Wednesday, 20 May 2020

யூசுப்



யூசுப் நபியின் வரலாறு மிக மிகச் சுருக்கமாக

யாகூப் நபியின் இரண்டாவது மனைவி யூசுபை ஈன்றேடுத்துக் கொடுத்து சில நாளில் மறைந்து விடுகிறார் .

தாயில்லாக்குழந்தை , மிக அழகு, அறிவு, நபி ஆவதற்கான அறிகுறிகள் இவையெல்லாம் யாகூப் நபி குழந்தை யூசுப் மேல் அளவற்ற பாசம்,அன்பைபொழிய காரணமாகின்றன

இதனால் அழுக்காறு கொண்ட மாற்றாந்தாய் மக்கள் வேட்டைக்கு போகும்போது சிறுவன் யூசுபை தங்களுடன் அழைத்துச்சென்று ஒரு கிணற்றில் தள்ளி விட்டு சிறுவனை ஓநாய் கடித்துத் தின்றுவிட்டது என்று தந்தையிடம் பொய் சொல்கிறார்கள்

சிறுவன் யூசுபை கிணற்றில் இருந்து மீட்டு எடுத்தவர்கள் அவர் பெருமையை உணர்ந்து தங்கள் சமுதாயத் தலைவரான அமைச்சரிடம் சேர்த்துவிடுகிறார்கள்

சிறுவனாக வந்து இளைஞனாக வளர்ந்து விட்ட, யூசுபின் அழகில் மயங்கிய  அமைச்சரின் துணைவி முறை தவறி நடக்க முயற்சிக்கையில் அமைச்சர் வருவதைப் பார்த்து பழியை யூசுப் மேல் சுமத்துகிறார் . யூசுப் குற்றமற்றவர் என்று அமைச்சருக்குத் தெளிவாகிறது இருந்தாலும் இருவரின் பாதுகாப்புக் கருதி யூசுபை சிறையில் அடைக்கிறார்.,

யூசுப் நபிக்குக் கனவுகளுக்கு சரியான பலன் சொல்லும் சக்தியை இறைவன் அளித்திருந்தான் . நாட்டு மன்னர் கண்ட கனவுக்கு யூசுப் நபி சரியான பலனை சொல்ல , அவரின் அறிவாற்றலை அறிந்து கொண்டமன்னன்  அவருக்கு உணவு தானியங்களைக் கையாளும் மிக பெரிய ஒரு பதவியில் அமர்த்துகிறான்

நாட்டில் ஒரு பெரிய  பஞ்சம் ஏற்பட அரசிடமிருந்து உணவுப்பொருட்கள் வாங்க வந்த யூசுப் நபியின் மாற்றாந்தாய் மக்கள் அவரை அடையாளம் கண்டுகொண்டு தாங்கள் செய்த தவறுக்கு மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கிறார்கள்

இந்த சூராவில் இறைவன் இரண்டு அறிவுரைகளை அளிக்கிறான்

முதலாவது   ,  

யூசுப் நபி அவர்களிடம் அவரின் உடன் பிறப்புகள் நடந்து கொண்டதைப்போல இன்று நீங்கள் உங்கள் உறவுகளுடன் நடந்து கொள்கிறீர்கள்
ஆனால அந்த உடன்பிறப்புகள் தங்களுக்கு பகையாக நினைத்து கிணற்றில் வீசி எறிந்த அதே யூசுப் நபி அவர்களின் காலடியில் வந்து வீழ்ந்தார்கள்
அதே போல் நீங்களும் இறைவனின் திட்டத்தின் முன் வெற்றி பெற முடியாது
எவரை நீங்கள் அழிக்கத் துடிக்கின்றிர்களோ அதே உறவினருடன் நீங்கள் ஒரு நாள் கருணைப்பிச்சை கேட்கநேரிடும்

அடுத்தது

இறைவன் எவரை உயர்த்த நாடுகிறானோ அவரை உலகம் முழுதும் ஓன்று சேர்ந்து எதிர்த்தாலும் வீழ்த்த முடியாது .என்ற கருத்து

இறைவன் நாடினால் மீண்டும்  நாளை சிந்திப்போம் 


20052020wed

sherfuddinp.blogspt.com

No comments:

Post a Comment