Sunday, 3 May 2020

“அன்பும் அதிகாரமும்”


அன்பும் அதிகாரமும்



இன்னும், அல்லாஹ் நாடினாலன்றி அவர்கள் நல்லுபதேசம் பெற முடியாது. -----------------------------------------------------(குரான் 74:56)
எனினும், அல்லாஹ் நாடினாலன்றி, நீங்கள் நாட மாட்டீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானம் மிக்கவன்   (குரான்  .78:30)
ஆயினும், அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள்(நல்லுபதேசம்பெற நாடமாட்டீர்கள். (குரான் 81:29)
இறைவன் நாடினால் இன் ஷா அல்லா என்று சொல்ல வேண்டியதின் அவசியம் பற்றி சென்ற இரு பதிவுகளில் பார்த்தோம்
எல்லாம் வல்ல எக இறைவனே “அல்லா நாடினால் “ என்று சொல்வதாய் குர்ஆனில் சில இடங்களில் வருகிறது
முழுக்க முழுக்க இறைவன் படைப்பான குரான் எனும் திரு மறையில் இறைவன் நாடினால் என்ற சொற்கள் ஏன் வருகின்றன எனும் கேள்வி எழுகிறது  .
இசுலாத்தின் அடிப்படையான ஏக இறை கொள்கையின் வெளிப்பாடே இறைவன் நாடினால் என்று இறைவனே சொல்வது
அளவற்ற அருளாளனும் நிகற்ற அன்புடையோனுமாகிய இறைவன் தான் நாடியவருக்கு கல்வி செல்வம் அனைத்தையும் வழங்குகின்றான்
நன்கு அறிந்தவனும் ஞானம் மிக்கவனுமாகிய அவன் தான் அறிந்தவற்றின் அடிப்படையில் செய்யும் செயல்களுக்கு விளக்கம் அவனுக்கு மட்டுமே தெரியும்
அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது(குரான் 2:255)
இறைவனின் இந்த ஞானம், அறிவு,எல்லை இல்லா அதிகாரம்  இதோடு அவனுடைய அருளும் அன்பும் இணைந்து அவன் செய்யும் செயலகள், முடிவுகள் அடிப்படையில்தான் உலகம் இயங்குகிறது
இந்தக் கருத்தை வலியுறுத்தி சொல்லவே இறைவனே இறைவன் நாடினால் என்று சொல்கிறான்  
இறைவன் நாடினால் நாளை மீண்டும் சிந்திப்போம்
03052020sun
sherfuddinp.bogspot.com
Blocked in FB

No comments:

Post a Comment