Tuesday, 19 May 2020

அழகின் வரலாறு




“மிக அழகான வரலாற்றை உமக்கு நாம் கூறுகிறோம்”
என்று ஏக இறைவன் நபி பெருமான் அவர்களிடம் சொல்லுவதாகத்  துவங்குகிறது திருமறையின் 12 ஆவது பகுதியான “”யூசுப்””

111 வசனங்கள் கொண்ட இந்தப் பகுதி நபி யூசுப் அலை அவர்களின்  வரலாற்றை அழகாக  முழுமையாகச் சொல்கிறது   

“மிக அழகானவர் என்று நபி பெருமானார் அவர்களால் புகழப்பட்டவர் யார்”
இதுதான் நேற்றைய வினா

அழகு மட்டுமல்ல உலகின் மிக கண்ணியாமானவர என்றும் போற்றப்பட்டவர்
அவர்தான் நபி யூசுப் அலை

 யாருக்கும் கிடைக்காத ஒரு சிறப்பு நபி யூசுப் அலைக்கு இறைவன் அருளியிருக்கிறான்
நான்கு தலை முறை நபி அவர்

நபி இப்ராகிம் அலை  மகன் நபி இஸ்ஹாக் அலை
அவர் மகன் நபி யாகூப் அலை அவர் மகன் நபி யூசுப் அலை

இஞ்சில் எனப்படும் பைபிளில் யூசுப் நபி ஜோசப் என்று அழைக்கப்படுகிறார்

Joseph S/O Jacob S/O Isaac S/O Ibrahim

----------இப்ராஹிமின் சந்ததியாரையும்------------இறைவன் அகிலத்தாரை விட மிக மேலாகத் தேர்ந்தெடுத்தான் (குரான் 3:33)

நபி பெருமான் தன் அருமை மனைவி கதீஜா பிராட்டியாரையும் நெருங்கிய உறவினராகவும் பாதுகாவலராகவும் இருந்த முத்தலிப் அவர்களையும் இழந்த துக்கத்தில் இருந்தபோது அவருக்கு ஆறுதல் கூற இறைவன் இறக்கி வைத்த இந்தப் பகுதிக்கு பல சிறப்புகள் உண்டு

-    ஒரே நேரத்தில் தொடர்ந்து முழுமையாக இறக்கபட்டது
-    -முழுமையாக ஒரு வரலாற்றை சொல்வது

இறைவனே அழகிய வரலாறு என்று சொன்ன இந்தப்பகுதி  பற்றி
அழகின் ஈர்ப்பு என்ற தலைப்பில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு (2018 செப்டம்பரில்) நான்கு பகுதிகளில் ஓரளவு விரிவாக எழுதியிருக்கிறேன்
இப்போது சில செய்திகளை மிகச் சுருக்கமாகப் அடுத்த பகுதியில்  பார்ப்போம் 

யூசுப் என்று  விடை சொன்ன
மெஹராஜ் அக்காவுக்கும்

Joseph என்று விடை சொன்ன
பேரன் பர்வேஸ் அஹமதுக்கும்

வாழ்த்துகள பாராட்டுகள்

தகவலுக்காக
18 சித்தர்களில் ஒருவரான ராம தேவ சித்தரும் நபி யூசுப் அலை அவர்களும் ஒருவரே என்று ஒரு கருத்து உலவுகிறது  

இறைவன் நாடினால் மீண்டும் நாளை சிந்திப்போம்

19052020tue

sherfuddinp.blogspot.com

No comments:

Post a Comment