Tuesday, 5 May 2020

சுமக்கும் -------------


சுமக்கும் -------------

நேற்றைய வினா
சுமக்கும் கழுதையின் உதாரணத்துக்கு ஒப்பாகும் “     என்று திருமறை குரானில் வருகிறது
இது திருமறையின் எந்தப் பகுதியில் வருகிறது , ?
மறை அருளப்பெற்று அதை படிக்காமலும் , படித்தாலும் அதன் படி நடக்காமலும் இருப்பவர்கள் மறை நூல்களை சுமந்து செல்லும் கழுதைகள் போன்றவர்கள் .
சுமந்து செல்லும் நூல்களினால் கழுதைக்கு எந்தப் பயனும் இல்லை .அதே போல்தான் நாங்கள் வேதம் வழங்கப்பெற்றவர்கள் என்று பெருமை பேசிக்கொண்டு அதைப் பின்பற்றாதவர்கள் என்று இறைவன் சொல்கிறான்
சுராஹ் ஜும்மாவில் வரும் மறை மொழி :
எவர்கள் தவ்றாத் (வேதம்) சுமத்தப்பெற்று பின்னர் அதன்படி நடக்கவில்லையோ, அவர்களுக்கு உதாரணமாவது ஏடுகளைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்திற்கு ஒப்பாகும், எச்சமூகத்தார் ஏக இறைவனின்  வசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ அவர்களின் உதாரணம் மிகக் கெட்டதாகும் - ஏக இறைவன்  அநியாயக்கார சமூகத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான். (62:5)
இறைவன் நாடினால் மீண்டும் நாளை சிந்திப்போம்
05062020tue
sherfuddinp.blogspot.com


No comments:

Post a Comment