அருளாளன்
சென்ற இரு தினங்களின் தொடர்ச்சியாக இன்றும் திருமறையின் அழகு
எனப்படும் சுராஹ் 55 அரஹ்மானின் சிறப்புகளைப் பார்ப்போம்
இறைவனின் திருப்பெயர்களில் ஒன்றாகிய அர்ரஹ்மான் என்ற பெயர் இந்த சுராவுக்கு அமைந்திருப்பது திருமறையின் வேறு
எந்த சூராவுக்கும் இல்லாத சிறப்பாகும்
மனித இனத்தையும் ஜின் வர்க்கத்தையும் ஒரு சேர அழைத்து இறைவன் பேசுவது
மற்றொரு சிறப்பு
(ஜின்- மனிதர்களைப்போல் சிந்திதித்து செயல்படும் பகுத்தறிவு கொண்ட
இறைவன் படைப்பு – கண்ணுக்குத்தெரியாமல் மறைந்து வாழ்பவர்கள் )
"மனு, ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின்
எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்; ஆனால், (வல்லமையும் நம்)
அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது.(குரான் (55:33)
(மறுமையில்)
உங்களிருசாரார் மீதும், நெருப்பின் ஜீவாலையும், புகையும் அனுப்பப்படும், அப்பொழுது நீங்கள் (இரு
சாராரும், எவரிடமிருந்தும்) உதவி பெற்றுக் கொள்ள மாட்டீர்கள்.(குரான் 55:35)
இந்த இரு மறை மொழிகளும் விண்வெளிப்பயணம் பற்றிக் குறிப்பிடுவதாக ஒரு
கருத்து சொல்லப்படுகிறது
அரஹ்மான் சுராவின் அழகு, சிறப்பு பற்றி மட்டுமே நான் எழுதியுள்ளேன்
அதன் பொருள், விளக்கம் , நன்மைகள் மிக நீண்ட பதிவுகளாக வரும்
அவற்றைப்பற்றி
நீங்களே ப்படித்து தெரிந்து நன்மை பெறுங்கள்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
08052020
sherfuddinp.blogspot.com
No comments:
Post a Comment