Saturday, 30 May 2020

நபி யஹ்யா



நபி யஹ்யாவின் வரலாற்றில் சில செய்திகளை சுருக்கமாகப் பார்ப்போம்

திருமறை குர்ஆனில் வரும் செய்திகள்

“யஹ்யா என்ற பேரை இதுவரை யாருக்கும் வழங்கவில்லை “ என்று ஏக இறைவன் கூறுகிறான் (19:7)

மேலும்
“குழந்தையாய் இருக்கையிலே அவருக்கு நாம் ஞானத்தை வழங்கினோம் “(19:12)
அவர் பிறந்த நாளிலும் அவர் இறக்கும் நாளிலும் அவர் உயிர் பெற்றெழும் நாளிலும் அவர் மீது சாந்தி எனும் சலாம் நிலையத்திருக்கும் “(19:15)
என்று அவரை மேன்மைப்படுத்துகிறான்

அடுத்து இஞ்சில் எனப்படும் பைபிளில் வரும் சில் செய்திகள்

பைபிளில் இவர் ஜான் என அறியப்படுகிறார்..

John the Baptist

காட்டுதேனும் வெட்டுக்கிளியும் மட்டுமே அவர் உணவாக இருந்தது (மத் 3:4)
அவருடைய அறவுரைகள்
“உங்களிடம் இரண்டு ஆடைகள் இருந்தால் ஒன்றை இல்லாதவருக்குக் கொடுங்கள் . அதே போல்தான் உணவும் (லுக் 3:11)

நாட்டின் மன்னராக இருந்த ஹெராட் அண்டிபாஸ் தன அண்ணன் துணைவி ஹெரோடியாஸ் என்பவருடன் முறை தவறிய உறவில் இருந்தான் .இதை  ஜான் கண்டிக்க அவரை சிறையில அடைத்தான் மன்னன்

இருந்தாலும் ஜானின் ஒழுக்கம், பக்தி , அவருக்கு மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கு எல்லாவறையும் கருதி ஜான் மேல் மிகவும் மரியாதையும் மதிப்பும் கொண்டிருந்தான் மன்னன்

ஆனால் மன்னனின் அண்ணன் துணைவி ஜான் மக்களுக்குச் சொல்லும் அறவுரைகள் எல்லாம் தம்மைப்பற்றி ஒரு இழிவான கருத்தை உண்டாக்கவே என்று நினைத்து அவர் மேல் ஒரு வன்மத்தை வளர்த்து வந்தார்.’ அவரைக் கொல்லும் வாய்ப்பை எதிர் நோக்கியிருந்தார்
அவர் மகள் மன்னனின் பிறந்த நாள் விழாவில எல்லோர் மனமும் மகிழும்படி நடனம் ஆட உனக்கு என்ன பரிசு வேண்டும் தருகிறேன் என்று மன்னன் சொல்கிறான்
தாயின் சொல்படி எனக்கு ஒரு தட்டில் ஜானின் தலை வேண்டும் என்று கேட்கிறார் மகள்
வேறு வழியில்லாமல் மன்னன் சிறையில் இருந்த ஜானின் தலையை வெட்டி ஒரு தட்டில் வைத்து தன் காதலி மகளுக்கு பரிசாக அளிக்கிறான் (மத14;3-12  மார்க் 6:17-29 லுக் 3:19-20)
(source: Towards understanding Quran  explanatory note to verse 19:15)

நேற்றைய வினாவுக்கு
John the Baptist
என்று சரியான விடை சொன்ன
மரு. சந்திர சேகர்
திரு சுதாகர்
 யஹ்யா நபி,  John the Baptist
என்று விடை சொன்ன
பர்வேஸ்
மூவருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம் 
   
30052020sat

sherfuddinp.blogspot.com

No comments:

Post a Comment