“அவர் கடுகடுத்தார் முகத்தைத் திருப்பிகொண்டார் “
இப்படித் துவங்குகின்றது திருமறையின் 80 ஆவது
பகுதி
அரபு மொழியில் கடுகடுத்தார் என்னும் பொருளுடைய அபஸ என்ற சொல்லே இந்தப் பகுதியின் பெயராக
இருக்கிறது
இந்த நிகழ்வு பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும்
சுருக்கமாக :
நபி ஸல் அவர்கள்அரேபியப் பெருந்தலைவர்கள் சிலருடன்
உரையாடிக்கொண்டிருந்கிறார் .அவர்களை சத்திய வழியான இசுலாமை தழுவ வைக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறார்.
அவர்கள் இசுலாத்துக்கு வந்தால் அவர்ளைப் பின்பற்றி நிறையப்பேர் வரலாம்.
அந்த நேரத்தில் பார்வையற்ற ஒரு எளியவர் இசுலாம் பற்றி அவருக்குள்ள சில
ஐயங்களைத் தெளிவு படுத்திக் கொள்ள நபிகளை நோக்கி வருகிறார்
அவரின் வருகையைத் தன உரையாடலுக்கு இடையூறாக எண்ணிய நபி பெருமான் கடுகடுதது
முகத்தைத் திருப்பி கொள்கிறார்
நபி பெருமானின் இந்தச் செயல் தவறு என்று சுட்டிக்காட்டி அவரைக்
கண்டிக்க இறைவன் அருளியதுதான் இந்த 80
ஆவது சுராஹ்
முதலில் யாரையோ கண்டிப்பது போல் அவர் கடுகடுத்தார் என்று
துவங்கினாலும் அடுத்து வரும் மறை மொழிகள் நபி ஸல் அவர்களை நோக்கியே செல்கின்றன
சத்திய வழியில் இணையாத சிலருக்காக ஏற்கனவே இணைந்த ஒருவரைப்
புறக்கணிப்பது தவறு என்று சற்றுக் கடுமையாக இறைவன் நபி பெருமானை சாடுகிறான்
இப்போது இன்றைய வினா :
கடுகடுக்கப்பட்டவர் ( கண் தெரியாதவர் ) யார் ?
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
16052020sat
sherfuddinp.blogspot.com
No comments:
Post a Comment