்பொறுத்து உங்கள் அப்பாவின் அண்ணன்கள் (Your Father’s elder brothers )
உங்களுக்கு
பெரியப்பா
முறை ஆகும் (பெரிய வாவா, பெரிய வாப்பா , பெரியத்தா etc)
உங்கள் அப்பாவின் தம்பிகள் (Your Father’s younger brothers) உங்களுக்கு
சித்தப்பா
முறை ஆகும் (சின்ன வாவா சின்ன வாப்பா, சச்சா etc)
சின்னத்தா என்று யாரும் சொல்வதில்லை
அதே போல் உங்கள் அம்மாவின் அக்காக்கள்( Your mother’s elder sisters ) உங்களுக்கு
பெரியம்மா
முறை ஆகும்
உங்கள் அம்மாவின் தங்கைகள் (Your mother’s younger sisters)
உங்களுக்கு சின்னம்மா
ஆகும்
காலா என்ற சொல்லும் சின்னம்மாவைக் குறிக்கும்
இதுவும்தெளிவாகியிருக்கும்
அடுத்த கணித விதி :
உங்கள் அப்பாவின்பெண் உடன்பிறப்புக்கள் (Your Father’s sisters) உங்களுக்கு
அத்தை
முறை ஆகும் ( குப்பி, மாமி ,இவை வேறு சொற்கள்)
உங்கள் அம்மாவின் ஆண் உடன் பிறப்புகள் (Your Mother’s brothers) உங்களுக்கு
மாமா
முறை ஆகும்
அம்மான் என்பதும் மாமாவைக் குறிக்கும்
எனக்குப்புரிந்த அளவுக்கு நான் தெளிவாக சொல்லி விட்டேன்
மீண்டும் ஒருமுறை :
Your
Father’s elder brothers பெரியப்பா
Your
Father’s younger brothers சித்தப்பா
Your
mother’s elder sisters பெரியம்மா
Your
mother’s younger sisters சின்னம்மா
Your
Father’s sisters அத்தை
Your
Mother’s brothers மாமா
தமிழில் ஒரு பழமொழி இருக்கிறது
“அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா “
இதில் நாம் இங்கு எடுத்துக்கொள்ள வேண்டியது
அத்தையின் ஆண் உடன் பிறப்புக்கள் (Brothers) உங்களுக்கு அப்பா முறை
இதற்கு மறுதலியாக
மாமாவின் பெண் உடன்பிறப்புகள் (sisters) உங்களுக்கு அம்மா முறை
இப்போதைக்கு இது போதும் என எண்ணுகிறேன்
இறைவன் நாடினால் அடுத்த வாரம் அடுத்த பகுதி
வலை நூல் முகவரி
கூகிள் தேடலில்
sherfuddinp.blogspot.com
No comments:
Post a Comment