Thursday, 7 May 2020

REFRAIN


Refrain

விலகல் என்ற பொருள் கொண்ட refrain என்ற சொல்லுக்கு இன்னொரு அழகான பொருள்  இருக்கிறது ஆங்கில இலக்கணத்தில்
ஒரு பாட்டின் சிறிய எளிய பகுதி அந்தப்பாட்டில் திரும்பத் திரும்ப வருவது refrain  என்று சொல்லப்படுகிறது ( இதற்கான தமிழ் சொல் தெரிந்தவர்கள் சொல்லாம் )

திருமறையின் 55 ஆவது பகுதி அர்ரஹ்மான் 78 வசனங்கள் கொண்ட இந்த சுராவில் பபி அய்யி என்று தொடங்கும் வசனம் 31 முறை திரும்பத் திரும்ப வருவது refrain  என்ற ஆங்கில இலக்கிய அழகுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது அநத வசனத்தின்  பொருள்

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

இது மட்டுமல்ல  பண்டைய அரபு மொழிக் கவிதைகள் போல்  ஒலிகள் இயைந்து வரும் உரைநடையில் அமைந்துள்ளது
சற்று நீண்ட 13 வரிகள் கொண்ட  அறிமுகப்பகுதி, ,26 இருவரித்  தொகுதிகள்  4 மூன்று வரித் தொகுதிகள் என 31பகுதிகளும் “பபி அய்யி “ என்ற வசனத்துடன் நிறைவுறுகின்றன .நிறைவு வரியாக இறைவனின் புகழ் பேசப்படுகிறது
இந்த இலக்கிய அழகோடு இன்னும் பல சிறப்புகளும் சேர்ந்து திருமறையின் அழகு என்ற பெயருக்குக் காரணமாக அமைகின்றன
கேள்விக்கு சரியான விடை அளித்த முனைவர் பாஷா , ஜனாப்   பீர் முகமது (ISP)  இருவருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்
இறைவன் நாடினால் இந்த அர்ரஹ்மான் சுராவின் மற்ற சிறப்புகளுடன் நாளை சிந்திப்போம் 
(Source :Wikipedia )
07052020thu-
sherfuddinp.blogspot.com


No comments:

Post a Comment