தமிழ் (மொழி )அறிவோம்
பேடு
010220233
பண்டைத் தமிழில் மூன்றாம் பாலினத்தைக் குறிக்கும் ஒரு சொல் இருக்கிறது
மிக எளிதான வினா , பலரும் அறிந்த விடைதான் நான் நினைத்தது
“பேடு “
பாடல் ஔவையாரின்
அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிதரிது மானிடர் ஆதல் அரிது
மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல் அரிது
தானமும் தவமும் தான்செய்வ ராயின்
வானவர் நாடு வழிதிறந் திடுமே
எளிய சொற்கள் ஆழமான கருத்துக்கள் இது பற்றி பின்பு பெருநாள் விளக்கமாகப் பார்ப்போம் இறைவன் நாடினால்
வந்த விடைகள் பலபல பெரும்பாலும் சரியான விடைகள
விடை வந்த நேரத்தின் அடிப்படையில்
சகோ
பாடி பீர்
முதல் சரியான விடைக்கான வாழ்த்து பாராட்டைப் பெறுகிறார்
அடுத்தடுத்து சரியான விடை அனுப்பிய சகோ
ரவிராஜ்
தல்லத்
சிராஜுதீன்
ஹசன் அலி
ஹிதயத்
கணேச சுப்பிரமணியம்
அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுகள்
முயற்சித்த் சகோ
கீதா , ராஜாத்தி இருவருக்க்கும் நன்றி
விடைகளில் இடம் பெற்ற நூல்களில் சில
குறள், நிகண்டுகள் தொல்காப்பியம் ,முதுமொழிக்காஞ்சி
சிலப்பதிகாரம் ,மகா பாரதம் , மணிமேகலை அக நானூறு ------என்று நீண்டுகொண்டே போகிறது பட்டியல்
நூல்களே இத்தனை என்றால் சொற்கள் !
பேடி, பேடு , இடமி ,கிலிபம் ,சண்டகம் ---------------
நூற்றுக்குமேல் வரும்
ஒரு அதிகம் பயன்பாட்டில் இல்லாத ஒன்றுக்கு எத்தனை சொற்கள் ,!
வெறும் சொற்கள் அல்ல
ஒவ்வொரு சொல்லுக்கும் இடையில் நுண்ணிய வேறுபாடு—
உடல் அமைப்பின், செயல்களின் ,குண நலன்களின் அடிப்படையில்
ஆழ்ந்து படித்தால் ஒவ்வொரு இலக்கியமும் ஒரு அறிவியல் பெட்டகம் போல் இருக்கிறது
இப்படி எண்ண ஓட்டம் நீண்டு கொண்டே போகிறது
இந்த வயதில் அறிவைப் புதுப்பித்துக்கொள்ள எனக்கு வாய்ப்பு கொடுத்த இறைவனை நன்றியுடன் நினைக்காமல் இருக்க முடியவில்லை
அந்த இறைவன் அருளால் அடுத்த பதிவில் சிந்திப்போம்
௦௧௦௨௨௦௨௩
01022023 புதன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment