தமிழ்( மொழி )அறிவோம்
பெட்டகம் - வைப்புழி
17012023
இதே பொருளில் இன்னொரு பண்டை இலக்கியத் தமிழ் சொல் இருக்கிறது
வ் வரிசை நெடிலில் துவங்கும் அந்த நான்கு எழுத்துச் சொல் என்ன ?
இறைவன் நாடினால் விடை விளக்கத்துடன்
இன்று மாலை/இரவில் சிந்திப்போம்
விடை
வைப்புழி(
. வைப்புழிக் கோட்படா, வாய்த்தீயின் கேடில்லை
நாலடியார் பாடல் 134
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி குறள் 226
வறியவரின் கடும்பசியைத் தீர்க்கவேண்டும்; அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப்பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.
வைப் புழி= சேர்த்து பாதுகாத்து வைக்கும் இடமாகும்
“ நீங்கள் செய்யும் துர்மமே உங்கள் சேமிப்பு
தருமத்தில் சிறந்தது பசித்தவனுக்கு உணவளிப்பது “
என திருமறை குரானில் வலியுறுத்தி சொல்லப்படுகிறது
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஷிரீன் பாரூக்
முதல் சரியான் விடை
கீதா
முயற்சித்த சகோ குமாரசாமி , ராஜேந்திரன் இருவருக்கும் நன்றி
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
௧௭ ௦௧ ௨௦௨௩
17012023 செவ்வாய்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment