சூரா
57, 59 ,61, 62, 64
இவை ஐந்தும்
ஒரு குழுவாக அறியப்படுகின்றன
இந்தக் குழுவுக்கு
இந்த ஐந்து சூராக்களிலும்
முதல் வரி இறைவனின் புகழ் பாடுவதாக அமைந்துள்ளது
எனவே இந்தப்பெயர்
வானங்களிலும், பூமியிலும் உள்ளயாவும் அல்லாஹ்வுக்கே தஸ்பீஹு செய்து (துதி
செய்து) கொண்டிருக்கின்றன - அவன் (யாவரையும்) மிகைத்தோன், ஞானம் மிக்கவன்.(57 :1)
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வை தஸ்பீஹு செய்கின்றன (துதிக்கின்றன); அவன் (யாவரையும்) மிகைத்தவன், ஞானம் மிக்கவன்.(59:1)
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வை தஸ்பீஹு (துதி) செய்து
கொண்டிருக்கின்றன அவன் யாவரையும் மிகைத்தவன், ஞானம் மிக்கவன்.(61:1) வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வைத் தஸ்பீஹு (துதி)
செய்துகொண்டிருக்கின்றன, (அவன்தான்) மெய்யான பேரரசன்; பரிசுத்தமானவன், யாவரையும்
மிகைத்தவன்,
ஞானம் மிக்கவன்.(62:1)
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வைத் தஸ்பீஹு (துதி) செய்கின்றன, அவனுக்கே ஆட்சி உரியது, இன்னும் புகழனைத்தும்
அவனுக்குரியதே, அன்றியும் எல்லாப் பொருட்கள் மீதும் அவன்
பேராற்றலுடையவன்.(64:1)
இறைவன் நாடினால் நாளை
சிந்திப்போம் ( புனித மாதம் இறைவன் அருளால் இன்னும் பத்து நாட்களில் நிறைவுறும் . அதுவரை
இறைவன் நாடினால் இது போன்ற பதிவுகள் தொடரும் . )
14052020thu
sherfuddinp.blogspot.com
No comments:
Post a Comment