Thursday, 26 January 2023

திருமறை குர்ஆன் சூராஹ் 26 நபி இப்ராஹீ ம் தன தன் தந்தைக்கு பாவ மன்னிப்பு கேட்டது

 திருமறை குர்ஆன்

நபி இப்ராஹீ ம் தன தன் தந்தைக்கு பாவ மன்னிப்பு கேட்டது
27012023
தவறான கோரிக்கை ஒன்றை நபி இப்ராஹீம் இறைவனிடம் வைத்தது பற்றி குரானில் எங்கு வருகிறது?
விடை விளக்கம்
வினா சிறிதுதான்
ஆனால் விடை சில வசனங்களின் தொகுப்பாக வரும்
எனவே கொஞ்சம் பெரிதாக இருக்கும்
இறைவனே தோழனாக ஏற்றுக்கொண்ட மாமனிதர் இப்ராகிம் நபி பற்றி பல இடங்களில் திருமறையில் வருகிறது
விடையாக வரும் வசனங்களைப் பார்க்குமுன் ஒரு விளக்கம்
வினாவில் தவறு என்று குறிப்பிட்டது
நபி இப்ராகிமின் தந்தைக்காக அவர் இறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்டது
ஏக இறை நம்பிக்கை கொள்ள மறுத்த ஒருவருக்கு,
--அவர் தந்தையாக இருந்தாலும் -- பாவ மன்னிப்பு கேட்டது தவறு என்பதை உணர்ந்த இப்ராகிம் நபி
இறைவனிடம் தன் இந்தத் தவறை மன்னிக்க வேண்டுகிறார்
இப்போது வசனங்களுக்குப் போனால் ஓரளவு தெளிவாகும்
வழி தவறிச் சென்ற என் தந்தையை மன்னிப்பாயாக
--சுராஹ் அஷ் ஷுரா(26 86)
“--------------------------------------இறைவன் முன் தூய , உறுதியான உள்ளத்துடன் வருவோருக்கு மட்டுமே பாவ மீட்சி கிடைக்கும்
(26:87-89)
“--------இறைவா என் பெற்றோரின் பாவங்களை மன்னிப்பாயாக -------“
சுராஹ் இப்ராகிம் (14:41)
(இந்த வேண்டுகோள் தவறானது என்று உணர்ந்து இறைவனிடம் நபி மன்னிப்புக் கேட்டார்)
தந்தையின் கொடுமையை பொறுக்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேறுகிறார் இப்ராகிம் நபி
அப்போது
:----------என்னிடம் மிக அன்பு காட்டும் என் இறைவனிடம் உங்களை மன்னிக்கும்ம்படி வேண்டுவேன் –
சுராஹ் மரியம் (19:47)
என்று சொல்கிறார்
“இந்த சொல்லைக் காப்பாற்றவே இறைவனிடம் தன் தந்தைக்க பாவ மன்னிப்புக் கேட்டார் இப்ராகிம் ‘
பின்னர் தந்தை ஏக இறைக்கு எதிரி என்று தெளிவானதும் அதிலிருந்த விலகிக்கொண்டார்
----இப்ரஹீம் மிக மென்மையான உள்ளம் கொண்டவர் ,இறை அச்சம், சகிப்புத் தன்மை உடையவர்”
சுராஹ் அத்தவ்பா (9:114)
எனக்குப் புரிந்த விளக்கத்தை சொல்லி விட்டேன்
பிழையிருந்தால் இறைவன் மன்னிப்பான்
மேலே சொன்ன வசனங்கள எல்லாம் சரியான விடைதான்
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர் :
சிறப்புப் பாராட்டு முதல் சரியான விடை அனுப்பிய சகோ
ரவிராஜுக்கு
அடுத்து
சகோ
தல்லத் , ஹசன் அலி
முய்ற்சித்த சகோ
ஷிரீன் பாருக் , சிராஜுதீன் இருவருக்கும் நன்றி
இறைவன் நாடினால் அடுத்த பதிவில் சிந்திப்போம்
04 ரஜப் (7)1444
27 01 2023வெள்ளி
சர்புதீன் பீ
May be an image of text
Like
Comment
Share

No comments:

Post a Comment