Saturday, 2 May 2020

இறைவன் நாடினால்


இறைவன் நாடினால்

எந்த ஒரு செயலையும் நான் நிச்சயமாக செய்து முடிப்பேன் என்று சொல்லாமல் இறைவன் நாடினால் – இன் ஷா அல்லா என்று சொல்லவேண்டும் என்பதை நேற்றுப்பார்த்தோம்  
நபி (ஸல்) அவர்கள் இன் ஷா அல்லா என்று சொல்லாமல், நான் நாளை பதில் சொல்கிறேன் என்று  சொன்னதால் இறைவன் அவரை பல நாட்கள் சோதனை செய்கிறான் . அது பற்றிய விளக்கம் :
நபி (ஸல்) அவர்கள் உண்மையிலேயே இறைவன் அனுப்பிய தூதரா என்று சோதிக்க விரும்பிய  யூதர்கள் தங்கள் மதத்தலைவரை கலந்தாலோசிக்கிறார்கள் ,
அந்தத் தலைவர் ஒரு மூன்று வினாக்களை நபியிடம் கேளுங்கள். மூன்றுக்கும் சரியான விடை சொல்லி விட்டால் அவர் உண்மையான நபி என்று சொல்கிறார்கள
அதே போல் யூதர்கள் நபி பெருமானிடம் அந்த மூன்று கேள்விகளைக் கேட்கிறார்கள்
இந்தக் கேள்விகளுக்கு பதில் நான் நாளை சொல்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள்  அவர் நினைத்தது இன்று இறைவன் வஹி என்னும் மறைமொழி மூலம் கேள்விக்கான விடைகளை அறிவிப்பான் என்பது
இறைவன் நாடினால் என்று சொல்லாமல் நாளை சொல்கிறேன் என்று சொன்னது தவறென்று உணர்த்துவதற்காக இறைவன் பல நாட்கள் வஹி என்னும் மறை மொழியை அனுப்பாமல்  விட்டு விட நபி பெருமானுக்கு  பெரும் மன உளைச்சல் ஏற்படுகிறது
இரண்டு வாரம் கழித்து மலக்குகள் தலைவர் ஜிப்ரில் அலை மறை மொழியுடன் வரும்போது நபி((ஸல்) அவர்கள் கேட்கிறார்கள் “ஜிப்ரிலே ஏன் இப்படி பாரா முகமாக இருந்து விட்டீர் ?”
அதற்கு ஜிப்ரில் அலை சொன்ன பதில்
  "உமது இறைவனின் கட்டளையில்லாமல் நாம் இறங்க மாட்டோம்; எங்களுக்கு முன்னிருப்பதும், எங்களுக்கு பின்னிருப்பதும், இவ்விரண்டிற்குமிடையில் இருப்பது அவனுக்கே (சொந்தமாக) இருக்கின்றன உமது இறைவன் ஒரு பொழுதும் மறப்பவனல்லன்."(குரான் 19:64)
(மூன்று கேள்விகள் என்ன என்பது ஒரு தனி வரலாறு அதை இறைவன் நாடினால் பின்னால் எப்போதாவது பாப்போம்
இப்போது இன் ஷா அல்லா பற்றி மற்றொரு   வினா
எல்லாம் வல்ல ஏக இறைவனே
“இன் ஷா அல்லா “
என்று சொல்கிறான்
அது எந்த இறை வசனம் ? அதன் பொருள் என்ன ?
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
02052020sat
sherfuddinp.blogspot.com

No comments:

Post a Comment