மற்றுமொரு புதிய பகுதி etc
குரான் , தமிழ், ஆங்கிலம் உடல் நலம் போன்ற தலைப்புகளில் அடங்காத பல செய்திகள் தகவல்களை இதில் சேர்க்கலாம்
எனவே எல்லோரும் தயக்கமின்றி எதையும் எழுதி அனுப்பலாம்
துவக்கமாக நான் கண்ட செய்திகள் கேள்விப்பட்ட சில (கதைகள்) உங்கள் பார்வைக்கு
“ ஆசிரியை பணி (இடை )நீக்கம்
27 ஆண்டுகள் பணியாற்றியவர் “
காரணம் பொய்யான படிப்புச் சான்றிதழ்
பணி நிறைவு பெற்று ஓய்வூதியம் பெற்று வந்த நீதிமன்ற நடுவருக்கு Bar Council “ பதிவு மறுப்பு
காரணம் மீண்டும்” பொய்யான படிப்புச் சான்றிதழ்”
பேராசை பெரிய இழப்பு
ஒரு கோவில் பூசாரி
ஒரு மாடு வெட்டும் தொழிலாளி
இருவரும் ஒரே நேரத்தில் மரணித்து இறைவன் முன்னே கொண்டு வந்து நிறுத்தப்பட்டு
ஒருவருக்கு சொர்க்கம் ,ஒருவருக்கு நரகம்
நம் எண்ணத்துக்கு மாறாக
கோவில் பூசாரிக்கு நரகம்
ஒரே கோபம் அவருக்கு ஆத்திரத்தில் இறைவனிடம் கேட்கிறார்
“இது என்ன நீதி ? நாள் முழுதும் உன்னை வணங்கும் எனக்கு நரகம்
அதைவிடக் கொடுமை பாவத் தொழில் செய்பவனுக்கு சொர்க்கம்
இறைவன் அமைதியாக சொல்கிறான்
“ தொழிலில் பாவம் , புண்ணியம் என்ன ?
சமுதாயக் கட்டமைப்பில் அவருக்கு விதிக்கப்பட்ட தொழில்
மாடு வெட்டுவது
அது பாவமா புண்ணியமா , நல்லதா இல்லையா என்று சிந்திக்கும் சக்தி , வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை கட்டளைக்குக் கீழ்ப்படிதல் என்பது அவர் வாழ்க்கை முறை
ஆனால் அந்தத் தொழிலையும் அவர் முடிந்த , தெரிந்த அளவுக்கு செம்மையாகச் செய்தார்
பயன்படுத்தும் கோடரியை கூர்மையாகத் தீட்டி விடுவார்
இதனால் வலி ,குறைவாக இருக்கும்
கோடரியை வலதுபக்கம் , இடது பக்கம் என்று மாற்றி சாய்த்துப் பயான்படுத்துவார்
எனவே தேய்மானம் சீராக இருக்கும் .இதுவும் வலியைக் குறைக்கும்
எனவே செய்யும் தொழிலில் செம்மை காட்டிய அவருக்கு சொர்க்கம்
ஆனால் கோயிலிலேயே குடியிருக்கும் நீ ?
உன் கண்கள் ஒரு பக்கம் பெண்கள் மீது
மறுபக்கும் தட்டில் வைக்கப்போகும் பணத்தின் மேல்
மனமோ காரில் வரும் பணக்கார பக்தர்களை தேடுகிறது
உன் வாய் மட்டும் பதிவு செயபட்ட ஒலி போல மந்திரங்களை
முனுமுனுக்கிறது , கை மணியை அடிக்கிறது
இதில் எங்கே இறைபக்தி இருக்கிறது ?
இன்னும் ஒரு கதை சொல்ல ஆவல்
அனால் நீளம் அதிக மாகிவிட்டது
இன்றைய பாசுதியின் நிறைவாக இன்னொரு செய்தி
“நம்ம தமிழ் நாட்டில் எதையுமே முறையாகத்தான்............ “
என்று ஒரு விளம்பரம்
அதை உண்மையாக்கும் ஒரு செய்தி
“மதுக்கடைக்கு வழி வரைபடம் போட்டு வாட்சப்பில் விளம்பரம் “
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
25012023புதன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment