எல்லாம் அவன் செயல்
ஒரு சிறிய உரையாடல் (ஊரடங்குக்கு முன் என்று வைத்துக்கொள்வோம் )
திருமண அழைப்பு கொடுக்கவந்தவர்
“கண்டிப்பாக நீங்கள் குடும்பத்துடன் முதல் நாளே வந்து எல்லா
நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள வேண்டும்”
மற்றவர்
“இறைவன் நாடினால் வருகிறோம்”
முதலவர்
“அப்படி சொல்லக்கூடாது இது ஏதோ தட்டிக் கழிப்பது போல் இருக்கிறது
, கண்டிப்பாக வருகிறேன் என்று
சொல்லுங்கள் “
எந்த ஒரு செயலையும் நான் செய்வேன் என்று சொல்லாமல் இறைவன் நாடினால்
என்று சொல்ல வேண்டும் என்பது இறை கட்டளை
இதற்கான அரபு மொழி சொல் இன்
ஷா அல்லா
எனவே இன் ஷா அல்லா என்பது பெருமளவு பேச்சில் ஒலிப்பதைக் கேட்கலாம்
இன்னும் எந்த விஷயத்தைப் பற்றியும் "நிச்சயமாக நாம் நாளை
அதைச் செய்பவனாக இருக்கிறேன்" என்று நிச்சயமாக கூறாதீர்கள்.
"இன் ஷா அல்லாஹ் (அல்லாஹ்
நாடினால்" என்று சேர்த்துச் சொன்னால்) அன்றி தவிர, (இதை) நீர் மறந்து
விடுங்கள் உம் இறைவனை நினைவு படுத்திக் கொள்வீராக் இன்னும், "என்னுடைய இறைவன், நேர் வழியில் இதை விட
இன்னும் நெருங்கிய (விஷயத்)தை எனக்கு அறிவிக்கக்கூடும்" என்றும் கூறுவீராக! (குரான் 18:23, 24)
நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை இன் ஷா அல்லா என்று சொல்லாமல் “நான்
நாளை உங்களுக்கு பதில் சொல்கிறேன் “ என்று சொல்கிறார்கள்
இதற்காகவே இறைவன் நபி (ஸல்) அவர்களுக்கு மறை மொழியை இறக்காமல் பல
நாட்கள் சோதிக்கிறான்
இந்த செய்தி திருமறையின் எந்தப்பகுதியில் வருகிறது ?
இறைவன் நாடினால் மீண்டும் நாளை சிந்திப்போம்
01052020
sherfuddinp.blogspot.com
No comments:
Post a Comment