Saturday, 21 January 2023

முத்திரை பதிப்போம் 11 சுவாச கோச (Bronchial) முத்திரை 12ஆஸ்த்மா முத்திரை

 




முத்திரை பதிப்போம்

11 சுவாச கோச (Bronchial) முத்திரை
12ஆஸ்த்மா முத்திரை
மூச்சுத் தடை எனும் ஆஸ்த்மாவிலிருந்து விடுபட
21012023
இரவில் அதிகமாகும் பகலில் குறையும்
காற்று மாசு இருந்தால் அதிகமாகும்
கடல் உணவுகள் உட்கொண்டால் அதிகமாகும்
முத்யோருக்கு அதிகமாக வரும்
பாலைத் தவிர்க்க வேண்டும்
வந்தால் போகாது
இப்படி பலதரப்பட்ட கருத்துகள் ஆஸ்த்மா பற்றி
இவையெல்லாம் உண்மையா என்பது பற்றி ஆராய்ச்சி செய்ய நான் முன் வரவில்லை
நான் படித்த அகு பஞ்சர் , யோகா போன்ற மருந்தில்லா மருத்துவங்களில் மிகவும் எளிமையானது முத்திரா
மருந்து மாத்திரை கிடையாது ,எனவே பெரிய அளவில் பக்க விளைவுகள் இல்லை
சிறப்பு உடை , விலை உயர்ந்த கருவிகள் , எதுவம் தேவை இல்லை எனவே பொருட்செலவும் இல்லை
செய்வது மிக எளிது
இந்த எளிமைதான் என்னை முத்திரை பற்றி சற்று வியாக்கமாக விரிவாக எழுத வைக்கிறது
இன்ற நாம் பார்க்கபோவது ஆஸ்த்மா நோயைக் குணப்படுத்தும்
Bronchial முத்திரை, அதன் பின் ஆஸ்த்மா முத்திரை பற்றி

Bronchial முத்திரை
நேரடியாக செய்முறைக்குப் போய் விடலாம்
இரு கைகளிலும்
பெரு விரலின் அடிப்பகுதியை தொடும்படி சுண்டு விரலை (Litle finger)வ வைக்க வேண்டும்
மோதிர விரல் பெரு விரலின் நடுப்பதியைத் தொட வேண்டும்
நடு விரல் , பெரு விரலின் நுனியைத் தொட வேண்டும்
ஆள் காட்டி விரல் நீட்டிய நிலையில் இருக்க வேண்டும்
தெளிவுக்காக மீண்டும்
பெரு விரலின் 3 பகுதிகளில்
சுண்டு விரலின் நுனி பெருவிரலின் அடிப்பகுதியில்
மோதிரவிரல் நுனி பெருவிரலின் நடுப்பகுதியில்
நடு விரல் நுனி பெருவிரலின் உச்சியில்
தொடவேண்டும்
மீதமுள்ள ஆட்காட்டி விரல் முழுமையாகமேல் நோக்கி நீட்டி இருக்க வேண்டும்
உள்ளங்கை, ஆட்காட்டி விரல்
மேல்( வானத்தை ) நோக்கி இருக்க வேண்டும்
இரண்டு கைகளிலும் செய்ய வேண்டும்
எவ்வளவு நேரம் , எத்தனை தடவை ?
தினமும் ஐந்தாறு முறை செய்யலாம்
ஒவ்வொரு முறையும் 5 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்
மூச்சுத் திணறல் , இருமல் அதிகமாக இருந்தால் சரியாகும் வரை செய்யலாம்
முடிந்தவர்கள் தெரிந்தவர்கள் பத்மாசனத்தில் உட்காரலாம்
மற்றவர்களுக்கு சுகாசனம்(சம்மணம் கூட்டி உட்காருவது )
அதுவும் முடியாது என்றால் நாற்காலி , சோபாவில் அமர்ந்து செய்யலாம்
கால்கள் தரையில் ஊன்றி இருந்தால் நல்லது
மிகவும் முடியாமல் இருந்தால் படுத்தபடி செய்யலாம்
இந்த முத்திரையோடு சேர்த்து
ஆஸ்த்மா முத்திரையும் செய்தால் நோயின் தீவிர நிலையில் இருப்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்
ஆஸ்த்மா முத்திரை
செய்முறை
இரு கை நடு விரல்களின் நகங்கள் ஒன்றை ஓன்று தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும்
மற்ற விரல்கள் நீட்டிகொண்டிருக்க வேண்டும்
அவ்வளவுதான்
தினமும் 4, 5 முறை ஐந்தைந்து முறை செய்யலாம்
மேலே சொன்ன bronchial முத்திரையை செய்து விட்டுத் தொடர்ந்து இந்த ஆஸ்த்மா முத்திரை செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று சொல்கிரர்கள்
ஆஸ்த்மா , இருமல் உள்ளவர்களுக்கு சில குறிப்புகள்
தொடர்ந்து சுவாசம் முழுமையாக இல்லாதபோது உடலின் வலிமை மிகவும் குறையும்
அப்படிக் குறைவதால் ஒரு தாழ்வு மனப்பான்மை வரலாம்
அதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்
மேலே சொன்ன இரண்டு முத்திரைகளோடு
( முறையாகப் பயின்று )
சில மூச்சுப் பயிற்சிகள் , ஆசனங்கள், தியானம் தொடர்ந்து செய்யும்போது உடல் வலிமை கூடி தாழ்வு மனப்பான்மை நீங்கி விடும்
வாயினால் சுவாசிப்பதை தவிர்க்க வேண்டும்
எதிலும் அவசரப்பட்டு நிதானம் இழப்பது நோயின் தீவிரத்தை அதிகப்படுத்தும்
தேவையான அளவு உணவு உட்கொள்ள வேண்டும்
வாரம் ஓரிரு முறை அசைவம் சேர்த்துக் கொள்ளலாம்
பால் பொருட்கள் , தக்காளி , மிளகு ,--தவிர்த்தல் நலம்
புகைப்பது கூடாது
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் antibiotic
போன்ற மருந்துகளை தவிர்க்க வேண்டும்
திறந்த வெளியில் நீண்ட நடைப்பயிற்சி , உடல் பயிற்சிகள் , நல்ல ஒய்வு அவசியம்
நிறைவு செய்யுமுன்
உங்கள் உடம்பு பற்றி உங்களுக்கு தெரிந்த அளவுக்கு வேறு யாருக்கும் தெரியாது
எனவே உங்கள் உடல் மொழியைக் கேட்டு உணவு ,மருந்து இவற்றை எடுத்து தக்கொள்ளலாம்
எச்சரிக்கை
எச்சரிக்கை
Mudraas don’t replace your regular medicines and treatment
They just supplement it
தகுந்த மருத்துவ ஆலாசனை பெறாமல் மருந்து , மருத்துவத்தை நிறுத்த வேண்டாம்
நிறுத்தக் கூடாது
இவ்வளவு செலவழித்து மருத்துவம் பார்க்கிறோம் நீண்ட காலமாக மருந்து மாத்திரை சாப்பிடுகிறோம்
இதில்லெல்லாம் தீராதது இந்த கை வைத்தியதால் தீருமா
என்ற எண்ணம் தோன்றுவது இயற்கை
சிரமம் பொருட்செலவு எதுவும் இல்லாத இதை செய்துதான் பார்ப்போமே
நம்பிக்கைதானே வாழ்க்கை
இறைவன்நாடினால் நாளை மீண்டும் சிந்திப்போம்
21012021 சனிக்கிழமை
சர்புதீன் பீ
Like
Comment
Share

No comments:

Post a Comment