ஹூத்
தங்கள் தலைமுடி நரைத்துக்கொண்டே போகிறதே இதற்குக்காரணம் என்ன ?
என்று அபூ பக்ர் ரலி அவர்கள் நபி ஸல் அவர்களைப் பார்த்துக்
கேட்கிறார்கள்
அதற்கு நபியவர்கள்
ஹூத் அத்தியாயத்தில் உள்ள கருத்துகள் என்னைக் கிழவனாகும்படி செய்து
விட்டன
என்கிறார்கள்
ஹூத் என்பது திருமறையின் 11 ஆவது சூராஹ் (ஹூத் என்பது ஒரு நபியின்
பெயர் )
ஒருபுறம் இறை நிராகரிப்பாளர்கள் தங்கள் செல்வம், செல்வாக்கு
அனைத்தயும் பயன்படுத்தி சத்திய நெறி அழைப்பை நசுக்க முயற்சித்துக்கொண்டிருந்தார்கள்
மறுபுறம் இறைவனிடமிருந்து கடுமையான எச்சரிக்கைகள் இறங்கிக்கொண்டிருந்தன
எடுத்துக்காட்டாக
நிச்சயமாக நான், எனக்கும் உங்களுக்கு இறைவனாக இருக்கும் அல்லாஹ்விடமே பொறுப்பை
ஒப்படைத்து விட்டேன்; எந்த உயிர்ப் பிராணியாயினும் அதன் முன்நெற்றி உரோமத்தை அவன்
பிடித்தவனாகவே இருக்கின்றான்; நிச்சயமாக என் இறைவன் நேரான வழிpயலிருக்கின்றான்.(குரான் 11:56)
அதற்கெலாம் மேல் இறைவனால் அளிக்கப்பட்ட கால அவகாசம் முடிந்துவிடுமோ
,ஒரு சமுதாயத்தை இறைவன் வேதனையில் ஆழ்த்திடத் தீர்மானிக்கும் இறுதி வேளை
வந்துவிடுமோ என்ற கவலை நபியவரகளை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது
இவையெல்லாம் ஓன்று சேர்ந்து நபி ஸல் அவர்களுக்கு முதுமைத்
தோற்றத்தை உண்டாக்கியது
123 வசனங்கள் கொண்ட ஹுத் சூராவைப் படிக்கும்போது அணையிலிருந்து வெள்ளம்
பாய்ந்து வருவதைப்போலவும் அந்த வெள்ளத்திற்குப்
பலியாகவிருக்கும் விழிப்புணர்வு அற்ற மக்கள் சமுதாயத்துக்கு இறுதி எச்சரிக்கை
விடுக்கப்பட்டுக் கொண்டிருப்பது போலவும் ஓர் உணர்வு ஏற்படுவதாக அறிஞர் பெருமக்கள
கருதுகிறார்கள்
இன்றைய சூழ்நிலைக்கு இது மிகவும் பொருத்தமாக இருப்பதாய் எனக்குத்
தோன்றுகிறது
படித்துப் பயன் பெறுங்கள்
நேற்றைய கேள்விக்கு ஹூத் என்ற சரியான விடை அளித்த
பேரன் பர்வேஸ் அஹமதுக்கு
வாழ்த்துகள் பாராட்டுக்கள்
நேற்றைய கேள்விக்கு ஹூத் என்ற சரியான விடை அளித்த
பேரன் பர்வேஸ் அஹமதுக்கு
வாழ்த்துகள் பாராட்டுக்கள்
இறைவன் நாடினால் நாளை மீண்டும் சிந்திப்போம்
10052020sun
sherfuddinp.blogsspot.com
No comments:
Post a Comment