Sunday, 8 July 2018



வண்ணச் சிதறல் 22
மார்பு துடிக்குதடி 2
சென்ற பகுதியை வெளியிட்டபோது அதைத் தொடரும் எண்ணம் ஏதும் இல்லை
ஆனால் கதையை வலைநூலில் பதிவு செய்தபின் எனக்கு மனதில் ஒரு உறுத்தல்
என் பதிவுகள் குறிப்பாக கதைகள் எல்லாம் ஒரு மன மகிழ்ச்சியோடுதான் நிறைவு பெறும். அதற்கு மாறாக இந்தக்கதை ஒரு நிறைவில்லாமல் நிறைவுற்றது போல் தோன்றியது
அதன் விளைவுதான் இந்த இரண்டாம் பகுதி
இனி கதை
விளையாட்டுப்போல் ஒரு ஆண்டு ஓடி விட்டது . ராமசாமி பற்றி எந்தத் தகவலும் இல்லை ..எல்லோரும் அவரை மறந்துவிட்டு அவரவர் வேலையில் ஈடுபட பழகி விட்டர்கள்
சீதாவைத் தவிர
அவர் மட்டும் அசைக்கமுடியாத நம்பிக்கையோடு தன் துணைவருக்காக பொறுமையாக அமைதியாகக் காத்திருந்தார்
ஒரு நாள் அவருக்கு இனம்புரியாத பரபரப்பு அவர் வரப்போகிறார் என்று மனம் திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டே இருந்தது
இரவு முழுதம் சரியாகத் தூங்கவில்லை . அதிகாலையில் எழுந்து குளித்தி இறைவனை வணங்கி விட்டு காபி குடித்தார் . அவர் வந்தால் சூடாகக் காபி கொடுக்க வண்டும் என்று புதிதாகத் தூள் போட்டு காபி தண்ணீர் வடி கட்டினார்
ராமசாமிக்குப் பிடித்த இனிப்பும் காரமும் செய்து வைத்தார்
ஒரு கல்லூரி மாணவியின் துடிப்பும் பரபரப்பும்அவரைத் தொற்றிக்கொண்டது
காலை ஐந்து மணி அளவில் அழைப்பு மணி ஒலிக்க, ஒரு குழந்தையின் சுறுசுறுப்போடு ஓடிப்போய்க் கதவைத்திறந்து பார்த்தார்
கதவைத் திறந்து
் ‘யாரப்பா நீ ,என்ன வேண்டும் உனக்கு “ என்றவர் குரலில் ஏமாற்றம் .
வெளியே நின்ற  முப்பது வயது இளைஞர்  அன்பொழுக சீதா என்று அழைக்க உடனே உள்மனதுக்கு தெளிவாகத் தெரிந்தது வந்திருப்பவர் தன் துணைவர் என்று
ஆனால் புறக்கண் பார்வையும் அறிவும் அதை நம்ப மறுத்தது .,மனதின் குரலில் முழு நம்பிக்கை வைத்து அவரை ஆரத் தழுவிக்கொண்டு அவர் தோளில் சாய்ந்து கண்ணீரை அருவியாய்க் கொட்டினார்
வெளியில் வந்த மகனுக்கு ஒரே குழப்பம் .என்னவென்று புரியவில்லை
சீதா சுதாரித்துக்கொண்டு அப்பாடா என்றார் .என்னம்மா என்னை விட மிக இளமையாக இருக்கும் இவர் எப்படி என் அப்பாவாக முடியும் என்றார் மகன்
அறுபது ஆண்டு .அவரோடு வாழ்ந்த எனக்கு அடையாளம் தெரியாமல் போகுமா என்றார் சீதா
ராமசாமி எனக்கு மிகவும் அசதியாக இருக்கிறது கொஞ்ச நேரம் தூங்கி எழுந்த பின் எல்லாம் விரிவாகச் சொல்கிறேன் என்றவாறு கை கால் முகம் கழுவி விட்டு படுத்து  நீண்ட  உறக்கத்தில் ஆழ்ந்தார்
இரண்டு மணி நேரம் தூங்கி எழுந்து குளித்து சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு உட்கார்ந்து விரிவாகப்பேசினார்
இதற்குள் அக்கம்பக்கம் செய்தி பரவி நிறைய கூட்டம் வரத் துவங்கியது . இன்று முழுதும் நான் என் குடும்பத்தினரோடு மட்டும் இருக்க விரும்பிகிறேன் .நாளை உங்களை எல்லாம் சந்தித்து எல்லாம் சொல்கிறேன் என்று கனிவாப்பேசி அவர்களை அனுப்பி விட்டார்
சில மணி நேரங்களில் மக்கள் மருமக்கள் பேரன் பேத்திமார் அனைவரும் வந்து விட பழைய மகிழ்ச்சி வீடெங்கும் பரவியது
அவர் சொன்ன செய்தி >
முதலில் எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள் .என் மனைவியிடம் மனதார மன்னிப்புக் கேட்கிறேன் அவர் எந்தத்தவறும் செய்யவில்லை .தவறு முழுதும் என்னிடம்தான்
இந்த வயதில் நாக்கைக் கட்டுப்படுத்தாது முதல் தவறு .அந்தத் தவறை சுட்டிக்காட்டியதற்காக வரம்பு மீறி உணர்ச்சி வசப்பட்டது  அடுத்த பெரிய தவறு
அதற்கு எனக்கு நானே அளித்த தண்டனைதான் இந்தத்  தனிமை வாழ்வு .இந்த எண்பதாண்டு வாழ்வில் நான் கற்காத பாடங்கள் பலவற்றை இந்த ஓராண்டு எனக்குக் கற்றுக்கொடுத்தது
என்னை நானே இன்னும் நன்றாக ,ஆழமாக அறிந்து புரிந்துகொண்டேன்,
அடுத்து அறிவுடன் சேர்ந்த உழைப்பு இருந்தால் அன்றாடத் .தேவைக்கு மேலேயே எளிதாகப் பொருள் ஈட்டி விடலாம்
இதற்கெல்லாம் மேல் மொழி, சாதி இனம் எல்லாவற்றையும் தாண்டிய ஒரு மனித நேயம் எங்கும் பரவி நிற்கிறது
படிப்பைப்போல் பயணமும் அறிவை பட்டை தீட்டி ஒளிர வைக்கிறது.
பயணிப்ப்பவர்குள் ஒரே பாதையில் போய்க்கொண்டிருக்க முடியாது .அதே பாதையில் திரும்பப் பயணித்தே ஆக வேண்டும்
பறவைகள் கூட்டுக்குத்ட் திரும்புவது போல் மனிதர்களும் வீட்டுக்குத் திரும்பியே ஆகவேண்டும்
இந்த ஓராண்டில் ஒரு நாள் ஏன் ஒரு வேளை கூட உணவுக்கோ மற்ற வசதிகளுக்கோ சிரமப்பட்டது  இல்லை
இப்படி ஒரு சில நாடகள் குடும்பத்தினருடன் குதூகலமாகக் கழிந்தது. அக்கம்பக்கத்தார் கூட்டம்கூட்டமாக வந்து பார்த்துப் பேசிப்போனார்கள். அன்பினால் வந்தவர்கள் அளவுக்கு ஆர்வமேலிட்டாலும் வந்தனர்
எல்லோருக்கும் அவர் இளமையின் காரணம் என்பதை அறியும் ஆவல்.
ஒரு வழியாக அதைச் சொன்னார்
“ஒரு சில் நாட்கள் இலக்கின்றித் திரிந்தேன்.பிறகு இமயம் நோக்கிப் பயணித்தேன். எதற்கு என்று தெரியாது, ஆனால் ஆன்மீகம் தேடி அல்ல என்பது மட்டும் தெளிவு
அங்கு இறைவன் அருளால் எனக்குக் கிடைத்த தூய்மையான காற்று, நீர் உணவு இவைதான் எனது இளமைக்குத் தலையாய காரணம் . அதோடு நிறைய நடந்தேன் மனதில் கவலை என்பது சிறிதும் இல்லாத,கவலைப்பட முடியாத இயற்கை எழில்
மிக மிக இளமையான ஒரு சமுதாயத்தை அங்கு சந்தித்தேன்.நூறு ஆண்டு தாண்டியும் சுறுசுறுப்பாக இளமையாக இருப்பதும் ,பெண்கள்   அந்த வயதில் பிள்ளை பெறுவதும் மிக இயல்பாக இருக்கும் ஓரு சமுதாயம்
அவர்கள் மொழி எனக்குப்புரியவில்லை.ஆனல் அவர்கள் காட்டிய அன்பு பாசம் பரிவு உபசரிப்பு இதற்கெல்லாம் மொழி ஒரு தடையாக இருக்கவில்லை 
என்னால் முடிந்த அளவுக்கு அவர்களின் அன்றாடப் பணிகளில் பங்கெடுத்துக் கொண்டேன்.
ஒரு வழியாக அங்கிருந்து புறப்பட்டபோது கண்ணீர்  மல்க விடை கொடுத்தோடு நிறைய உணவும் கொடுத்தார்கள்
அந்தக்குளிர்ச்சியில் பழகியவனுக்கு இந்த வெப்பம் ஒத்து வருமா என்று தயங்கினேன். இறையருளால் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை
என்று ஒரு சிறிய உரையாற்றினார்
அடுத்து வங்கிக்கணக்கைப் பார்த்தவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி
ஓராண்டு ஓய்வுதியம் நிலுவைத்தொகை அவருடைய படைப்புகளுக்கு  கிடைத்தவை எல்லாம் சேர்ந்து ஒரு பெருந்தொகை வங்கியிவ் இருந்தது.
உடனே மனதில் தோன்றியது ஒரு பள்ளிக்கூடம் துவங்கும் எண்ணம்
அதுவும் ஒரு மாறுபட்ட பள்ளி
கட்டணம் ஏதும் கிடையாது
காலை எட்டு மணி முதல் மாலை நான்கு வரை இயங்கும்
காலைச்சிற்றுண்டி
11மணிக்குப் பால் மதிய உணவு மாலை சிற்றுண்டி எல்லாம் பள்ளியில்.
அதோடு சீருடை காலணி நோட்டு புத்தகங்கள்  எல்லாமே கட்டணமின்றி
நீதி நேர்மை ஒழுக்கம் உண்மை உழைப்பு போன்ற வாழ்க்கை நெறிகள் வலியுறுத்தப் படும். வெறும் ஏட்டுக்கல்வியாக இல்லாமல் ஒரு வாழ்க்கை நெறிக்கல்வியாக இருக்கும். வீட்டுப்பாடம் புத்தகச்சுமை சாப்பாட்டுச்சுமை பெற்றோரின் தூக்கத்தைக் கெடுக்கும் கடுமையான தேர்வுகள் என எதுவம் இல்லை.
பள்ளி நிர்வாகிகளையும் ஆசிரியர்களையும்  எளிதில் பெற்றோர் சந்திக்கலாம்
விலையே இல்லாமல் இவ்வளவு சிறப்பான கல்வியா!!
விலை இல்லைதான் . ஆனால் சில நிபந்தனைகள் உண்டு
பாட மொழி தமிழ் மட்டுமே.
வீட்டில் தொலைக்காட்சி பெட்டி இருக்கக் கூடாது
பிள்ளைகள் கைப்பேசியை கையில் எடுக்கக் கூடாது
பிள்ளைகள் பள்ளி முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் பெற்றோரில் ஒருவராவது வீட்டில் இருக்க வேண்டும்.
இதற்கெல்லாம் மேல்
மாணவர்கள் அவர்களாகவே துணையின்றி நடந்துதான் பள்ளிக்கு வந்து போக வேண்டும். 
இதெல்லாம் இந்தக் காலத்துக்கு ஒத்து வருமா ?
வந்தது
6 பேருடன் துவங்கியது. விரைவில் ஆறு நூறானது
கேட்காமலேயே நன்கொடைகள் குவிய தங்கு தடையின்றி பள்ளி வளர்ச்சி அடைந்தது பள்ளியின்பெயர்
பொற்காலம்
அப்பாடி ஒருவழியாக கதையை இழுத்து வளைத்து நல்ல விதமாய்
நிறைவு செய்து விட்டடேன்
இ(க)டைச்செருகல்
Robin Sharma எழுதிய
The monk who sold his Ferrari
என்ற புதினம் சில ஆண்டுகளுக்கு முன் படித்தேன்
அடுத்து இமயமலைப் பகுதியில் பெரும்பாலும் இசுலாமியர்கள் வசிக்கும் ஒரு சிறிய நாட்டில் நூறாண்டு கடந்த இளைஞர்கள் இளைஞிகள் பற்றிய தகவல் படித்தேன்
இந்த இரண்டின் தாக்கம்தான் நான் குறிப்பிட்ட  இமய இளமை
பொற்காலப் பள்ளி என் ஆழ் மன  எண்ணத்தின் வெளிப்பாடோ!
யாருக்குத் தெரியும்
இறைவன் நாடினால் குதிரைகளும் பறக்கலாம்
மூளைக்கு வேலை
சென்ற பகுதி புதிருக்கு முதலில் விடை சொன்ன  ஆத்திக்காவுக்கும் அடுத்து அனுப்பிய  ரிபாத்துக்கும் வாழ்த்துக்கள்
விடை
ஐந்து லி குவளையில் நீர் ஊற்றி அதிலிருந்து மூன்று லி குவளையை நிரப்பி அந்த மூன்று லி நீரை கீழே கொட்டி குவளையைக் காலி செய்து விட வேண்டும்
பெரிய குவளையில் இருக்கும் இரண்டு லி நீர் இருக்கும் .அதை சிறிய குவளையில் ஊற்றி விட வேண்டும்
மறுபடி பெரிய குவளையில் ஐந்து லி நீர் ஊற்றி  நிரப்பிஅதிலிருந்து
நீர் ஒரு லி ஊற்றினால் சிறிய குவளை நிரம்பி விடும்
பெரிய குவளையில் ஐந்தில் ஒன்று போக நாலு லி நீர் இருக்கும்
இந்த வாரப்புதிர்
salt மா மா மா மா மா மா மா மா மா மா மா
இது என்ன?
மிக எளிது
குறிப்பாக என் வயதினருக்கும் சற்று மூத்தவர்களுக்கும்
இறைவன்
  நாடினால்
       மீண்டும்
            சந்திப்போம்
வலை நூல் முகவரி
sherfuddinp.blogspot.com








 

2 comments:

  1. சக்கரவர்த்தி திருமகள்
    கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
    டணால் தங்க வேல்

    ReplyDelete
  2. [10:46, 7/10/2018] Meharaj 2: ஷர்புதீ ன். உப்புமா பத்துமா! எல்லோருக்குமே தெரிந்த விடை. அதனால் முந்திக் கொண்டேன். நீ போனவாரம் எழுதியது உண்மைச் சம்பவம் என்று தான் நினைத்தேன்.
    [10:50, 7/10/2018] Meharaj 2: இந்த வாரம் பார்த்தபின் தான் கதை என்று,அதுவும் நீயே எழுதியது என்று தெரிந்தது. அபாரம் கதை எழுதும் திறமையும், எழுத்து நடையும் அற்புதம். தொடரட்டும். வாழ்த்துக்கள்.
    [10:56, 7/10/2018] Meharaj 2: ஆழ் மன வெளிப்பாடே கற்பனைக் குதிரை யாக பறந்துஇருக்கிறது

    ReplyDelete